உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கையில் ஈரம், செல்போனுக்கு சார்ஜ்: பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி பலி

கையில் ஈரம், செல்போனுக்கு சார்ஜ்: பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி பலி

சென்னை: சென்னையில் ஈரம் தோய்ந்த கையுடன் செல்போனுக்கு சார்ஜ் போட்ட பள்ளி மாணவி மின்சாரம் தாக்கி பலியானார்.இதுபற்றிய விவரம் வருமாறு; எர்ணாவூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் முகுந்தன். இவரின் மூத்த மகள் அனிதா(14) எண்ணூர் கத்திவாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இந் நிலையில் சம்பவத்தன்று ஈரம்தோய்ந்த கையுடன், செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்க, கீழே மயங்கி விழுந்தார்.உடனடியாக அவர் அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர். தகவலறிந்த போலீசார், உயிரிழந்த அனிதாவின் உடலை கைப்பற்றினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வாய்மையே வெல்லும்
மார் 23, 2025 22:05

எங்கும் அவசரம் எதிலும் அவசரம்.எந்த பொருளை எப்படி பிரயோகப்படுத்த வேண்டும் என தனக்கும் தெரியவில்லை,பெற்றோர்களும் சொல்லி கொடுப்பதில்லை .. பின்பு பலி தான் மிச்சம் . ஓம் சாந்தி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை