உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவெகவுக்கு கம்யூ., கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு

தவெகவுக்கு கம்யூ., கட்சிகள் நிபந்தனையற்ற ஆதரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பது என்று தலா 2 எம்எல்ஏ.,க்களை வைத்துள்ள இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் கட்சிகள் முடிவு செய்துள்ளன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=piv8rjp6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வென்ற தவெக., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது. ஆனால், போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் ஆட்சி அமைக்க விஜய்யை கவர்னர் அழைக்கவில்லை.இந்நிலையில் கம்யூ., கட்சிகள் மற்றும் விசிகவிடம் தவெக சார்பில் ஆதரவு கோரி கடிதம் தரப்பட்டது. நேரிலும் சென்று நிர்வாகிகள் பேச்சு நடத்தினர்.இதை தொடர்ந்து இன்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், இரு கம்யூ., கட்சிகளும், தவெக அரசை வெளியில் இருந்து ஆதரிக்க முடிவு எடுத்துள்ளன. இதற்கான கடிதத்தை இந்திய கம்யூ., இன்று அதிகாரபூர்வமாக வழங்கியது. இதே முடிவை மார்க்சிஸ்ட் கட்சியும் எடுத்துள்ளது. அதற்கான ஆதரவு கடிதத்தை இ மெயில் மூலம் அக்கட்சி அனுப்பி இருக்கிறது. இந்த இரு கட்சிகளையும் பின்பற்றி விசிகவும் விஜய் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை