உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிர் உரிமை தொகை கள ஆய்வு: விரைவாக முடிக்க முதல்வர் உத்தரவு

மகளிர் உரிமை தொகை கள ஆய்வு: விரைவாக முடிக்க முதல்வர் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான கள ஆய்வை விரைந்து முடிக்க, அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து, சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தலைமைச் செயலர் முருகானந்தம், முதல்வரின் முகவரி துறை சிறப்பு அலுவலர் அமுதா, நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் மற்றும் அரசு துறைகளின் செயலர்கள் பங்கேற்றனர். அறிவுரை அப்போது, இத்திட்டத்தின் கீழ், துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள், அவற்றின் மீதான தீர்வு, நிலுவை விபரங்கள் குறித்து அலுவலர்களிடம், முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். 'பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, உரிய கால கட்டத்திற்குள் தீர்வு காணப்படுவதை கண்காணிக்க வேண்டும்' என, துறை செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். இதுவரை நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில், அரசின் 15 துறைகளில் பட்டியலிடப்பட்ட, 46 சேவைகளில், 14 லட்சத்து, 54,517 மனுக்கள் வந்துள்ளன. அதில், 7 லட்சத்து, 23,482 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தீர்வு செய்யப்பட்ட மனுக் களில், 83 சதவீதம் அதாவது 5 லட்சத்து, 97,534 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக, முதல்வரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காண வேண்டும். குறிப்பாக, வருவாய், கூட்டுறவு, ஆதிதிராவிடர் நலம், மின்சாரம், ஊரக வளர்ச்சி போன்ற முக்கிய துறைகளின் மனுக்கள் மீது, அதிக கவனம் செலுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகத் துறையில் சொத்து வரி, குடிநீர் தொடர்பான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு தேவை களான இடுபொருட்கள், விவசாய இயந்திரங்கள் தொடர்பான மனுக்களின் மீது, அதிக கவனம் செலுத்த வேண்டும். ரேஷன் கார்டுகளில் முகவரி மாற்றம், பட்டா சம்பந்தமான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பான, கள ஆய்வுகளை விரைந்து முடிக்க வேண்டும். முகாம்கள் நடந்தபோது, மக்கள் தெரிவித்த கருத்துகளை கவனத்தில் கொள்ள வேண்டும். நடவடிக்கை தெருவிளக்கு. இணைப்பு சாலை, குடிநீர் போன்ற சமுதாய கோரிக்கைகள் தொடர்பான மனுக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைத்து மனுக்கள் மீதும் விடுதலின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, அனைத்து அரசு துறைச் செயலர்கள், கலெக்டர்களுடன், தலைமைச் செயலர் தொடர்ச்சியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, பணிகளை ஒருங்கிணைத்து, மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ராமகிருஷ்ணன்
செப் 14, 2025 14:40

டீவிக்க கட்சி, பி ஜே பி, அதிமுக கூட்டணியால் குறையும் ஓட்டுகளை இந்த சட்ட ரீதியாக லஞ்சம் கொடுத்து வாங்க உள்ள மகளீர் ஓட்டுகளால் தான் காப்பாற்ற வேண்டும். ஒன்றிரண்டு மாதம் கொடுத்தாலே அதிகம் தான்.


Sivaram
செப் 14, 2025 13:28

கள ஆய்வு செய்ய 54 மாதங்கள் ஆகுமா அப்பா, உடன்பிறப்பே நீ கேள்வி கேட்க மாட்டாயா.


S.L.Narasimman
செப் 14, 2025 07:30

நீ என்ன ஆய்வும் தலைகீழ செய்தாலும் ராசபக்சேகுடும்பத்தை விரட்டிய மாதிரி தமிழக மக்கள் விடியல் குடும்பத்தை துரத்த முடிவு எடுத்து விட்டார்கள்.


என்னத்த சொல்ல
செப் 14, 2025 10:00

அப்படியா.... விடுச்சிருச்சு எழுந்திரீங்க..


Nathan
செப் 14, 2025 07:19

உங்கள் அப்பாவை போல் நீயும் நல்லா நடிக்கிற உங்கள் நாடகம் எவ்வளவு நாட்கள் தான் அரங்கேறும் என்று பார்ப்போம்


Kjp
செப் 14, 2025 07:04

என்னத்த விரைவாக முடிக்க நிதிஇல்லை நிதிஇல்லை என்று சொல்கிறார்கள்.. வரும் ஜனவரியில் தான் கொடுப்பார்கள். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கணும்ல.


நிக்கோல்தாம்சன்
செப் 14, 2025 05:32

லஞ்சம் தவிர் என்று தமிழர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்


Mani . V
செப் 14, 2025 05:24

மக்களின் வரிப்பணத்தில் தண்டச் சம்பளம் வாங்கும் தேர்தல் ஆணையம், நாலரை வருடம் மக்களுக்கு எதிரான செயல்களை மட்டுமே செய்த மக்கள் விரோத அரசு, தேர்தல் நெருங்கும் வேளையில் இது போன்ற மொள்ளமாரித்தனங்களை செய்ய அனுமதிப்பது எந்த வகையில் சிறந்தது? இந்த கொள்ளையர் திரும்ப ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டங்களை தேர்தலுக்குப்பின் தொடர மாட்டார்கள். ஒருவேளை இவர்கள் வெற்றி பெறவில்லையென்றால் எதிர்க்கட்சியை கோர்த்து விட்டது போல் ஆகிவிடும். ஏனென்றால், மோசமான நிதிநிலையால் இதை யாருமே தொடர முடியாது. ரேஸ் கார் அம்மன் பெத்தாச்சியே துணை புரிய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை