உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.24,307 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.24,307 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 24 ஆயிரத்து 307 கோடி முதலீடு செய்வதற்கு 92 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. சுமார் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ. 23,303.15 கோடி முதலீட்டில், 44,870 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ரூ. 1003.85 கோடி முதலீட்டில் 4,483 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில், 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது; கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் ஒரு லட்சம் சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் இயங்கி வருகிறது. ஓசூர் தொழில் வளர்ச்சிக்காக நாம் செய்தது சிப்காட் தொழில் பூங்கா. இதில், 371 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. 2 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிப்காட்டில் தடையில்லா தண்ணீர் வழங்க சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தொழில்துறை மாற்றத்தை விரைவுபடுத்தும் நோக்கில், போர்ட் இன்குபேட்டர் அமைக்கப்பட்டிருக்கிறது. சூளகிரி பகுதியில் 689 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழிற்பூங்கா. பர்கூரில் சிறப்பு பொருளாதாரத்துடன் கூடிய தொழிற்பூங்கா, குருபரபள்ளியில் 150 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ரூ.210 கோடி மதிப்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட ப்யூச்சர் மொபிலிட்டி பார்க்கில் 22 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.2,728 கோடி உறுதியளிக்கப்பட்ட முதலீடு பெறப்பட்டுள்ளது. 6,682 உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கிறது. தேன்கனிக்கோட்டையில் பணியாளர்கள் தங்க 64 ஏக்கரில் தொழிலாளர் குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. ஜிசிசி எனப்படும் ஐடி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், உயர்தர ஆராய்ச்சி மையங்களின் மையமாக ஓசூரை உருவாக்க திட்டம். அறிவுசார் வழித்தடத் திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். ஓசூரில் ரூ.400 கோடி மதிப்பில் டைட்டில் பார்க் நிறுவப்பட இருக்கிறது. ஓசூர் விமான நிலையத்தை உருவாக்க முக்கியத்துவம். இந்த விமான நிலையம் ஓசூரை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லும். பிற மாநிலங்களுக்கு சவால் விடும் நகரமாக ஓசூர் வளர்ந்துள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Dilip Kumar
செப் 14, 2025 16:27

Develop other district also like hosur


Rajasekar Jayaraman
செப் 12, 2025 07:29

ஒசூர் அமெரிக்காவில் உள்ளது என்று நினைக்கிறேன்.


venugopal s
செப் 11, 2025 19:59

சிறப்பு பொருளாதார மண்டலம் என்னும் SEZ தமிழகத்தில் தான் 49 உள்ளன. மஹாராஷ்டிராவில் 37, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் தலா 34, குஜராத்தில் 24 உள்ளன. அதேபோல் தொழிற்சாலைகள் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகபட்சமாக 39,000 உள்ளன.தமிழகம் பொருளாதார வளர்ச்சியில் பத்து சதவீதத்துக்கு அதிகமாக வளர்ச்சி அடைந்து முதல் மாநிலமாக உள்ளது.தனிநபர் வருமானத்தில் தேசிய சராசரியை விட மிகவும் அதிகம். இந்த சாதனைகள் எல்லாம் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் திராவிட கட்சிகளின் ஆட்சியின் சாதனைகளாக விளங்குகிறது.


xyzabc
செப் 12, 2025 00:28

அப்பப்பா எத்தனை ரூ 200. அப்போ நிதி பற்றாக்குறையை பத்தி பேச கூடாது. கடன் வாங்கியதில் முதல் மாநிலம்.


Kulandai kannan
செப் 11, 2025 19:12

அடிச்சு வூடு


M Ramachandran
செப் 11, 2025 18:34

ஐயகோ யார் வீட்டு பணம் மொய் எழுத படப்போகிறதோ.


என்னத்த சொல்ல
செப் 11, 2025 18:15

வந்திருக்கும் முதலீட்டாளர்களையும் நாற்காலியில் உட்காரவைத்து போட்டோ எடுத்திருக்கலாம்..


Yasararafath
செப் 11, 2025 18:07

திமுக அரசு கொள்ளை அடிப்பதற்கு தான் இந்த திட்டம்.


JANA VEL
செப் 11, 2025 18:06

தலையில் முன்னேறுது. உள்ளூரில் இவ்வளவு வரும் என்றால் இதற்கு ஏற்ப முன்வசதிகள் ஒன்றும் இல்லை. இதுலே வெளிநாட்டுக்கு போய் ஓணான் பிடிக்க போய் வந்திருக்காரு


Sivaram
செப் 11, 2025 17:37

TR பாலு ராஜா. கைய வைச்சா அது wrong ஆ போனதில்லே பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் hahaha ஹா ஹா ஹா


HoneyBee
செப் 11, 2025 16:38

இது எல்லாம் உங்க பிளாக் டப்பு தானே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை