உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்: சத்குரு

சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்: சத்குரு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வழி நடத்திய, 'குருவின் மடியில்' என்ற தியான நிகழ்ச்சி, கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்தது.ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின், தேவார பண்ணிசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. சத்குரு வழிநடத்திய, சக்திவாய்ந்த தியான அமர்வுகள், அருளுரை ஆகியவை இடம்பெற்றன.இந்நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது: ஒரு மொழி நீண்ட காலத்திற்கு இருக்க வேண்டும் என்றால், அதனைச் சுற்றியுள்ள கலாசார அம்சங்களை, உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டியது அவசியம்.தமிழ் மொழியின் பெருமை நம் நெஞ்சில் இருந்தால், தமிழ் கலாசாரத்தில் ஆன்மிக தொண்டாற்றிய சித்தர்கள், யோகிகள், நாயன்மார்களின் பெயர்களை தமிழ் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும்.ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களும், அவர்களுக்குள் உருவாகும் கோபம், வெறுப்பு, பொறாமை, பயம், அன்பு, ஆனந்தம் உள்ளிட்ட அனைத்து உணர்வுகளுக்கும், தாங்களே பொறுப்பு என்பதை உணர வேண்டும்.யோகா, தியானம் செய்வதற்கு எல்லாம் தற்போது நேரமில்லை என, மக்கள் தற்போது கூறுகிறார்கள். ஆனால், நம் நாட்டின் பிரதமரே தினமும் யோகப் பயிற்சி செய்கிறார். நாம் வெறும் ஏழு நிமிடங்களில் செய்யக்கூடிய, 'மிராக்கிள் ஆப் மைண்ட்' இலவச செயலியை பயன்படுத்தி, மனநலத்திற்காக தியானத்தை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சி, தமிழ்நாட்டில், 112 இடங்களிலும், வெளிநாடுகளிலும் என, மொத்தம் 128 இடங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Mani . V
ஆக 05, 2025 17:37

சரி இவரின் பிள்ளைகளின் பெயர் என்ன? எது ஊருக்குத்தான் உபதேசமா?


Prabu
ஆக 05, 2025 14:59

இவர் பேரன் பேதிக்கு முதலில் சித்தர்கள், நாயன்மார்களின் பெயர்களை சூட்டட்டும்:


SIVA
ஆக 05, 2025 12:52

ஏம்பா அவரு தான் லேண்ட் ஆக்கிரமித்து இருந்த நிரூபிக்கட்டோம் நான் காலி பண்ணிகொல்கிறானு சொல்லிவிட்டாரு அதை நிரூப்பிக்க முடியல ஆனா இதேயே சொல்லி சொல்லி உருட்டுங்க .


Ramesh Sargam
ஆக 05, 2025 12:36

இந்த கலிகாலத்தில் சித்தர்கள், நாயன்மார்கள் பெயர் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆகையால் சத்குரு அவர்கள், மேற்கூறியவர்களின் பெயர்கள் அடங்கிய ஒரு பட்டியலை தரவேண்டும். நன்றி.


SUBRAMANIAN P
ஆக 05, 2025 13:57

கூகுளை தட்டினால் எல்லாமே கிடைக்கிறது.. நீங்க இன்னும் இன்னொருத்தர் கிட்ட கேக்குறீங்களே.


V.Mohan
ஆக 05, 2025 12:19

இந்துப் பெயர்களிலும், அர்த்தமற்ற இணைப்பு பெயர்களிலும் கருத்து சாக்கடையை வீசும் வந்தேறி மதங்களை சேர்ந்த, சம்பள விடியல் அடிவருடிகளே ஜக்கி அவர்களை விமரிசிப்பதற்கு முன்னர் உங்கள் எல்லோருடைய மனதிலும் சகிப்புத்தன்மை உள்ளதா மனிதநேயத்திற்கு இடம் உள்ளதா மாற்று மதத்தவரை மேலோகம் அனுப்பும் உத்தரவுக்கு கீழ்படிபவரா மற்றும் மதமாற்றுவதற்கு சத்தியம் செய்தவரா என்பதை எல்லாம் கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள். ஜக்கி அவர்கள் மேற் சொன்ன எதையும் செய்வதாக தெரியவில்லை. அப்படியிருக்க """ அமிலத்தன்மை கொண்ட அர்த்தமற்ற விமரிசனம் வசவுகள்? எதற்கு?


திகழ்ஓவியன்
ஆக 05, 2025 11:16

1990 களில் கஞ்சா விற்று மோட்சம் பெட்ரா நீ பேசுற


சுந்தரராஜன்
ஆக 05, 2025 10:43

கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் பெயர்களை வைக்க வேண்டும். இப்ப எல்லாம் சுருக்கமான, ஆங்கில, வட இந்திய பெயர்கள்தான் அதிகம் வைக்கின்றனர்.


Dv Nanru
ஆக 05, 2025 09:24

முதலில் உன்னுடைய பெயரை மாற்றவும் அடுத்து காட்டில மிருகங்கள் வாழ்கின்ற இடத்தில் யோகா சென்டர் நடத்திக்கிட்டு, உன்னுடைய பெண்ணை அமெரிக்கனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தது விட்டு யோகா கத்துக்க வந்த மாணவிகளுக்கு மொட்டை அடித்து அவங்க பெற்றோர்கள் வந்தால் அவங்கள பார்க்க அனுமதிக்காமல் அவர்களை அங்கேயே வைத்து கொள்வது ஞாயமா ஊருக்கு எல்லோராலும் உபதேசம் சொல்ல முடியும் முதலில் தான் ஒழுங்கா இருக்கணும் அப்பறம் மற்ற வர்களுக்கு அட்வொய்ஸ் செய்யணும் அது தான் வீட்டுக்கு நாட்டுக்கு நல்லது ...


Prasanna Krishnan R
ஆக 05, 2025 09:56

டாய் து.,க்கா, இந்தக் கருத்துப் பகுதியிலிருந்து வெளியேறுங்கள். அதுதான் இந்து சனாத தர்மம். சட்டவிரோதமாகக் குடியேறிய நீங்கள் அதைப் புரிந்து கொள்ள மாட்டீர்கள்.


SUBRAMANIAN P
ஆக 05, 2025 14:03

நீதான் அந்த எல்லாம் தெரிந்த ஏகாம்பரமோ.. அது என்ன பெயர், யாருக்கும் புரியல.. நல்ல தெளிவா உங்கம்மா அப்பா வெச்ச பெயருல கருத்துப்போடு மனுஷப்பிறவியா இருந்தா... இல்லன்னா ஓடு..


thangam
ஆக 05, 2025 08:48

திருட்டு திராவிடத்தை ஒழிக்க ஒரே ஆயுதம் மக்களின் விழிப்புணர்வு. அதற்கு ஒரே வழி யோகா.


திகழ்ஓவியன்
ஆக 05, 2025 11:17

முரட்டு மத தீவிரம் ஒழிய ஏன் கடவுள் ஜாதி இரண்டும் மனிதர்களால் உருவாக்க பட்டது இரண்டும் வேஸ்ட் மனிதனை மனிதனா பார்க்காத எந்த நிகழ்வும் வேஸ்ட் தான்


swamy
ஆக 05, 2025 08:42

நமஸ்காரம் sadhguru...


புதிய வீடியோ