உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீன விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரத்திற்கு கோர்ட் ஜாமின்

சீன விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரத்திற்கு கோர்ட் ஜாமின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள காங்கிரசை சேர்ந்த கார்த்தி சிதம்பரத்திற்கு டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் ஜாமின் வழங்கியது.2011 ல் இவரது தந்தை ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவுக்கு வர சீன நாட்டவர்கள் 263 பேருக்கு விசா வழங்கிட கார்த்தி உதவியதாக குற்றச்சாட்டு பதிவு செய்தது அமலாக்கத்துறை. சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் பல முறை ஆஜராக சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாமின் கேட்டு சிபிஐ சிறப்பு கோர்ட்டில் கார்த்தி ஜாமின் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி காவேரி பவேஜா, அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். சமீபத்தில் நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தலில் கார்த்தி சிதம்பரம் 2, 05, 664 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

subramanian
ஜூன் 06, 2024 21:04

அம்மா கிட்ட சுண்டல் கேட்டால் உடனே கிடைக்கிறமாதிரி , ஜாமீன் கிடைக்கிறது. எவ்வளவோ வழக்குகள் விசாரணைக்கு பாமர ஜனங்கள் பல வருடங்களாக காத்துகொண்டு இருக்கிறார்கள். அரசியல் வாதிகள் நொடிக்கொருதரம் வாய்தா, ஜாமீன், மேல்முறையீடு , மறுமுறையீடு எல்லாம் உடனே செய்கிறார்கள். இப்படித்தான் செய்யவேண்டுமென்றால் அவர்களுக்கு அவர்கள் செலவில் தனி நீதிமன்றம் அமைக்கவேண்டும். எதற்கு பொதுமக்கள் வரிப்பணித்தில் இவர்களுக்கு நீதிமன்றம் இயங்கவேண்டும்.?


subramanian
ஜூன் 06, 2024 20:58

குற்றம் சுமத்தப்பட்டவர் எம் எல் ஏ எம் பி மந்திரி முதல்வர் யாராக இருந்தாலும் , வாய்தா ஜாமீன் எல்லாம் கொடுக்காகூடாது. முதலில் குற்றசாட்டை எதிர்கொண்டு விசாரணையை ஏற்கவேண்டும். குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபித்துவிட்டு மற்ற வேலைகளை பார்க்கவேண்டும்.


Syed ghouse basha
ஜூன் 06, 2024 17:47

எதிர்கட்சியினர் மீது பொய் வழக்கு இது போல போட்டு வருடக்கணக்கில் நிரூபிக்க முடியமல் அலைய விடுவது தானே நடக்குது?


S Sivakumar
ஜூன் 06, 2024 17:46

எப்போது விடியும் இந்த ஜனநாயக நாட்டில் குற்றம் செய்த அரசியல் வாதிகள் தன் பண மற்றும் அதிகார பலத்தால் காப்பாற்றி கொள்ள முடியாது என்ற நிலை வரும்.


rsudarsan lic
ஜூன் 06, 2024 16:44

எதுக்குங்க ஜாமீன் கீமீண்லாம் பேசாமல் ரிலீஸ் பண்ணிடுங்க


Balasubramanyan
ஜூன் 06, 2024 16:17

Hwe know the judgement for these political persons. The geconimic offenders lokehim are protected by court.cant the judges deliver judgement. The voters of Sivaganga have to be blamed to back this person. Yes he got the backing of DMK.no surprise.


Jai
ஜூன் 06, 2024 15:41

சட்டுபுட்டுன்னு தீர்ப்பு சொல்லி இரண்டு வருஷத்துக்கும் மேல தண்டனை குடுத்துறாதீங்க. இப்பதான் எலக்ஷன் முடிஞ்சு அவர் எம்பி ஆகி இருக்கிறார்.


Raghavan
ஜூன் 06, 2024 13:58

நல்ல நாடு நல்ல நீதி மன்றம். 2011 ல் செய்தவற்றிற்கு 13 வருடங்கள் சென்று விட்ட நிலையில் இன்னும் வழக்கை தொடங்காமல் ஜாமீன் வழங்கியுள்ளது நீதி மன்றம். இதே ஒரு சாமானியனுக்கு நடக்குமா?


Ramanujadasan
ஜூன் 06, 2024 13:53

இந்தியாவில் ஊழலை ஒழிக்க முடியாது , அதற்கு காரணம் என்ன எ ன்றுஇப்போது புரிந்து கொண்டோம்


va.sri.nrusimaan
ஜூன் 06, 2024 13:43

our judiciary is here to support anti-nationals/looters/criminals


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி