உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஞ்சா - மெத்தபெட்டமைனில் கோவை செழிக்கிறது!

கஞ்சா - மெத்தபெட்டமைனில் கோவை செழிக்கிறது!

அவிநாசி: ''கல்வி மற்றும் தொழிலில் செழிக்க வேண்டிய கோவை, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதைப்பொருட்களில் செழிக்கிறது,'' என்று அவிநாசியில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற மக்கள் சந்திப்பு யாத்திரை நேற்று திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் நடந்தது.

அதில் நடந்த பொதுகூட்டத்தில், நயினார் நாகேந்திரன் பேசியதாவது:

கொங்கு மண்டலம் என்றால் தனி சிறப்பு, மரியாதை உண்டு. அங்கு வருத்தமான சில சம்பவங்கள் நடப்பது, வேதனையளிக்கிறது. விடியலை தருகிறோம் என்று கூறிய அரசு, இன்று விடியா அரசாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பாக உள்ள நகரம் கோவை என்று சொன்னார்கள். தற்போது, பாதுகாப்பு இல்லை. போதை பொருட்கள் புழக்கம், பள்ளி, கல்லுாரி வாசல்களில் நடக்கிறது. போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக வர, 25 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து வருகின்றனர். கூட்டு பாலியல் விவகாரத்தில், தி.மு.க. கூட்டணியில் உள்ள, கட்சி தலைவர் ஒருவர், 8:00 மணிக்கு அப்பெண் அங்கு எதற்கு செல்கிறார் என்று பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். இதனை முதல்வர் கண்டிக்கக்கூடவில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாளைக்கு தேர்தல் வைத்தாலும், 234 தொகுதியில், தி.மு.க., 'டெபாசிட்' இழக்கும். கல்வி, தொழிலில் செழிக்க வேண்டிய ஊர், கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதை பொருளில் செழிக்கிறது. முதல்வருக்கு ஒரே கவலை, 2026 தேர்தலில், துணை முதல்வர் உதயநிதியை, முதல்வராக்க வேண்டும் என்பதுதான். இது பகல் கனவு. ஒரு போதும் நடக்காது. மத்திய அரசு தமிழகத்துக்கு, 14 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பு உட்பட நாட்டுக்கு பல நல்ல திட்டங்களை வழங்கியுள்ளது. அ.தி.மு.க. பொது செயலாளர் பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி, 2026 தேர்தலில் வென்று, மக்களுக்கான திட்டங் களை வழங்கும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை