உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ளைக்குடைக்கு வேலை வந்து விட்டதோ: இ.பி.எஸ்., நையாண்டி

வெள்ளைக்குடைக்கு வேலை வந்து விட்டதோ: இ.பி.எஸ்., நையாண்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் இப்போது டில்லிக்கு போகிறார்; வெள்ளைக்குடைக்கு வேலை வந்து விட்டதோ,'' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.அவரது அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pxzm7luy&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன் என்று வீராவேசமாக பேசிய முதல்வர் ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டில்லிக்கு பறக்கிறாராம். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!அன்று 2ஜி-க்காக அப்பா டில்லி சென்றார். இன்று,டாஸ்மாக் தியாகி. தம்பி, வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ? படுத்தே விட்டாரய்யா...எல்லாம் 'தம்பி' படுத்தும் பாடு! யார் அந்த தம்பிஇவ்வாறு இ.பி.எஸ்.அறிக்கையில் கூறியுள்ளார்.முதல்வரின் உறவினரான ஆகாஷ் என்பவரை குறி வைத்து அமலாக்கத்துறை சில நாட்களாக ரெய்டு நடத்தி வருகிறது. ஆகாஷ், பல நுாறு கோடி ரூபாய் செலவில் சினிமா படங்களை தயாரித்து வருகிறார். மேலும் உதயநிதியின் நண்பரான ரத்தீஷ் என்பவர் தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. இந்த ரத்தீஷ், டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கே உத்தரவு போடும் அளவுக்கு அதிகாரத்துடன் செயல்பட்டுள்ளார்.இவர்கள் மீது அமலாக்கத்துறை பிடி இறுகியுள்ள நிலையில், முதல்வர் டில்லிக்கு பயணிப்பதை கிண்டல் செய்து இ.பி.எஸ்., அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

ராமகிருஷ்ணன்
மே 21, 2025 05:59

தினம்தினம் புதிதாக ஏதாவது பிரச்சினையை எழுப்பி நக்கல் செய்ய வேண்டும். திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது எப்படி குடைச்சல் கொடுத்தார்கள், இப்போது உங்கள் முறை. தனி டீம் அமைத்து ஆலோசனை பெற்று திமுகவை சல்லி சல்லியா நொருக்கனும்


உ.பி
மே 21, 2025 03:17

ஆக...எங்க குடும்பத்துக்காக சங்கி காலில் கூட விழுவோம். இதுதான் வெட்கங் கெட்ட மாடல் ஆட்சி


துர்வேஷ் சகாதேவன்
மே 20, 2025 22:50

ஏம்பா நீ தானே இணக்கமா சென்றால் தான் மாநில நலன் காக்க முடியும் என்று...


Narayanan Muthu
மே 20, 2025 20:03

யோக்கிய சிகாமணி வந்துட்டாராய்யா கூவல் போட . ஒய்யாரக் கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் செய்த ஊழல்களும் இன்னபிற வேலைகளும் அண்ணாதிமுக கட்சியையே அமித்ஷாவுக்கு அடகு வைக்க வேண்டியதாய் ஆகிவிட்டது. இவர் இப்படி பேச தகுதி உள்ளதா


சங்கி
மே 20, 2025 21:52

இதுதான் இந்த 200 ரூபா ஊம்பிகளின் பிரச்சினை. தன்னால் பதில் பேச முடியலைன்னா அடுத்தவனை குறை சொல்றது.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 21, 2025 11:29

அந்த ஒய்யார கொண்டை தாழம்பூவாம் உள்ளே இருக்குது ஈரும் பேனும் சொல்லி தானே ஐயா கொண்டையை அவிழ்த்து தாழம்பூவை புடுங்கி வீசி ஈரையும் பேனையும் ஒழித்துக் கட்ட விடியல் ஆட்சி வந்தது. வந்த விடியல் சரியில்லாமே சரியாக குளிக்காமே கொண்டை பெருத்து முடியெல்லாம் திரிஞ்சு போய் அந்த ஈரையும் பேனையும் சாப்பிட எலி ஆணிலு கரடி சிங்கமெல்லாம் உள்ள வந்துருச்சு.


Pandianpillai Pandi
மே 20, 2025 19:38

ஊர்ந்து செல்லும் மண்புழு எறும்பை பார்த்து ஏக்கப்படுகிறது ஆதங்கப்படுகிறது. எங்கள் முதல்வர் தமிழ்நாடு முழுவதும் சுழன்று சுழன்று மக்கள் பணியாற்றிவருகிறார். அதெல்லாம் கண்ணுக்கு தெரியாமல் அதிமுக கட்சியை அரித்து உண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் தாங்கள் , சுய மரியாதையை டெல்லியில் அடகு வைத்துவிட்டு தமிழ்நாட்டில் கையால் தோசை சுடுவது நகைப்புக்குறியதாகத்தான் பார்க்கப்படும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 21, 2025 11:35

தமிழகம் முழுவதும் நாள்தோறும் பாலியல் வன்கொடுமைகள் கொலைகள் போதை வஸ்துக்கள் தினம் தினம் அரங்கேறி வருகிறது. முதல்வர் கையில் தான் காவல் துறை உள்ளது. சுழன்று சுழன்று ஆற்றி வரும் மக்கள் பணி இது தானே.


Haja Kuthubdeen
மே 20, 2025 19:37

சரன்டரை தவிற வேறு வழியே இல்லை...


Sivagiri
மே 20, 2025 19:08

வெள்ளைக் கொடி - - - குடை அல்ல - - - ஆனா அதுக்கெல்லாம் ஆட்கள் தனியாக - டில்லியில் வச்சிருக்காங்க . . . இப்ப இவரு வேற எதோ ஸ்டண்ட் அடிக்க போறாரு . . . வந்து இங்க மீடியாவில் / சொந்த கட்சியினர் , மாறி வந்த கட்சியினர் மற்றும் கூட்டணிகளிடம் , வேற எதோ போட டிராமா போறாங்க . . .


Anantharaman Srinivasan
மே 20, 2025 19:07

மொத்தத்தில் நேர்மையற்ற ஊழல் கூட்டம்.


K.Ramakrishnan
மே 20, 2025 18:49

பா.ஜ.வுடன் எந்தக்காலத்திலும் கூட்டணி கிடையாது என்றவர், திடீர்னு டெல்லி போய், 3கார் மாறி அமித்ஷாவை சந்தித்து,கூட்டணிக்கு ஓகே சொல்லி விட்டார். உறவினர் வீடுகளில் ரெய்டு வந்ததும், வெண்கொடி ஏந்தி சென்றவருக்கு யார் டெல்லி சென்றாலும் அந்த நினைப்பு தானே வரும்.இடி பிடி இறுகினால் டெல்லிக்கு சென்றால் சரியாகி விடும் என்று பா.ஜனதாவின் இடி நாடகத்தையும் இதன்மூலம் அம்பலப்படுத்தி விட்டார் இபிஎஸ். இதற்காக நன்றி சொல்ல வேண்டும்.


Madhavan Kandasamy
மே 20, 2025 18:17

கோழி கூவுதோ இல்லையோ இவர் கூவி விடுகிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை