வாசகர்கள் கருத்துகள் ( 22 )
பள்ளிகளில் அசைவ உணவை தவிர்ப்பது தான் நல்லது. சைவ உணவுதான் சிறந்தது. ஈவன் முட்டையும் குடுக்க கூடாது. கைதி சிக்கன் பிரியாணி சாப்பிடும் போது மாணவர்கள் ஏன் சாப்பிட கூடாதுன்னு அமிச்சர் பேசுவது வன்மையாக கண்டிக்க தக்கது. மாணவர்களும் கைதிகளும் ஒண்ணா? என்ன கிறுக்கு தனமான பேச்சு? ஒரு மாணவன் ஸ்கூலுக்கு வரலைன்னா அவனுக்கு சாப்பாடு அவனோட வீட்டுக்கு குடுத்தனுப்பும் நிலமைக்கு போயிண்டிருக்கு. சாப்பாடு, சாப்பாட்டு லெவலை தாண்டி விருந்துங்குற நிலமைக்கு போயிடும் போல இருக்கு. ஸ்கூலை விட சமையல் கூடம் பெரிசா இருக்க வேண்டிய நிலமை விரைவில் வரும்.
ஏற்கனவே ஆசிரியர்களுக்கு அடி விழுகிறது.
இதுக்கு முதல்வரின் அறிவுரை தேவையா ?? அமைச்சர் சாஹப் என்ன பண்ணுகிறார் ??
ஒரு காலத்தில் இது தேவையாக இருந்தது. இப்போது அம்மா உணவகம் போன்ற அமைப்புக்களால் இது தேவையில்லாமல் போயிற்று. பள்ளிக்கூடங்களில் அருகில் அம்மா உணவகத்தைத் திறந்து நல்ல எளிய ஊட்டச்சத்துள்ள உணவைக் கொடுத்தாலே போதும். சிக்கன் மட்டன் என்பதெல்லாம் தேவையில்லை அவற்றை உண்டபின் உறக்கம் வரும். இதைவிடத் தரமான பள்ளிக்கூடங்கள், சுகாதாரமான தூய கழிப்பறைகள், வாழ்க்கைக்கு உதவும், வேலை வாய்ப்புத் தரும் தரமான கல்வி இவையே மாணவனின் முதல் தேவை அரசு இதற்கானவற்றைச் செய்தால் பாராட்டலாம்
வெறும் உப்புமா பொங்கல் முட்டை கொடுத்தால் போதும் , தேவையில்லாமல் சிக்கன் பிரியாணி போட்டு செலவீனங்களை அதிகரிக்காதீர்கள்
எதுக்கு இந்த பில்டப்பு?
பள்ளி மாணவர்கள் விஷயத்துல கெட்டுபாபோன முட்டை, பல்லி விழுவது போன்று ஏதும் நடக்காம பாத்துக்குங்க, அது தான் முக்கியம்.
பள்ளிகளுக்கு முதல்வர் காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை உணவு திட்ட விரிவாக்கம் எப்போது? ஓட்டுக்கு தானே இந்த அறிவுரை. சலுகை பெறும் நபர் ஓட்டளிக்க கூடாது என்றால், அரசியல் கட்சிகள் உண்மை முகம் தெரிய வரும். உணவு பழக்கம் வீட்டுக்கு வீடு மாறுபடும். எல்லோருக்கும் ஏற்று கொள்ளும் உணவை மட்டும் தேர்வு செய்து வழங்க முடியாதா,,? குழந்தைகள் ஊட்ட சத்து கேப்பை, சோளம், கம்பு, பால், உள்ளூர் பழங்கள், கீரை, பனைபொருட்களில் அதிகம் இருக்கும். ? தற்போத அரிசி சத்து இல்லாதது. மேலும் 18 வயது வரை மாமிச உணவுகளை தவிர்ப்பது நல்லது.
பெற்றோர்கள் எதிர்பார்ப்பது தனியாருக்கு நிகரான தரமான கல்வி, சாப்பாடு அல்ல..
தேவை இல்லாதவை. இதை விட்டு விட்டு தரமான சைவ பிரியாணி, சாம்பார், தக்காளி, எலுமிச்சை, புளி சாதம் போன்றவைகளை கொடுப்பதே நலம்.