உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு

தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள்: ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள் தான் தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள் என்று மாற்றுத்திறனாளிகள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.உள்ளாட்சிப் பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பங்கேற்புரிமை வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாற்றுத்திறனாளி ஒருங்கிணைப்புக் குழு சார்பில் அய்யன் வள்ளுவர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தை திறந்து வைத்து வைத்தார்.அதனை தொடர்ந்து ஸ்டாலின் பேசியதாவது:எல்லோரும் முன்னேறுவது சிலருக்குப் பிடிக்கவில்லை. எல்லோருக்கும் சமூக நீதி கிடைக்கக் கூடாது என நினைப்பவர்கள் தான் தி.மு.க., அரசு மீது பாய்கிறார்கள்.பாராட்டுக்காக, இங்கு வரவில்லை. அன்புக்காக வந்துள்ளேன்.கவனிப்பார் இல்லாமல் இருந்த வள்ளுவர் கோட்டத்தை புதுப்பொலிவுடன் மீட்டெடுத்துள்ளோம்.சென்னையின் மையத்தில் 1,400 பேர் அமரக்கூடிய வகையில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அய்யன் வள்ளுவன் என்ற இந்த அரங்கத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.அரசியலுக்காக, தேர்தலுக்காக செய்யவில்லை. உள்ளார்ந்து செய்கிறேன். மாற்றுத்திறனாளி குழந்தைகள் பயிலும் சிறு மலர் பள்ளி குழந்தைகளின் வாழ்த்தை, புன்னகையாகப் பெறும்போது தான் அந்த நாளே எனக்கு முழுமையடையும், இன்று நேற்று அல்ல, 42 ஆண்டுகளாக.நான் உங்களில் ஒருவன். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Rajah
ஜூன் 22, 2025 08:21

திராவிடர்கள் England vs India என்று எழுதுவார்கள். இந்தியர்கள் India vs England என்று எழுதுவார்கள்.


Rajah
ஜூன் 22, 2025 08:15

சனாதன, பிராமண எதிர்ப்பை மட்டுமே வைத்து சமூகநீதி என்ற பெயரில் ஆட்சியைப் பிடித்த இந்த திராவிடக் கூட்டத்தால் இதுவரையில் சாதியத்தை தமிழ் நாட்டில் ஒழிக்க முடிந்ததா? முடியாது, முடிக்கவும் மாட்டார்கள். தமிழர் அல்லாதவர்கள் தமிழ் நாட்டை ஆள எவ்வாறு திராவிடம் பயன்படுகின்றதோ அதே போல் சமூகநீதி என்ற சொல்ல தமிழர்களை ஏமாற்ற பயன்படுகின்றது. திராவிடம் சமூகஅநீதியின் பிறப்பிடம்.


Venkatesh
ஜூன் 22, 2025 07:51

தகுதி இல்லாத இடத்தில் இருந்து தரங்கெட்ட, ஒழுக்கங்கெட்ட, மானங்கெட்ட, நீதி கெட்ட, மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறோம் என்று தெரிந்தும், பெரும்பாலான மக்கள் இப்படி ஒரு கேவலமான ஆட்சியா என்ற நிலையிலும் முட்டுக்கொடுக்கும் மாடல் தான் இவரது மாடலோ


Kasimani Baskaran
ஜூன் 22, 2025 07:15

ஸ்டாலின் அரசியலுக்கு வரமாட்டார் என்று முக சொன்னார். அது பலிக்கவில்லை. என் மகன் அரசியலுக்கு வரமாட்டார் என்று ஸ்டாலின் சொன்னார் - ஆனால் உதய நிதி அரசியலுக்கு வந்தார், எளிதாக துணை முதல்வரானார் - அதுவும் பலிக்கவில்லை. கனிமொழிக்கே அல்வா கொடுக்கும் தீம்க்கா வரலாறு காணாதது. போஸ்டர் ஒட்டும் தொண்டனுக்கு அல்வா கொடுப்பது ஒன்றும் சிரமமான காரியம் இல்லை.


V RAMASWAMY
ஜூன் 22, 2025 07:13

எல்லோருக்கும் கிடைத்தால் ஏன் பாயவேண்டும்? ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்துக்கொண்டிருப்பதால் தான் பாதிக்கப்பட்டவர்கள் அநியாயத்தை எதிர்த்து நியாயமாக போராடும் வைகையில் பாய்கிறார்கள். இதில் வருத்தப்படுவதற்கு ஒன்றுமில்லை, திருத்திக்கொள்ளவேண்டியது தான் அழகு.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 22, 2025 06:42

சமூக நீதி ? மாற்றுமதத்தினர் கோவிலில் வேண்டுமென்ற உள்நுழைந்து அசிங்கங்களை செய்யும் கூட்டணி கட்சி மீது என்ன நடவடிக்கை எடுத்த்தீங்க , நீங்க சொல்லித்தான் அவன் செய்திருப்பான் என்று ஊடகங்களில் செய்தி கசிகின்றனவே ?


ராமகிருஷ்ணன்
ஜூன் 22, 2025 06:30

திமுகவின் 1000 ரூபாய் திட்டங்கள் எல்லாமே தனது ஓட்டு வங்கி பெருக்கும் திட்டங்கள். பேனா வைப்பது போன்ற சுய தம்பட்ட திட்டங்கள். மக்களின் அத்தியாவசியமான தண்ணீர், மின்சாரம், கல்வி, மருத்துவம் போன்றவற்றை கவனிக்க வில்லை. எல்லா இடங்களிலும் 80 சதவீத சுருட்டு. உதாரணம் முதல்வர் திறந்து 3 ம்நாள் தானாக இடியும் கட்டடங்கள். இவர்களின் ஆட்சியின் தரத்திற்கு உதாரணம். மேலு‌ம் தினம் தினம் விளம்பர போட்டோ சூட்டிங் நடத்தி, அதை அல்லக்கை ஊடகங்கள் மூலம் தண்டோரா போட்டுக் கொள்வதும் மக்களை மிகுந்த எரிச்சல் அடைய செய்துள்ளது. ஊழல் ரத்தம் கொண்ட திமுக எந்த ஜென்மத்திலும் திருந்த வாய்ப்பே இல்லை. தமிழகத்தின் கேடு, அவமானம் திமுக. ஆட்சி செய்ய எந்த தகுதியும் திறமையும் இல்லாத திமுக


Mani . V
ஜூன் 22, 2025 03:19

நீங்கள் மக்களுக்கு நல்லது செய்தால் ஏன் பாயப் போகிறார்கள்? சரி, சமூக நீதி பேசும் நீங்கள், உங்கள் மகனுக்கு முன்பிருந்தே கட்சிக்கு மாடாய் உழைக்கும் ஒரு அடிமட்ட தொண்டனுக்கு, உங்கள் மகனுக்கு கொடுத்த பதவியை கொடுத்து சமூக நீதியை நொட்டலாமே ஸாரி நிலைநாட்டலாமே?


R.MURALIKRISHNAN
ஜூன் 21, 2025 23:52

ஆனா, மொத்த தமிழ்நாடும் உம்முட கட்சி மேல் பாயுதே, எதுக்கு சார்


Matt P
ஜூன் 21, 2025 23:09

புலி பாயத்தான் செய்யும். எலி பதுங்கத்தான் செய்யும். குறிப்பிட்ட மதத்திற்கு எதிர்ப்பு. சாதி வைத்து தொகுதி ஒதுக்கீடு. சாதி சார்பாக அரசியல் பல சாதி குழந்தைகளுக்கு படிப்பு வராது என்று அவர்கள் அறிவை வளர்க்க தடை தேர்வு அவர்களுக்கு ஒத்து வராது என்று அரசியல் செய்வதெல்லாம் சமூக நீதியா?