உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் வீடு மீதான தாக்குதல்: சட்டசபையில் முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்

சவுக்கு சங்கர் வீடு மீதான தாக்குதல்: சட்டசபையில் முதல்வர், இ.பி.எஸ்., காரசார விவாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சட்டசபையில் சவுக்கு சங்கர் வீட்டில் மனித கழிவுகளை கொட்டி தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ், முதல்வர் ஸ்டாலின் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதம் நடந்தது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., யுடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல் நடத்தி மனித கழிவுகளை கொட்டியுள்ளனர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாரும் இப்படி செய்ய மாட்டார்கள். வழக்கு பதிவு செய்யப்படாமலே சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது என்றார். அப்போது முதல்வர் ஸ்டாலின் இதற்கு பதிலளித்து பேசினார். இரு தரப்புக்கும் இடையே காரசார விவாதம் எழுந்தது. அப்போது முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: இந்த அரசு யாருக்கும் பயப்படவில்லை.எதுக்கும் அச்சப்படவில்லை. இது(சவுக்கு சங்கர் விவகாரம்) எப்படி அவைக்குறிப்பில் இடம்பெறும். வழக்கு நிலுவையில் இருக்கும் போது எப்படி நீங்கள் வீடியோ (சட்டசபை நிகழ்வுகள் படம்பிடிப்பது பற்றி) ரெக்கார்டு செய்வீர்கள்.பேசவே கூடாது, நீங்கள் (இ.பி.எஸ்) எத்தனையோ தடவை சொல்லி இருக்கிறீர்கள். நீங்களே இதே அவையில் முதலமைச்சராக இருந்த போது அவையில் சொல்லி இருக்கிறீர்கள். எனவே அவைக்குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என்று கூறி முதல்வர் ஸ்டாலின் சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, சவுக்கு சங்கர் விவகாரம் தொடர்பான பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., ஏன் அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும், எதற்காக பயம் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசியதாவது; எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டது போல நான் பயத்தின் காரணமாகவோ, அச்சத்தின் காரணமாகவோ அவைக்குறிப்பில் இடம் பெறக் கூடாது என்பதற்காக சொல்லவில்லை. வேண்டும் என்றால் இப்போது சொல்வேன்... நான் தைரியமாக இந்த வழக்கை சந்தித்த தயாராக இருக்கிறோம். அதை பற்றி கவலைப்படவில்லை.எனவே எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதையும் பதிவு செய்யுங்கள். நான் சொன்ன பதிலையும் பதிவு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

RAMESH
ஏப் 28, 2025 21:53

தாக்குதலுக்கு காரணமான நபர்கள் சுதந்திரமாக காங்கிரஸ் கட்சி தலைவருடன் ஜால்ரா....இதில் முட்டு கொடுக்கும் முதல்வர் அப்பா...தரங் கெட்ட ஆட்சி...


K.Ramakrishnan
ஏப் 28, 2025 21:47

சவுக்கு சங்கர் என்ன உலகமகா தியாகியா? மக்கள் பிரச்னைக்காக சிறை சென்ற உத்தமரா?எதற்காக அவரது பிரச்னையில் பழனிசாமி மூக்கை நுழைக்கிறார்? சங்கர் பேசியது எல்லாம் சரியா?அதை ஏற்றுக்கொள்கிறாரா?


Ragupathi
ஏப் 28, 2025 22:50

சங்கர் தியாகியா இல்லையா என்பது இங்கு பிரச்சனையில்லை ஒரு ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சியை பற்றி பேசிவிட்டார் என்பதற்காக அவருடைய வீட்டில் ஒரு வயதான பெண் தனியாக இருக்கும் போது திமுக காங்கிரஸ் கைகூலிகளை வைத்து மனித கழிவுகளை அவர் வீட்டில் கொட்டி அசிங்கபடுத்துவது முறையா. இது அரசின் கையாளாகாத கோழைதனத்தை காட்டுகிறது. இதற்கும் முட்டு கொடுக்காதிங்க உடன்பிறப்பே.


Murugesan
ஏப் 28, 2025 21:28

மிக கேவலமான அயோக்கியனுங்க வீட்ல இதே மாதிரி மலத்தை ஊற்றும் காலம் மிக விரைவில்


சாமானியன்
ஏப் 28, 2025 20:51

ஒரு தலைபட்சமாக முதல்வர் நடந்து கொள்கிறார். தீயவர்களை ஆதரிக்கும் வகையில் F I R கூட பதிவு செய்யவில்லை. இது என்னவகையான அரசியல் ? ஆணவமான ஜன்மம்.


V Venkatachalam
ஏப் 28, 2025 19:57

ஓனர்: ஏய் ஏண்டா தென்ன மரத்தில் ஏறினே? திருடன் பதில்: புல் புடுங்க ஏறினேன்.ஓனர்: ஏய் அங்க ஏதுடா புல்? திருடன் பதில்: அதான் எறங்குறேன். சுடாலின் "முதலில் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்". என்றும் பின்னர் "என் பதிலையும் சேர்த்து பதிவு செய்யணும்." என்றும் பேசுகிறார். திருட்டு தீயமுக முழி பிதுங்கி இருக்கின்றனர் என்பதே உண்மை.


ஆரூர் ரங்
ஏப் 28, 2025 19:36

அத்தாக்குதலை ஏவியது தீய சக்தி தலைமைதான் என்பதில் சந்தேகமுண்டா? அவைக் குறிப்பில் இடம் பெறாது என்பது தெரிந்தே பங்காளி பேசுறாரூ?


முக்கிய வீடியோ