உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோவில் அருகே தனிப்படை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப்பிடித்தனர். குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zldq7fps&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் கோவை கலெக்டர் அலுவலகம் அருகில் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி அதிமுக மாநில மகளிர் அணி செயலாளரும் முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசும்போது, 'பாதிக்கப்பட்ட பெண் மூலம் போலீஸ் நிலையத்தில் வைத்து அந்த குற்றவாளிகளை அடையாளம் காண செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும். பெண்களை பாதுகாக்க அதிமுக சார்பாக மகளிருக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை செய்து வருகிறோம். தமிழகத்தில் இன்று 60 வயது பாட்டிக்கு பெப்பர் ஸ்ப்ரே கொடுக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Padmasridharan
நவ 05, 2025 11:23

மதுக் கடைகளும், போதையில் இருக்கும் மக்களிடம் காவலர்கள் ஃபோட்டோ, வீடியோ எடுத்து மொபைல் / பணம் அதிகார பிச்யெடுப்பதுதான் குற்றங்களுக்கு அதிகமாக வழி வகுத்திருக்கிறது சாமி.


Rajkumar Ramamoorthy
நவ 05, 2025 00:35

மகளிர் அணி என்று சொன்னால் அது அதிமுக தான்.


Priyan Vadanad
நவ 04, 2025 17:39

இதற்காகவும் வலியுறுத்தி போராடுங்கள். இரவு நேரத்தில் கள்ளத்தனமாக சுற்றி திரிபவர்களையும், ஒதுக்குப்புறம் தேடி அலைபவர்களையும் பிடித்து பாதுகாப்பாக காவல் நிலையத்தில் வைத்திருந்து மறுநாள் அவர்களை பத்திரமாக போலீஸ் பாதுகாப்பில் அவரவர் இருக்குமிடம் கொண்டு சேர்த்துவிட்டால் நல்லது.


RAMESH KUMAR R V
நவ 04, 2025 17:34

இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்விலும் கடுமையான தண்டனை கொடுப்பேன் என்று சொல்வது சரி, ஆனால் இதுபோன்ற வேறொரு நிகழ்வுகள் நடக்காமல் செய்வதே திறைமையான ஆட்சி. அதுவே காலத்தின் கட்டாயமும் கூட.


S.V.Srinivasan
நவ 04, 2025 15:36

நீங்கெல்லாம் ரொம்ப லேட் அம்மா. இத்தனை நாளா எங்க போயிருந்தீங்க????


Arul. K
நவ 04, 2025 15:27

பாதிக்கப்பட்ட இருவர்தான் முதல் குற்றவாளி


GMM
நவ 04, 2025 14:53

போலீஸ், நீதிக்கு பயம் இல்லாத போது, திட்டமிடல் தேவையில்லை.


Jey a
நவ 04, 2025 14:53

தெர்தல் வெறுத்து அதான்


Senthoora
நவ 04, 2025 14:04

பொள்ளாச்சி சம்பவத்துக்கு இப்படி குதிக்கவில்லையே,


Suresh
நவ 04, 2025 15:00

அப்பவெல்லாம் அவனுங்க கோமாவுல இருந்தானுங்களாம்..தூத்துக்குடி துப்பாக்கிசூட்டை டிவி பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டுதாம்.


சமீபத்திய செய்தி