உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி

வால்பாறையில் சோகம்; காட்டு யானை தாக்கி பாட்டி,பேத்தி பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: வால்பாறை அருகே காட்டு யானை தாக்கியதில் பாட்டியும், பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது வாட்டர் பால்ஸ் எஸ்டேட். இங்கு இன்று அதிகாலை 3.30 மணிக்கு கூட்டமாக வந்த யானைகள் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது. அங்கு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அசாலா,55, என்பவரை தாக்கியது. பின் அவரது பேத்தி ஹேமாசிரியையும் மிதித்துள்ளது. இந்த சம்பவத்தில் இருவரும் உயிரிழந்தனர்.இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த பாட்டி மற்றும் பேத்தியின் சடலத்தை மீட்டு உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.வால்பாறையில் காட்டு யானை தாக்கி பாட்டியும், பேத்தியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raja
அக் 13, 2025 08:17

அந்தோ பரிதாபம்...இருந்தாலும் கள்ளசாராயம் குடித்து இறந்தால் ருவா 10 லட்சம் நிவாரணம் கொடுக்கும் நம் திராவிட மாடல் ஆட்சி நடத்தும் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் இதுக்கு குறைந்தது ரெண்டு லட்சம் ருவாய் ஆவது நிவாரணம் என்று அறிவிப்பு மட்டும் வெளியிடுவார் என்று நம்புவோமாக தமிழா...


முக்கிய வீடியோ