உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை; நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 8 பேருக்கு பாராட்டு

கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதனை; நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 8 பேருக்கு பாராட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவை மாநகராட்சிப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 8 பேர், இலவச பயற்சி பெற்று இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த மாணவர்கள் 8 பேரை கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.கோவை மாவட்டம், சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், நீட் தேர்விற்கான இலவச பயிற்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 158 பேர் பயிற்சி பெற்றனர். அவர்களில் 43 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில், முதல் முயற்சியில் ஆறு பேரும், இரண்டாவது முயற்சியில் இரண்டு பேரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவிகள் 7 பேர், மாணவர் ஒருவர்.இவர்களை பெற்றோருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து, கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் பாராட்டினார். சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முத்துராணியை கலெக்டர் பவன்குமார், கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் ரங்கநாயகி, எம்.பி., கணபதி பி.ராஜ்குமார் ஆகியோர் கவுரவித்தனர்.அதேபோல், வடக்கு கோவை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அபிநந்தா மற்றும் சாதனா, மேற்கு மாநகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியைச் சேர்ந்த ஜி.வித்யாஸ்ரீ, எஸ்.ஆதிஷா மற்றும் ஜனனி,ஒப்பணக்கார தெருவில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் நவ்பியா; மற்றும் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஞானேஸ்வரி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.200க்கு மேல் மதிப்பெண்கள் பெற்ற எட்டு மாணவர்களில் நான்கு பேர் 7.5% ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

D.Ambujavalli
ஜூன் 18, 2025 18:10

ஐந்தோ, ஐம்பதோ லட்சம் கையெழுத்து வாங்கி, neet ஐ ஒழிக்கப் போகும் மகாராசான்கள், இந்த மாணவர்களின் வழியில் அடுத்த முறைகளில் இன்னும் பல மாணவர்கள் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து இவர்களின் ‘கோடி, ஆயிரம் கோடி’ பசிக்கு உலை வைத்துவிடுவார்களே என்று வயிற்றைக் கலக்குகிறதா ?


என்றும் இந்தியன்
ஜூன் 18, 2025 16:34

அப்போ நீட் தேர்வு வேண்டாம் என்று உளறி உளறி கொட்டிக்கொண்டிருக்கும் திருட்டு முரடர்கள் கயவர்கள் கட்சி முதல் அதை எதிர்க்கும் மூளையற்ற சொல்லே சொல்லிக்கொண்டிருக்கும் மற்றும் பல அரசியல் வியாதிகளின் நிலை அய்யகோ என்ன சொல்வது


சிவா
ஜூன் 18, 2025 15:29

மா மணிகள், வாழ்த்துக்கள்


lana
ஜூன் 18, 2025 13:57

நீட் ஏழைகளுக்கு எட்டா கனி ன்னு சிலர் உருட்டு வார்கள். அவர்களுக்கு ஒரு தகவல். நீட் க்கு முன்பு 12th மதிப்பெண் அடிப்படையில் எ‌ன்ற போது பெரும்பாலான தனியார் பள்ளிகள் குறிப்பாக ராசிபுரம், நாமக்கல் கோழி பண்ணை பள்ளிகளில் 11th பாடம் 6 மாதம் மட்டுமே நடத்தி விட்டு 12th பாடம் 1.5 ஆண்டுகள் நடத்தி வந்தனர். இந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றால் சில லட்சங்கள் ஃபீஸ். இன்று அந்த நிலை இல்லை. எனவே நன்கு புரிந்து படிக்க வேண்டும் அதற்கு சொல்லி கொடுக்க நல்ல ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். மேலும் பாடத்திட்டம் சிபிஎஸ்இ syllabus ஐ அப்படியே பின்பற்ற வேண்டும். உடனே நமது மொழி கலாச்சாரம் வரலாறு பாதிக்கும் ன்னு உருட்ட வேண்டாம். science இல இது எதுவும் பாதிப்பு இல்லை. அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டும். வெறும் உணர்வு பூர்வமாக முடிவு எடுக்க கூடாது


