உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஈரோடு கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை நிறைவு

ஈரோடு கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை நிறைவு

ஈரோடு:ஈரோடு பெரியார் நகரில்உள்ள பி.வி., இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ், சத்தி சாலை, கருப்பணன் வீதியில் உள்ள சி.எம்.கே., ப்ராஜெக்ட்ஸ் மற்றும் அதன் உரிமையாளரான குழந்தைசாமியின் வீட்டிலும் சோதனை நடந்தது. தொடர்ந்து, ரகுபதி நாயக்கன்பாளையத்தில் உள்ள ஆர்.பி.பி., கன்ஸ்டிரக்சன் உரிமையாளர் செல்வசுந்தரத்தின் வீடு, படேல் வீதி ஏ.ஏ., பில்டர்ஸ் அண்ட் புரமோட்டர்ஸ் நிறுவனங்களில் கடந்த, 2ம் தேதி முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், வரி ஏய்ப்பு தொடர்பாக, கணக்குகளை ஆய்வு செய்தனர். குழந்தைசாமி வீட்டில், கடந்த 5ம் தேதி நள்ளிரவுடன் சோதனை முடிந்தது. இதேபோல் சி.எம்.கே., ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்தில் நேற்று அதிகாலையுடன், சோதனை முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை