உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழந்தைகளே நன்கு படியுங்க, விளையாடுங்க: முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

குழந்தைகளே நன்கு படியுங்க, விளையாடுங்க: முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

சென்னை: குழந்தைகளே நன்கு படித்து தைரியமாக விளையாடி நியாயமான வெற்றியை பெறுங்கள் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னையில், கண்காட்சி கால்பந்து போட்டி நடந்தது. இதில் ரொனால்டினோ தலைமையிலான பிரேசில் லெஜண்ட்ஸ் அணி, விஜயன் வழிநடத்திய 'இந்தியா ஆல் ஸ்டார்ஸ்' அணிகள் மோதின. ஆட்டநேர முடிவில் பிரேசில் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் பெருமை உடன் கர்ஜித்தது. பிரேசில் லெஜண்ட் vs இந்தியா ஆல் ஸ்டார்ஸ் கால்பந்து போட்டி சென்னையில் நடந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவிருக்கும் தலைமுறைகளுக்கான கனவுகளை ஊக்குவிக்க இந்த போட்டி நினைவில் கொள்ள வேண்டிய ஒரு தருணம். குழந்தைகளே நன்கு படித்து தைரியமாக விளையாடி நியாயமான வெற்றியை பெறுங்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

vijai hindu
மார் 31, 2025 22:19

பேரன் பேத்திகள் நல்வாழ்வுக்கு தயவு செய்து டாஸ்மாக் கடையை மூடவும் அவர்களோட தகப்பன்மார்கள் திருந்துவார்கள்


nb
மார் 31, 2025 21:09

எல்லா சனிக்கிழமையும் பள்ளி மாணவர்களுக்கு கட்டாய விடுமுறை விடுங்க ஐயா


angbu ganesh
மார் 31, 2025 17:44

அன்புள்ள அப்பா உங்க டாஸ்மாக்கா மூடுங்க அப்பா, பொல்லாத புள்ளைங்கப்பா என் முக்கிய வருமானத்தை நிறுத்த முடியாது அடுத்த தேர்தல் முக்கிய வாக்குறுதியது அதனால இந்த 2025ல நோ சான்ஸ் அப்பா


AaaAaaEee
மார் 31, 2025 16:55

அப்பா ரொம்ப கண்டிப்பா ஆனவர் கேட்கை இல்லனா நிறைய ஊத்ஹி குடுத்துறவாறு பால் பல் நஹி டாஸ்மாக் ட்ரிங்க்ஸ்


S.L.Narasimman
மார் 31, 2025 14:20

அப்பா மாதிரி பேசுறாராம். முதலில் சாராயகடையை மூடுங்க குழந்தைகள் குடும்பம் உருப்பட. பொய்யான வாக்குறுதீகள் கொடுத்து மக்களை ஏமாத்தாதீங்க.தரமான கல்வியை கொடுங்க குழந்தைகள் அறிவுடன் வளர. ஊழல் செய்யாதீங்க சமூதாயம் கெடாமலிருக்க.


Ramesh Sargam
மார் 31, 2025 12:48

குழந்தைகளின் பெற்றோர்களை நன்றாக குடிக்கசொல்லிவிட்டு, குழந்தைகள் நன்றாக படிக்கவேண்டுமாம். பெற்றோர்கள் நாள் முழுவதும் குடித்துக்கொண்டிருந்தால், குழந்தைகள் எப்படி நன்றாக படிக்கும்? முதல்வரே முதலில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்துங்கள். இந்த வாக்குறுதியை நீங்கள் முந்தைய தேர்தலுக்கு முன்பு வாக்குறுதியாக கொடுத்தீர்கள். ஞாபகம் இருக்கா?


புதிய வீடியோ