உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வதேச புலிகள் தினத்தில் தமிழகம் பெருமையுடன் கர்ஜிக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சர்வதேச புலிகள் தினத்தில் தமிழகம் பெருமையுடன் கர்ஜிக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சர்வதேச புலிகள் தினத்தில் தமிழகம் பெருமையுடன் கர்ஜிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு: தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தரவுகளின்படி 306 புலிகள் தற்போது உள்ளன. வன ஊழியர்கள் மற்றும் கடின நிலப்பரப்புகளில் வாழ்விடங்களை காக்கும் வேட்டை எதிர்ப்புக் குழுக்களின் தோள்களில் இந்த வெற்றி தாங்கி உள்ளது. வனப்பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் நவீன உபகரணங்கள், தொழில்நுட்ப வசதிகள், கால்நடை மருத்துவர்களுடன், 1947 களப்பணியாளர் பணியிடங்களும் நிரப்பப்பட்டு உள்ளன. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதன் மூலம் வன வாழ்விடங்கள், வன ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது. குற்றங்களைத் தடுக்க, தமிழக வனத்துறை மற்றும் சிறப்புப் படையான வனவிலங்குகள் குற்றத்தடுப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு உள்ளது. புலிகளை காப்பதன் மூலம், நாம் நமது வனத்தின் ஆன்மாவையும் பாதுகாக்கிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

Ramalingam Shanmugam
ஜூலை 30, 2025 16:27

எடுத்த புலி


c.mohanraj raj
ஜூலை 29, 2025 21:00

எவனோ தவறாக எழுதிக் கொடுத்திருக்கிறார் புலி கர்ஜிக்காது புலி உறுமும். சிங்கம் தான் கர்ச்சிக்கும் ஒரு முதல்வருக்கு இது கூட தெரியவில்லை என்னடா காமெடி இது என்ன வெங்காய மாடல்


T MANICKAM
ஜூலை 29, 2025 19:38

ஏன் சாமீ எத்துணை நாளைக்குத்தான் எழுதி கொடுத்ததைய கர்ஜிப்பிங்க பால்ய பாடத்தில் படித்த ஞாபகம் இல்லையோ புலி உறுமும் என்று .


Sri
ஜூலை 29, 2025 19:20

இந்தியா சிங்கம் தமிழகம் வந்தபோது, நமது தமிழ் புலி கரைத்த புளியாய் அப்போலோவில் சென்று பதுங்கியது.


MARAN
ஜூலை 29, 2025 19:02

ஆற்று மணல் திருட்டை கண்டுபிடித்ததே திமுகதான் , பிறகு இயற்கை வளம் , மரம் , தாது என்று எல்லாத்தையும் கொள்ளை அடித்து வித்தாச்சி , நல்ல வேலை புளியை யாரும் வாங்குவது இல்லை அதன் எல்லைக்குள்ளும் யாரும் செல்லமுடியாது இல்லை என்றல் புலி கொட்டை கூட மிஞ்சி இருக்காது மலை முழுங்கி திமுக கும்பல் கைகளில் இருந்து.


Rajan A
ஜூலை 29, 2025 18:11

பழைய கெட்டு போன புளி


என்றும் இந்தியன்
ஜூலை 29, 2025 17:56

பாவமாக இருக்கு ஸ்டாலின் உன்னை பார்க்க நீ ஒரு செல்லாக்காசு என்று எல்லா இடத்திலும் / விதத்திலும் நீ சொல்லும் வாத்தைகள் உன் நிலைமையை பறை சாற்றுகின்றது. 1 புலி கர்ஜிக்காது உறுமும் 2 புலிகள் பத்தி பேசும் முன்னால் டாஸ்மாக்கினாட்டில் நடக்கும் வழிப்பறிகள் கொலை கொள்ளை போதை பொருள் விற்பனை பற்றி நீயொரு முதல்வனாய் யோசித்தாயா இல்லையா???இல்லை உன்னுடைய அனுமதியுடன் தான் இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றதா??? ஆகவே தான் போலீஸ் இதில் தலையிடுவதில்லையா???


Chandru
ஜூலை 29, 2025 17:43

சுடலை ஒண்னு தெரிஞ்சுக்கோ -புலி உறுமும் கர்ஜிக்காது . இதுகூட உனக்கு தெரியலையே


Sivak
ஜூலை 29, 2025 20:20

ஹா ஹா சிங்கம்தான் கர்ஜிக்கும் .... நம்ம புலிகேசிக்கு நல்லா உளர தெரியும் ....


என்றும் இந்தியன்
ஜூலை 29, 2025 17:28

புலிகளைப் பாதுகாப்பதன் வழியே, நம் காடுகளின் ஆன்மாவை பாதுகாக்கிறோம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். உளறலின் விடியலே உன் ஆட்சியின் நிலையை பார் நீயெல்லாம் ஒரு முதல்வர். 1 வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்.. 2 திருநெல்வேலியில் 11.7 கிலோ கஞ்சா பறிமுதல் 3 திருநெல்வேலியில் 400 போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது 4 எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை 5 ஆலங்குளம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது 6 நெல்லையில் இரு தரப்பினர் இடையே மோதல் - போலீசார் துப்பாக்கி சூடு 7 மாணவர் சேர்க்கை குறைவு: 80 தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கை நிறுத்தம் 8 சாலையில் கழன்று விழுந்த அரசு பேருந்தின் கதவு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி


senthilanandsankaran
ஜூலை 29, 2025 17:13

புலி என்றுமே கர்ஜிக்காது...புலி உருமும்.உனக்கு எதுவுமே வராது.


புதிய வீடியோ