உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பல்கலை துணைவேந்தர்களுடன் 16ல் முதல்வர் ஆலோசனை

பல்கலை துணைவேந்தர்களுடன் 16ல் முதல்வர் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, பல்கலை துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம், வரும், 16ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.பல்கலை துணைவேந்தர்களை நியமிக்கும் மற்றும் நீக்கும் அதிகாரம் உட்பட, பல்கலைகள் தொடர்பாக கவர்னரிடம் இருந்த அதிகாரங்களை, தமிழக அரசுக்கு மாற்றம் செய்யும், 10 சட்ட மசோதாக்களுக்கு, கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில், சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.பத்து சட்ட மசோதாக்களும், சட்டமாக்கப்பட்டு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தலைமை செயலகத்தில், வரும், 16ம் தேதி மாலை, தமிழகத்தில் உயர் கல்வியை மேம்படுத்துவதற்காக, அனைத்து பல்கலைகளின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் முறையாக, தலைமை செயலகத்தில், முதல்வர் தலைமையில், துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

Keshavan.J
ஏப் 15, 2025 11:27

என்ன ஆலோசனை பேரம் நடத்தபடும். 2026ல் ஆட்சி மாறும் பொது இவர்கள் எல்லோரையும் தூக்கி அடிக்கணும். இவர்கள் போட்ட காசு வீணா போகணும் .


சிந்தனை
ஏப் 14, 2025 20:29

நான் படிக்கல... எனக்கு படிப்பும் பிடிக்காது... எனக்கு படிப்பு வராது... எனக்கு படிக்கவும் பிடிக்காது... படிச்சவனையும் பிடிக்காது... ஆனால் நான் தான் தலைமை ஆசிரியராக இருப்பேன்....


ஆரூர் ரங்
ஏப் 14, 2025 16:09

புதுசா எதுவும் பேசப்போவதில்லை அல்ரெடி TOLDED டோல்டட்.


ஆரூர் ரங்
ஏப் 14, 2025 12:32

நூறு கோடி ஒரு தரம் நூறு கோடி ரெண்டு தரம். நூறு கோடி மூன்று தரம். ஏலம் ஓவர்.


nb
ஏப் 14, 2025 11:56

சரியா சொல்லுங்க பாப்போம்


Muralidharan S
ஏப் 14, 2025 11:39

தமிழகத்தில் சமச்சீர் கல்வி என்ற பெயரில் பள்ளிக்கல்வி நாசமாகி விட்டது. இனி அரசியல் வியாதிகளின் கட்டுப்பாட்டில் உயர் கல்வித்துறை.. ஆபாச பேட்சாளர் - முன்னாள் உயர் கலவி - pornமுடி போன்றவர்கள் கைக்கு போனால் .... யார் அந்த சார் - கையில் கல்வி சிக்குண்டு போனால்.. அண்ணா பல்கலைக்கழக புகழ் - ஞானசேகரன் போன்றவர்கள் பல்கலைக்கழகங்களில் உலாவ தொடங்கினால் .. நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.. தமிழகத்தை அதன் மாணவர்கள் எதிர்காலத்தை நினைக்கவே வருத்தமாக இருக்கிறது..


பாமரன்
ஏப் 14, 2025 14:36

ஐ லைக் தட் ...


xyzabc
ஏப் 14, 2025 11:38

பாவம் இந்த துணை வேந்தர்கள். அறிவு, படிப்பு வேஸ்ட் என்று உனரும் தருனம்


Venkateswaran Rajaram
ஏப் 14, 2025 11:28

மீட்டிங் எதுக்குன்னா வி சி போஸ்டுக்கு ரேட் பிக்சிங் ..படிப்பறிவில்லா துண்டுசீட்டுக்கு நன்கு படித்தவர்களிடம் இருந்து எவ்வளவு வருமானம் கிடைக்குது பாருங்க ..எல்லா படிப்ப விடவும் உயந்தது படிப்பே தேவை இல்லாத அரசியல்வாதி ஆகுறதுதான் ....அரசியல்வாதி ஆகுறதுக்கு தகுதி நல்லா விஞான ரீதியா திருட தெரிஞ்ச போதும்


பெரிய ராசு
ஏப் 14, 2025 10:56

சரி இந்த கூட்டத்தை கூட்டி மிச்சர் தின்னுட்டு தலையை ரெண்டு ஆட்டிட்டியே போயிட்டு இருக்கவேண்டியது மக்கள் வரிப்பணம் அம்பேல் ...சுடாலினுக்கு எண்ணத்தெரியும் ? எதுக்கு இந்த கூட்டம் ..


Oru Indiyan
ஏப் 14, 2025 10:43

எந்த தீர்ப்பில் முதல்வர் வேந்தர் என்று சொல்லி இருக்கிறது? சரி. நான் வேந்தர் என்றால் என் மகன் துணை வேந்தர். சரியா? யூ ஆல் கெட் அவுட்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை