உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையில் விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் விஜய் வீட்டுக்கு 2வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகரில் தவெக தலைவர் விஜய் வீடு அமைந்துள்ளது. அவருக்கு மத்திய அரசு, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் விஜய் வீட்டிற்குள், மன நலம் பாதித்த நபர் ஒருவர் நுழைந்தார். இதனால், ஒய் பிரிவு பாதுகாப்பில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நொய்டாவில் இருந்து வந்த சிஆர்பிஎப் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o7p217a3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த நிலையில், விஜய் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார். அதனடிப்படையில், விடிய விடிய வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். முடிவில், அது புரளி என தெரிய வந்தது. ஏற்கனவே கடந்த செப்.,28ம் தேதி விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், 2வது முறையாக மிரட்டல் வந்துள்ளது. கரூரில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தால் விஜய் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல்கள் தவெகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கைது

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்து வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த சபீக் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

என்றும் இந்தியன்
அக் 09, 2025 17:06

இதெல்லாம் விஜையை காப்பாற்ற செய்யும் வெடிகுண்டு மிரட்டல் சதி


Balasubramanian
அக் 09, 2025 15:55

அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் - இவர் அரசியல் பிழைக்க வர விழைந்தது மக்களுக்கு அல்லவா கூற்றாக முடிந்தது! தேரா மன்னா என்று மக்கள் கேட்கிறார்கள்! இவர் பதில் என்ன? இன்னமும் அவருக்கே புரியவில்லை


M Ramachandran
அக் 09, 2025 13:06

ஏதோ கையை காலை ஆட்டி கட்டி பிடித்து வீரமா திரையை வசனம் பேசி சொஊப்பர் டூப்பர் ஸ்டார் பாடம் பெற்று பால்கனி பாவையரூரடன் பால்கனியில் உட்கார்ந்து பொழுது போலாக்கி காலம் தள்ளாமல் யாரோ ஆத்திரம் தாங்காமல் உசுப்பு விட இன்று யம்மா அம்மா தூக்கம் போச்சுதே இன்று எதற்கு அவஸ்தை. முன்னோடி ஒருவர் வீரமா வந்து வந்த வேகத்தில் மலையயேறி யப்பா இது வெல்லாம் அனாவசிய தலை வலி நமக்கு சரிப்படாது என்று ஓடிவிட்டார்.இப்போ வருடம் தவறாமல் 300 ரூ 500 கோடிகளில் மழை.


திகழ்ஓவியன்
அக் 09, 2025 13:05

பாவம் நேற்று வரை அஜித் விசாரணை CBI ஏன் மாற்றினீர்கள் என்று கொக்கரைத்த ஜோசப் இன்று கான்ஸபிரசி இருக்கு ஆகவே CBI விசாரணை தேவை என்று முரணா வேண்டுகிறார் , இவர் உண்டெஸ்ட் BULB ரிசல்ட் வந்தால் தான் TUBELIGHT MERCURYLIGHT LEDLIGHT அல்லது ZERO வாட் பல்பு என்று தெரியும் அதற்குள் இவ்வளவு களேபரம் வீட்டிற்குள் இவரை முடக்கிய ஸ்டாலின் UNGLE


Rajah
அக் 09, 2025 12:54

ஜோசப் விஜய். இந்த பெயரில் என்ன குறை இருக்கிறது? அப்பாவு, ராகுல் காந்தி இன்னும் பலர் கிறிஸ்தவர்கள்தானே. துணை முதல்வரே நான் ஒரு கிறிஸ்தவன் என்று கூறியிருக்கின்றார். அவர்களின் ஞானஸ்நான பெயர்களை கேட்டறிந்து அவர்களின் பெயருக்கு முன்னாள் போட்டால் பிரச்னை தீர்ந்து விடும். விஜய்யின் தாயார் கிறிஸ்தவர். அதேபோல் ராகுல் காந்தியின் தாயாரும் கிறிஸ்த்தவர். ராஹுல் காந்தியின் தாயார் கிறிஸ்த்தவர் என்பதற்காக எதிர்க்க கட்சி தலைவராக இருப்பதற்கு தகுதி அற்றவரா? அதேபோல் அப்பாவும் சபாநாயகராக இருப்பதற்கு தகுதி அற்றவரா?


தமிழ்வேள்
அக் 09, 2025 20:33

எந்த மதமாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் ஹிந்து ஜனங்களை கேவலப்படுத்தி வழிபாட்டு முறைகளை ஹிந்து பெண்களை கேவலப்படுத்தி தனது மத விசுவாசம் நிரூபிக்க எந்த விதமான தேவையும் இந்த மண்ணில் கிடையாது.. கேவலம் செய்தால் எதிர்வினை நிச்சயம் வரும்.. குனிந்து குட்டு வாங்கிய காலம் மலையேறி விட்டது...


M Ramachandran
அக் 09, 2025 12:41

முடிந்த கையில் மடக்கி மூக்கணாம் கயிறு மாட்ட பிரயத்தனம் நடக்குது. மட்டுமா பார்ப்போம். மத்திய அரசும் அண்ணாமலையும் சும்மா பீலா ஊட்டுகிட்டு திரியரங்கா. சில சமயம் அரசியலில் இந்த உருட்டல மிரட்டல் எல்லாம் சகஜம் தான் போல் தெரிகிறது.


Rajah
அக் 09, 2025 12:33

விஜய் நடிகர் என்றால் நடிகர் உதயநிதி ? நடிகனாக இருந்து குறுகிய காலத்தில் துணை முதல்வர் ஆனவர் என்பதை பலர் குறிப்பிட மறுப்பதன் காரணம் என்னவோ?


ராமகிருஷ்ணன்
அக் 09, 2025 12:20

டிவிக்க கட்சியை பில்டப் பண்ண இந்த புரளியை கிளப்பி இருக்கலாம். அல்லது திமுகவின் 200 ரூபாய் ஊபிஸ் செய்து இருக்கலாம். எதுவாக இருந்தாலும் லாபம் பி ஜே பி க்கு போகும்.


SRI
அக் 09, 2025 11:55

நீங்க 100 முறை வெடிகுண்டு மிரட்டல் புரளி கிளப்புனாலும் அவன் வீட்டை விட்டு வெளிய வர மாட்டான். ..இவன்கிட்ட காச வாங்கிட்டு இவனுக்கு ஜால்ரா தட்ட ஒரு திருட்டு ஊடக கும்பல் .. ஊடகங்கள் தான் இந்தியாவின் சாபக்கேடு.


Chandru
அக் 09, 2025 13:18

பணம் வாங்கிட்டு ஜால்ரா தட்டும் கும்பல் இருப்பது தமிழ் நாட்டின் சாபக்கேடு


Rajah
அக் 09, 2025 13:58

வெடிகுண்டு மிரட்டல் வீடுத்தவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார் . அவரது பெயர் முஹம்மத்.


Rajah
அக் 09, 2025 14:03

நீங்கள் நடிகர் உதயநிதியின் ரசிகர் என்று அறிய முடிகின்றது.


Rajah
அக் 09, 2025 14:08

அதனால்தான் அன்மையில் ஒரு ஊடகத் துறை முடக்கப்பட்டிருக்கின்றதோ?


V Venkatachalam
அக் 09, 2025 11:42

பொது மக்களுக்கு எச்சரிக்கை. நாங்க ஆஃப் ஆயிட்டோம்ன்னு நினைக்க கூடாது. விஜய் வீட்டுல 22 புலீஸ் பாதுகாப்பு இருக்கும்போது எப்புடி வெடிகுண்டு வைக்கமுடியும்.? ரிமோட்டில் வெடிகுண்டு வைக்கமுடியுமா? வெடிக்க வைக்கத்தானே முடியும்? அப்போ இது டுபாக்கூர் மிரட்டல் தானே? போன தடவை வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவன் யாருன்னு ஸ்காட்லாந்து புலீஸ் அறிக்கை காணமல் போயிடுத்து.


புதிய வீடியோ