உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கம்யூனிஸ்டுகள் ஒட்டுண்ணி: நா.த.க., சீமான் கடும் ஆவேசம்

கம்யூனிஸ்டுகள் ஒட்டுண்ணி: நா.த.க., சீமான் கடும் ஆவேசம்

சென்னை : ''காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட கட்சிகளின் ரத்தத்தை உண்ணி போல் உறிஞ்சுகின்றன. நான் திராவிட பன்றிகளை ஒழிக்க வந்த புலி,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: மலை இல்லை என்றால் மழையை பெற முடியாது. மழை இல்லை என்றால் வளம் இல்லை. அனைத்திற்கும் அடிப்படை மலை என்பதை புரிந்து, அதை காக்க, அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். நம்மால் கடைகளில் குடிநீர் வாங்கி குடிக்க முடிகிறது. மற்ற உயிரினங்கள் என்ன செய்யும் என, யாரும் சிந்திக்கவில்லை. எனவே, தண்ணீர் விற்பனைக்கு தடை விதிக்கலாம்.மலையை அழித்து விட்டால், புதிதாக உருவாக்க முடியாது. வயிறு முழுக்க பசியுடன் விமானத்தில் பறப்பது வளர்ச்சி அல்ல. கல்வி, மருத்துவம், தண்ணீர் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிலை மாற வேண்டும். அண்ணா பல்கலை மாணவி பாலியல் குற்றச்சாட்டுக்கு, கனிமொழி வாய் திறந்தாரா? தினமும் பள்ளி மாணவியரை, ஆசிரியர்கள் துன்புறுத்துவதில் உங்கள் கருத்தென்ன? அதற்கெல்லாம் பதில் கூறாமல், என் விஷயத்தில் மட்டும் கருத்து கூறுவது ஏன்? காரணம், என் மீதான நடுக்கம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிட கட்சிகளின் ரத்தத்தை உண்ணி போல் உறிஞ்சுகின்றன. மும்மொழி கொள்கையில் உங்கள் நிலைப்பாடு என்ன; கேரள அரசு குப்பை கொட்டுவதில் என்ன நிலைப்பாடு என கூறுங்கள்.கம்யூனிஸ்டுகள் கார்ப்பரேட் முதலாளிகளாகி விட்டனர். தேவை இல்லாமல் கருத்து கூறக்கூடாது. அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தின்போது, என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? கேவலம் நான்கு சீட்டுகளுக்கு, அனைத்து அநீதிகளையும் சகித்துக் கொண்டு இருக்கின்றனர்.அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில், போராட விடாமல் கைது செய்தனர். அரசு சம்பந்தப்பட்டிருப்பதால், போராட அனுமதிக்கவில்லை. புதிய கல்வி கொள்கையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் நிலைப்பாடு என்ன?திராவிட பன்றிகளை வேட்டையாடி ஒழிக்க வந்த புலி நான். ஒட்டுண்ணிகள் ரத்தம் குடித்துவிட்டு, ஓரமாக சென்று விட வேண்டும். கம்யூனிஸ்ட் என ஒரு கட்சி உள்ளதா? நான் தான் உண்மையான கம்யூனிஸ்ட். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

nalledran
மார் 03, 2025 16:09

கம்யூனிஸ்ட்டுகள் குறித்து சீமான் விமர்சிக்கட்டும். அதற்கு உரியவர்கள் உரிய முறையில் பதிலளிப்பார்கள்.


தஞ்சை மன்னர்
மார் 03, 2025 14:20

முதலில் உனக்கு நாவடக்கம் வேண்டும் இன்னும் கொஞ்சம் நாள்தான் இப்படியே பேசிக்கொண்டே இரு போகுமிடத்தில் ...


saiprakash
மார் 03, 2025 13:35

சப்போர்ட் பண்ணுவாங்க


Mecca Shivan
மார் 03, 2025 11:39

சைமன் கம்யூனிஸ்டுகளை பற்றி கூறிய கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிக்கேறேன். ஒட்டுண்ணிகளை கேவல படுத்தாதீர் .. தினமும் விமான பயணம், பல லட்சம் லிட்டர் தண்ணீர் செலவழித்து மண்ணையும் நீர் நிலைகளையும் அசுத்தப்படுத்தி தயாரிக்கப்படும் ஜீன்ஸ் போட்டுகொண்டு, சொகுசு காரில் ac போட்டுகொண்டு பயணிக்கும் சைமன் சுற்று சூழல் பற்றி பேசுவது செம காமெடி .. கதர் அல்லது காட்டன் சட்டை கால்ச்சட்டை அணிந்துகொண்டு ரயில் மூலம் பயணம் செய்து சாதாரண வாகனத்தில் பயணம் செய்தால் இவர் பேசலாம் ..


Suppan
மார் 03, 2025 11:35

கம்யுனிசமே எதற்கும் உதவாத குப்பை. அது என்றைக்கோ காலாவதி ஆகிவிட்டது. அதை இன்னும் தூக்கிப்பிடித்துக்கொண்டு ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூமுட்டைகளை என்னவென்று சொல்வது?


Kalyanam Siv
மார் 03, 2025 11:12

உண்மையிலேயே கம்யூனிஸ்ட் நிலை அதுதான். இவர்கள் யாரை காப்பாற்றுவார்கள்


Kjp
மார் 03, 2025 11:09

தமிழ் நாட்டு கம்யூனிஸ்டுகள் பற்றி மிகச் சரியாக சீமான் சொல்லி இருக்கிறார்.இஙகு கம்யூனிஸ்டுகளே இல்லை.பெட்டி வாங்கும் அடிமைகள்.ஒப்புக்கு கூட அரசை எதிர்த்து அறிக்கை கூட விட மாட்டார்கள்.


Sidharth
மார் 03, 2025 11:06

கோபால் ஜியின் நண்பன்


Kasimani Baskaran
மார் 03, 2025 10:41

பொது உடமை பேசுபவன் தனது பிள்ளைகளை ஜனநாயக நாடான அமெரிக்காவில் படிக்க வைப்பான். பொது உடமை பேசிக்கொண்டு தீம்க்காவின் நிதி பெறுவார்கள். சுவெ போன்றோர் முழு அளவு திராவிட ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் எம்பியாகவே செயல்படுவார்கள். ஒரு பக்கம் கொள்கை கோட்பாடெல்லாம் ஓரமாக வைத்து விட்டு தீம்க்காவிடம் பணம் வாங்கிக்கொண்டு சேவை செய்வது உலகிலேயே பழமையான தொழில் செய்வது போலத்தான்.


rama adhavan
மார் 03, 2025 10:13

சீமான் கருத்து அசைக்க முடியாத உண்மை. நானெல்லாம் படிக்கும்போது 8+8 கிமி நடந்துதான் 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை செருப்பு இல்லாமல்தான் படித்தேன். ஈயம் பூசிய பித்தளை தூக்கு போசியில் தான் அங்காங்கு உள்ள குடிசைகளில் தண்ணீர் வாங்கிக் குடிப்போம். இன்று வரை நன்கு உள்ளோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை