வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அப்படியா?
ஒரு கப்பலை சரிபண்ண ஒரு வருசமா ? சீக்கிரம் சரிபண்ணுங்கப்பா .... ஒரு ஆயிரம் கண்டைனர் லாரி ...ரோட்டில் குறைந்தால் சந்தோசம் ...
வாயால் வடை சுட ஸ்டாலின். ஒழுங்கா வேலை நடக்க மோடி
சென்னை: 'சென்னை - புதுச்சேரி சரக்கு கப்பலில் ஏற்பட்ட சேதம் மற்றும் தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணி நடப்பதால், ஜனவரியில் மீண்டும் இயக்கப்படும்' என, சென்னை துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் வாயிலாக, கடல்சார் துறையை மேம்படுத்தும் வகையில், பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு, சிறிய வகை சரக்கு கப்பல் சேவை, கடந்த ஆண்டு பிப்ரவரி, 27ல் துவங்கப்பட்டது. இந்த சிறிய ரக கப்பல், ஒரே நேரத்தில், 106 கன்டெய்னர்களை கொண்டு செல்லும் திறன் உடையது. வாரத்தில் இரு நாட்கள் சென்னை - புதுச்சேரி இடையே இயக்கப்பட்டு வந்தது. சேவை துவங்கிய சில மாதங்களில், கப்பலில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு, சில பாகங்கள் சேதமடைந்தன. அதனால், கப்பல் சேவை ஒரு ஆண்டுக்கும் மேலாக முடங்கியது. இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறுகையில், 'புதுச்சேரியில் நிறுத்தப்பட்டுள்ள இந்த சரக்கு கப்பலில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் பணியை, சம்பந்தப்பட்ட நிறுவனம் வேகமாக செய்து வருகிறது. வரும் ஜன., மாதத்தில், இந்த கப்பல் சேவை மீண்டும் துவக்கப்படும்' என்றனர்.
அப்படியா?
ஒரு கப்பலை சரிபண்ண ஒரு வருசமா ? சீக்கிரம் சரிபண்ணுங்கப்பா .... ஒரு ஆயிரம் கண்டைனர் லாரி ...ரோட்டில் குறைந்தால் சந்தோசம் ...
வாயால் வடை சுட ஸ்டாலின். ஒழுங்கா வேலை நடக்க மோடி