உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது: அ.தி.மு.க.,வுக்கு முதல்வர் பதில்

பூசணிக்காயை கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது: அ.தி.மு.க.,வுக்கு முதல்வர் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் அ.தி.மு.க., எம்.பி., தம்பிதுரைக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பதிவில் கூறி உள்ளதாவது; மதுரை மக்களுக்கு அ.தி.மு.க., செய்த துரோகத்துக்கு நாடாளுமன்ற ஆவணங்களே சாட்சி. பூசணிக்காயைக் கட்டுச்சோற்றில் மறைக்கவே முடியாது. மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க., செய்த துரோகம் வீடியோ ஆதாரங்களுடன் அம்பலமானதும், “நான் மசோதாவைத்தான் ஆதரித்தேன், டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ஆதரிக்கவில்லை” என தம்பிதுரை மழுப்பி இருக்கிறார்.அ.தி.மு.க., ஆதரவில் நிறைவேறிய சட்டத் திருத்த மசோதாதான், டங்ஸ்டன் சுரங்கத்தை ஏலம் விடும் அதிகாரத்தை மாநில அரசிடம் இருந்து பிடுங்கி மோடி அரசிடம் கொடுக்கக் காரணமானது. அந்தச் சட்ட மசோதாவைத் தி.மு.க., எதிர்த்தது; அ.தி.மு.க., ஆதரித்தது.டங்ஸ்டன் உள்ளிட்ட சில அரிய கனிமங்களை மத்திய அரசு மட்டுமே ஏலம் விட முடியும் என்கிற சட்டத் திருத்தத்தைத்தான் தம்பிதுரை ஆதரித்தார். அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் தமிழக அரசு முன்வரவில்லை. இதே நிலை பல மாநிலங்களில் நீடிப்பதால், மத்திய அரசே ஏலம் விடுவதற்கான திருத்தச் சட்டத்தைத்தான் அ.தி.மு.க., ஆதரித்தது. இதன் அடிப்படையில் தான் அரிட்டாப்பட்டி சுரங்க ஏலத்தை மத்திய அரசு மேற்கொண்டது. அ.தி.மு.க.,வின் தொடர் துரோகத்தின் புதிய அத்தியாயம் அம்பலமாகி இருக்கிறது. புதுடில்லியில் எதிர்க்க வேண்டிய இடத்தில் ஆதரித்துவிட்டு, இங்கே நாடகமாடுவது எடுபடாது. தம்பிதுரை ஆதரித்தது எந்தத் திருத்தத்தை?மாநில உரிமையைப் பறித்து மத்திய அரசுக்கே அதிகாரம் வழங்குவதை அ.தி.மு.க., ஆதரிப்பது பச்சைத் துரோகம் அல்லவா? இத்தனையும் செய்துவிட்டு, இங்கே நாடகமாடுவது யாரை ஏமாற்ற?கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பார்கள். பழனிசாமியின் புளுகும் - புளுகுக்குப் புனுகு பூசும் நேர்த்தியும் எட்டு நொடிகூட நிலைப்பதில்லை. அவர் இனிமேலாவது உண்மைகளைப் பேசிப் பழக வேண்டும் என்று அக்கறையோடு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு தமது பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்பாவி
டிச 10, 2024 12:02

நோ ப்ராப்ளம். பூணிக்காயை நோண்டி உள்ளே இருக்கறதை கடாசிட்டு சோற்றை உள்ளே பிட்டு மறைச்சிருவோம்.


அப்பாவி
டிச 10, 2024 11:58

பிரியாணி அண்டாவுல எதை வேணும்னாலும் மறைக்கலாம். இது பிரியாணி அண்டாக் காலம்.


ராமகிருஷ்ணன்
டிச 10, 2024 08:35

திமுக ஆட்சி என்றால் பெரிய யானையே கட்டு சோத்தில் மறைத்து விடுவோம், எல்லாம் கட்டுமரம் கொடுத்த பயிற்சி.


அப்பாவி
டிச 10, 2024 07:41

யாரங்கே... கேளிக்கை வரி பத்து பர்சண்ட் மக்களிடமிருந்து வசூலிங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 10, 2024 07:41

தோல்லப்பட்டி பேர்ல பதிவைப்போட்ட உ பி க்கு சரக்குடன் ஒரு பிரியாணி பார்சல் ....


Kasimani Baskaran
டிச 10, 2024 06:30

அரிசி இழப்பு 1200 கோடி என்று சொன்னவர்களுக்கு பூசணிக்கைக்குள் சோற்றை மறைப்பதில் சிக்கலே இல்லை.


Mani . V
டிச 10, 2024 05:43

பார்ரா, பழமொழியை சரியாகச் சொல்லிவிட்டார்.


raja
டிச 10, 2024 03:32

நீங்க ஒரு பலா பழத்தையே கை பிடி சோத்துகுள்ள மறைகிரியே தலீவா...கோவால் புரமா கொக்கா...


மோகனசுந்தரம் லண்டன்
டிச 10, 2024 02:39

அயோக்கியர்களுக்கு எதுகை மோனையோடு பேசுவது கைவந்த கலை.


Saravana Kumar
டிச 10, 2024 00:10

ஜார்கண்ட்காரன் நிலக்கரி சுரங்கத்த மூட சொல்லி போராட்டம் செய்தால் இந்த சுடலை எங்கே போகும் திராவிட ஆட்சியில் முதலில் சந்தன மரம் வெட்டினார்கள் அதற்கு பிறகு யானைய கொன்றார்கள் பிறகு ஆத்து மணலை சுரண்டினார்கள் அதற்கு வசதியா அணையை பராமரிக்காமல் விட்டனர் தற்போது மலையை உடைத்து பணம் பார்க்குறானுங்க நாசமா போனவனுங்க


புதிய வீடியோ