உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியானது: 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியானது: 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

சென்னை: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்தமிழக அரசின் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு, கடந்த மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடந்தன. தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இன்று (மே 8) காலை 9 மணிக்கு வெளியிட்டது. மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kpobpdif&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை: 7,92,494இதில், மாணவிகள் எண்ணிக்கை- 4,19,316மாணவர்கள் எண்ணிக்கை- 3,73,178

மாணவிகளே அதிகம்!

* தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 96.70% பேரும், மாணவர்கள் 93.16% பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

பள்ளி வாரியாக தேர்ச்சி விகிதம்

அரசுப் பள்ளிகள்- 91.94%அரசு உதவிப்பெறும் பள்ளிகள்- 95.71%தனியார் பள்ளிகள்-98.88%

'டாப் 5' மாவட்டங்கள்

அரியலூர்-98.82%ஈரோடு-97.98%திருப்பூர்-97.53%கோவை-97.48 %கன்னியாகுமரி-97.01%

100/100 மதிப்பெண்கள் பெற்றவர்கள்!

தமிழ்- 135 பேர்,இயற்பியல்- 1,125 பேர்,வேதியியல்- 3,181 பேர்,கணிதம்- 3,022 பேர்,விலங்கியல்- 36 பேர்,உயிரியல்- 827 பேர்,தாவரவியல் 269 பேர்,கணினி அறிவியல் 9,536 பேர்,வணிகவியல் 1,624 பேர்,கணக்குப் பதிவியல் 1,240 பேர்,பொருளியல் 556 பேர்,புள்ளியியல் 273 பேர்,

சிறைவாசிகள் 130 பேர் தேர்ச்சி

* தேர்வு எழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 140. இதில் 130 பேர் (92.86%) தேர்ச்சி பெற்று உள்ளனர்.* தேர்வு எழுதிய மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 8,019. இதில் 7,4,66 பேர் (93.10%) தேர்ச்சி பெற்றுள்ளனர்.* தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் எண்ணிக்கை 16.904. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை 5,500 (32.54%).

ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100!

* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகள் எண்ணிக்கை- 26,887.* ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள் எண்ணிக்கை- 2,853 மாணவர்கள் தங்களின் மதிப்பெண் விபரங்களை, 'ஆன்லைன்' வழியில் தெரிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளை, https://results.digilocker.gov.in மற்றும் www.tnreuslts.nic.in ஆகிய இணையதளங்களில், தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரின் மொபைல் எண்ணிற்கும், தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

M R Radha
மே 08, 2025 17:49

தமிழக சமச்சீர் கல்விமுறையில் படித்து பாஸாக விட்டால் தான் ஆச்சர்யம். கல்வித் தந்தைகளின் கல்லூரிகள் காத்துக் கொண்டிருக்கின்றன ஆல் பாஸ் போட்டுடுங்க முடிஞ்சது ஜோலி.


Jerusha Prakasam
மே 08, 2025 15:46

My friends daughter got centum in English.


Krishnamurthy Venkatesan
மே 08, 2025 14:18

சில fail ஆன மாணவர்கள், "மத்திய அரசு நடத்தும் நீட் தேர்வை எதிர்த்து போராடும் மாநில அரசு +2 தேர்வை ஏன் வைக்கிறார்கள்"? என்று கேட்பது காதில் விழுகிறது.


MP.K
மே 08, 2025 13:36

அனைவருக்கும் வாழ்த்துகள்


VSMani
மே 08, 2025 12:04

+2 தேர்வு எழுதிய எல்லா மாணவ மாணவிகளையும் தேர்ச்சி பெறச்செய்து விட வேண்டியதுதானே. தேர்ச்சி பெறாத மாணவ மாணவிகள் எவ்வளவாய் வேதனைப்படுவார்கள்.


Muralidharan S
மே 08, 2025 11:25

நிஜமாகவே, நேர்மையாக நன்கு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்கள். 95 சதவிகிதம் தேர்வு எப்படி என்று - வினாத்தாள்களை திருத்திய ஆசிரியர்களின் மனசாட்சிதான் உண்மை சொல்லவேண்டும். 10 மதிப்பெண்கள் இன்டெர்னல் - முழுவதுவும் கிடைத்து விடுகிறது - படித்தாலும் படிக்காவிட்டாலும். 25 மதிப்பெண்கள் வாங்கினால் போதும், பாஸ்.. அந்த 25 மதிப்பெண்கள் கணிதம் போன்ற பாடங்களில் கூட வாங்குவது எளிது. கேள்வியை எழுதி அதற்கான விடையை நிரூபி என்று வினாத்தாளில் உள்ளதை அப்படியே எழுதி இருந்தால் கூட 2 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது, ஒவ்வொரு கேள்விக்கும். இது போதாது என்று 17 அல்லது 18 மதிப்பெண்கள் வரை அடைந்தவர்களை ஸ்டேப் மார்க் அது இது என்று ஏதாவது ஒரு வழியை ஆராய்ந்து 25 மதிப்பெண்கள் வரை இழுத்து கொண்டு வந்து விட்டு பாஸ் ஆகி விடுகிறார்கள்.... பாஸ் ஆக்கட்டும்.. ஆகட்டும்.. வேண்டாம் என்று சொல்லவில்லை.. ஆனால் இப்படி தக்கி முக்கி பாஸ் செய்ய வைக்கப் படுபவர்களின் எதிர்காலம் என்ன என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.. இப்படி எல்லாம் பாஸ் ஆகி வருபவன் பணம் படைத்தவன் காளான் போல பெருகி இருக்கும் தரமற்ற இன்ஜினியரிங் கல்லூரிகளில் பல லக்ஷங்கள் குடுத்து சேர்ந்து விடுகிறான்.. ஆனால் அவனது தரம்?? அப்புறம் வேலை கிடைக்கவில்லை... என்றால் என்ன சொல்வது.. தரத்திற்குத்தானே வேலை கிடைக்கும்..


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 08, 2025 10:51

ஆக 13,838 இளம் பெண்கள் திருமணம், வீட்டுவேலை அல்லது கூலிவேலை செய்யவும், 25,526 இளம் ஆண்கள் கைத்தொழில், கூலிவேலை அல்லது டெலிவரி வேலை செய்யவும் தயாராகி விட்டார்கள். அதாவது ஆண்டுக்கு கிட்டத்தட்ட 40 ஆயிரம் பிளஸ் 2 வரை படித்து பெயில் ஆன இருண்ட எதிர்காலம் உள்ள ஒரு இளைஞர் கூட்டம் தமிழகத்தில் உருவாகி வருகிறது.


S.V.Srinivasan
மே 08, 2025 10:09

+2 தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


G Mahalingam
மே 08, 2025 09:57

95 சதவீதம் பாஸ் அதில் 35 சதவீதம் பெற்று எத்தனை பேர் பாஸ் என்ற விவரத்தை சொன்னால் நன்றாக இருக்கும்.


GOPAL
மே 08, 2025 09:53

வெற்றிகள் தொடரட்டும்


புதிய வீடியோ