வாசகர்கள் கருத்துகள் ( 1 )
துணை முதல்வர் மாதிரி, இது துணைமின் நிலையமா? சார், அது வேற, இது வேற.
மேலும் செய்திகள்
நாளைய மின் தடை
27-Sep-2025
சென்னை: கொளத்துார் கணேஷ் நகரில் அமைக்கப்பட்டு உள்ள 230 கிலோ வோல்ட் திறன் உடைய துணைமின் நிலையத்தின் இயக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதியில் உள்ள கணேஷ் நகரில், 230 கி.வோ., திறனில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்கு, 2023 மே 13ல் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இத்திட்டத்திற்கான செலவு, 111 கோடி ரூபாய். இந்த துணைமின் நிலையத்தில் தலா, 100 எம்.வி.ஏ., எனப்படும், 'மெகா வோல்ட் ஆம்பியர்' திறனில் இரு பவர் டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டுள்ளன; 160 மெகா வாட் மின்சாரம் கூடுதலாக கையாள முடியும். இந்த நிலையில், கணேஷ் நகர் துணைமின் நிலையத்தின் இயக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். இதையடுத்து, கொளத்துார், கணேஷ் நகரில் உள்ள ஒருங்கிணைந்த கல்லுாரி மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சமூக நீதி விடுதியில், 12 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தை திறந்து வைத்தார் . இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நேரு, சிவசங்கர், சேகர்பாபு, மெய்யநாதன், மேயர் பிரியா, எம்.பி.,க்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்.எல்.ஏ., தாயகம் கவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், 'புது துணை மின் நிலையத்தால், கொளத்துார், அன்னை நகர், நேர்மை நகர், கணேஷ் நகர், மாதவரத்தில் உள்ள, 2.50 லட்சம் தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர், 3 லட்சம் வீட்டு மின் நுகர்வோருக்கு தடையில்லாமல், 'லோ வோல்டேஜ்' எனப்படும் மின்னழுத்தம், 'வோல்டேஜ் பிளக்டிவேஷன்' எனப்படும் மின்னழுத்த ஏற்ற இறக்கமின்றி, சீராக மின் வினியோகம் செய்யப்படும்' என்றனர்.
துணை முதல்வர் மாதிரி, இது துணைமின் நிலையமா? சார், அது வேற, இது வேற.
27-Sep-2025