உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் ஸ்டாலினும் கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும்: சொல்கிறார் தமிழிசை

முதல்வர் ஸ்டாலினும் கவர்னரும் வேற்றுமைகளை மறக்க வேண்டும்: சொல்கிறார் தமிழிசை

சென்னை; ''முதல்வரும், கவர்னரும் தங்களுடைய வேற்றுமைகளை மறந்து, இருவரும் அமர்ந்து பேசி மாநில பிரச்னைளை விவாதித்து முடிவெடுக்க வேண்டும்,'' என, தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னரும், தமிழக பா.ஜ., முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் பொங்கல் விழா நேற்று நடந்தது. விழாவில், பா.ஜ., நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நிருபர்களுக்கு, தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டி:கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் பரிசை அதிகமாக கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியவர், முதல்வர் ஸ்டாலின். தற்போது பொங்கல் பரிசு கொடுக்க முன்வராமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க.,வை, அனைத்து கட்சிகளும் புறக்கணித்துள்ளன.கவர்னருக்கும், முதல்வருக்கும் இடையே கருத்து மோதல் தொடர்கிறது. இதுபோன்ற கருத்து வேற்றுமைகள் மாநில மக்களுக்கு பலன் தராது என்பதால், இருவரும், தங்களது வேற்றுமைகளை மறந்து, மாநில பிரச்னைகளை பற்றி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும்.தெலுங்கானாவில், சந்திரசேகரராவ் முதல்வராக இருந்த போது, பிரதமர் மோடி வந்தால் அவரை வரவேற்க வரமாட்டார். முதல்வர் ஸ்டாலினை போலவே, மத்திய அரசின் திட்டங்களையும், சந்திர சேகரராவ் எதிர்த்து வந்தார். அதனால் தான், இன்று அவர் வீட்டில் இருக்கிறார்.மத்திய அரசின் திட்டங்களை, தமிழக அரசு மறுப்பது நல்லதல்ல. துணை வேந்தரை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் ஒரு வரைவை கொடுத்திருக்கிறார்.இந்த வரைவு வருவதற்கு முன்பே, அதை சட்டமாக்கிவிட்டதை போல, தமிழக அரசு நாடகமாடுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., டிபாசிட் வாங்காது என அமைச்சர்கள் கூறுவதை பற்றி, நாங்கள் கவலைப்பட போவதில்லை. தேர்தலில் பா.ஜ., போட்டியை ஏற்றுக்,கொள்ளும் தகுதி, தி.மு.க.,வுக்கு இல்லை. தி.மு.க.,வில் நேர்மையான போர் வீரர்களே இல்லை. முதுகில் குத்துபவர்களாக உள்ளனர். ஈ.வெ.ரா., சமூக சீர்த்திருத்தவாதி இல்லை என பா.ஜ., தலைவர்கள் ஏற்கனவே பலமுறை பதிவு செய்துள்ளனர். தற்போது சீமானும் பதிவு செய்வது வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

கிஜன்
ஜன 16, 2025 03:23

தமிழக கெவுனர் மேலயும் தப்பு இருக்கலாமாம் .... ஒய் திஸ் சேம் சைட் கோல் ? நம்பமுடியவில்லை ...வில்லை ...இல்லை ...ல்லை .... பேசாம இவங்கள மணிப்பூர் கெவுனரா அனுப்பி அமைதியை நிலைநாட்டலாம் ...


sankar
ஜன 15, 2025 18:04

இம்முறை திமுக தோற்கும்


Raman
ஜன 15, 2025 17:29

Madam, let Shri Annamalai have the final say...


சமீபத்திய செய்தி