Vijay D Ratnam
ஜூன் 18, 2025 13:54

வாழ்த்துக்கள் கண்மணிகளா வாழ்த்துக்கள். கலக்குங்கள். இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் சுமார் 60 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம்னு தெருவா தெருவா போய் கதறி வாக்கு கேட்டு வென்ற அப்பனையும் மவனையும் மக்கள் புரிந்துகொண்டு விட்டார்கள். நாங்கள் நீட்டை ஒழிப்போம் அந்த ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்து அள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். சரி இப்போ நம் கண்மணிகள் இறங்கி விளையாட ஆரம்பித்துவிட்டார்கள். இனி அடுத்து வரும் ஆண்டுகளில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடம் என்ற டார்கெட் செய்வார்கள். ஏண்டா இந்த நீட்டை கொண்டு வந்தோம் என்று சிந்திக்கும் அளவுக்கு . தமிழகத்தையும் தாண்டி இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவ கல்வி இடங்களை பிடிப்பதில் நம் பிள்ளைகள் சாதனை படைக்கும் காலம் மிக விரைவில் வரும். தனது ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் பதினோரு மருத்துவக்கல்லூரிகளை கொண்டு வந்து நீட் தேர்வில் வெல்லும அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசு மருத்துவக்கல்லூரிகளில் 7.5 சதவிகிதம் இடங்களை வழங்கிய எடப்பாடி பழனிசாமி உண்மையிலேயே க்ரேட் மேன் .


V Venkatachalam
ஜூன் 18, 2025 13:53

ஐயையோ "நம்ம யூனிடி இன் டைவர்ஸிடி" தேசிய மொழி புகழ் அக்கா இப்பவும் மெழுகு வத்தி ஊர்வலம் நடத்துமா?


பெரிய குத்தூசி
ஜூன் 18, 2025 13:53

200 மதிப்பெண்ணு இவளவு அரசியல் தேவை இல்லை. மத்திய அரசு குடுக்கற காச சொந்த கஜானா போட்டுக்கிட்டா எப்படி அரசு பள்ளி தரம் உயரும். இங்கு அவனவன் 720 க்கு 600-650 எடுத்துக்கிட்டு வரிசையில நிக்கிறான். 720 க்கு 200 மார்க்கு எடுக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்து நல்ல உயிர் காக்கும் மருத்துவர்களை நாம் பெறமுடியுமா என்பது சந்தேகமே. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, பயோ பாடங்களை புரிந்து படித்து நீட் பரிட்சை எழுதினால் நல்ல மார்க் 500/720 மேல் எடுத்து தலை சிறந்த மருத்துவர்களாக முடியும். 200 மார்க் என்பது மோக் மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பது, மனப்பாடம் பண்ணி பரிசை எழுதுவது கவைக்கு ஆகாது. இது போன்ற மருத்துவ மாணவர்கள் தரம் கேள்விக்குரியது.


Anantharaman Srinivasan
ஜூன் 18, 2025 13:09

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடுமென்பது போல் மாநகராட்சிப் பள்ளிகளில் படித்தாலும், ஏழை மாணவ மாணவியருக்கு இலவச பயற்சி கொடுத்தால் மருத்துவ நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாத்தியம் என்பது நீருபிக்கபட்டுள்ளளது.


Barakat Ali
ஜூன் 18, 2025 13:08

நீட் தேர்வில் கோவை மாநகராட்சி மாணவர்கள் சாதனை.. எங்கே திமுக செல்வாக்கு குறைவாக இருக்கிறதோ அங்கே நீட் தேர்வில் சாதனை... சரியாத்தான் சொல்றேனோ ????


NRajasekar
ஜூன் 18, 2025 12:39

எத்தனை ஏழை கிராம மாணவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் எவரெல்லாம் நமக்கு மருத்துவ படிப்பு எட்டாகனி என்று இருந்தவர்களும் இன்று நீட் இருப்பதால் அவர்களுக்கும் மருத்துவ படிப்பு சாத்தியமாயிற்று இந்த அரசும் கட்சிகார்ர்களும் மருத்துவ அஸோஷேயன் போன்ற அமைப்புகளும் எதிர்ப்பது இவர்கள் வாரிசுகள் கோடிகளை கொட்டி மருத்துவ படிப்பை தங்கள் வாரிசுக்களுக்கு மட்டுமே என்று இருந்தது இன்று இல்லை என்பதாலும் வணிக முறையில் கோடிகளை கொள்ளையடிக்க முடியாத்தனாலும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை