உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாறுமாறாக உயரும் தங்கம் விலை; ஒவ்வொரு நாளும் புதிய உச்சம்!

தாறுமாறாக உயரும் தங்கம் விலை; ஒவ்வொரு நாளும் புதிய உச்சம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; சென்னையில் வரலாறு காணாத உச்சமாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ59,520 ஆக உயர்ந்திருக்கிறது.இந்த மாதத்தின் தொடக்கத்தில் ரூ. 56,400 ஆக ஒரு சவரன், ஆபரணத்தங்கத்தின் விலை இருந்தது. அதன் பின்னர் குறிப்பிட்ட இடைவேளையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. மாறி, மாறி தங்கத்தின் விலை காணப்பட்டதால் நகை பிரியர்கள் வெகுவாக அதிர்ச்சி அடைந்தனர்.இந் நிலையில், பெண்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில், தங்கத்தின் விலை இன்று வரலாறு காணாத உச்சத்துக்குச் சென்றுள்ளது. ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை ஒரு சவரன் 520 ரூபாய் உயர்ந்து ரூ. 59,520 விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.65 அதிகரித்து, ரூ.7,440 ஆக உள்ளது. இன்றுடன் சேர்த்து மொத்தம் 7 நாட்கள்(அக்.24 முதல் அக்.30) ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை நிலவரம் கீழே தரப்பட்டு உள்ளது; அக்.24 - ரூ.58,280 அக்.25 - ரூ.58,360 அக்.26 - ரூ. 58,880 அக்.27 - ரூ. 58,880 அக்.28 - ரூ. 58,520 அக்.29 - ரூ.59,000அக்.30(இன்று) - ரூ. 59,520 இந்த மாதத்தில் ஒரே சீராக விலை உயர்ந்து காணப்பட்ட தங்கம் இன்றைய விலையின் மூலம் புதிய உச்சம் தொட்டு, ஒரு சவரன் ரூ.60,000 நோக்கி நகர்ந்திருப்பது, நகை வாங்குவோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து வரக்கூடிய நாட்களில் மேலும் தங்கத்தின் விலை உயரும் வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

skv srinivasankrishnaveni
நவ 01, 2024 18:21

சாமானியன் தாலிக்கும் கூட GOLD வாங்கவே திண்டாட்டம் தான் நிலவுது, கோடிகளில் கருப்புபணம் வருச்சிக்கிறவங்க தான் வாங்கி குவிக்குறாங்க. வெறும் மஞ்சள் நூலிலே கருக்குமணி,பவளம்னு கோத்ததுண்டு தான் பலரும் போறாங்க. வாங்கறவங்க எல்லாம் 1.கறுப்புப்பணம் குவிச்சவங்க 2 .சினிமாகாரர்கள்.3 அரசியல்வியாதிகள்


Narayanan
அக் 30, 2024 13:06

அக்காலத்தில் ஒருகடைதான் ஒரு நகை வியாபாரி வைத்திருப்பார் . ஆனால் இப்போ பலகடைகள் ஒருவரே வைத்திருக்கிறார். தங்கத்தை விலை ஏற்றி விற்று விற்று முதலீடு செய்கிறார். மக்களே தங்கத்தின் மேல் இருக்கும் பற்றை விடுங்கள். இப்போ உயிர்க்கும் ஆபத்து வந்திருக்கு. நகை அணிந்து வெளியில் சுற்றாதீர்கள் பெண்களே .


R S BALA
அக் 30, 2024 11:53

இரண்டு வருடங்களில் ஒரு லட்சத்தை தொடும் இந்த தங்கம் விலை..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை