உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போர்க்கால அடிப்படையில் எல்லாம் நடக்குது; மழை கொட்டிய மதுரை பற்றி முதல்வர் அப்டேட்

போர்க்கால அடிப்படையில் எல்லாம் நடக்குது; மழை கொட்டிய மதுரை பற்றி முதல்வர் அப்டேட்

சென்னை: மழையால் பாதிக்கப்பட்டுள்ள மதுரையில் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவின் விவரம் வருமாறு; மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அறிந்து, உடனடியாக அங்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோரை அனுப்பி வைத்தேன். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு கள நிலவரம் குறித்து அறிந்து,தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளேன். குடியிருப்புப் பகுதிகளில் மழை நீரை வடிய வைக்க ராட்சத மின் மோட்டார்களும், பொறியாளர்களும், பணியாளர்களும் அருகில் உள்ள நகராட்சிகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தேவையான வசதிகளுடன் மூன்று முகாம்களில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் நேற்றே அனுப்பிவைக்கப் பட்டுள்ளார். தலைமைச் செயலாளர் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையர் ஆகியோர் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மதுரை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இயல்பு நிலையைக் கொண்டு வரப் போர்க்கால அடிப்படையில் அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 26, 2024 21:23

அண்ணன் அஞ்சா நெஞ்சன் சவுக்கியமா–ன்னு விசாரிச்சீங்களா ????


என்றும் இந்தியன்
அக் 26, 2024 18:15

Borrrrr கால அடிப்படையில் எல்லாம் நடக்கின்றது என்று அர்த்தம் கொள்ளுங்கள்


Sivakumar
அக் 26, 2024 13:44

Why are no preventive measures taken in advance to save millions of people from such hardships? So dumb administration and so dumb


sundarsvpr
அக் 26, 2024 13:11

ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் குளம் கண்மாய்களில் நீர் வழிந்து ஓடியதை வேடிக்கை பார்த்தோம். வீட்டு வாசலில் ஓடும் நீரில் காகித கப்பல் விடுவோம். இப்போது சிறிய மழையில் போர் கப்பல் நிற்கும் நிலையில் வீதியில் தண்ணீர் கடல்போல் நிற்கிறது. போர்க்கால அடிப்படை பணி தேவையில்லை. ஹிந்து ஆலயங்களை மட்டும் இடிப்பதில் ஆர்வம் காட்டும் ஸ்டாலின் தலைமை அரசு மூடப்பட்ட நீர்நிலை வாய்க்கால்களை கண்டுபிடிக்க ஏன் ஆர்வம் காட்டவில்லை.?


சமீபத்திய செய்தி