உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு பள்ளிகளில் அறிமுகமாகிறது கணினி அறிவியல், ஏ.ஐ., பாடம்

அரசு பள்ளிகளில் அறிமுகமாகிறது கணினி அறிவியல், ஏ.ஐ., பாடம்

சென்னை: ''அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், அடுத்த ஆண்டு முதல், கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடத்திட்டம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை இயக்குனர் எஸ்.கண்ணப்பன் கூறினார்.சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பொறியியல் துறை, 'பள்ளி கல்வியில் செயற்கை தொழில்நுட்ப பயன்பாடு' என்ற கண்காட்சியை நடத்தியது. இந்த கண்காட்சியில், கண்ணப்பன் பேசியதாவது:அரசு பள்ளிகள், மாநில நிதி உதவி பெறும் பள்ளிகளில், அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்த, கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் தயாராக உள்ளது.இந்த பாடத்திட்ட மாற்றம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் உதவியோடு செய்யப்பட்டு, 15 நாட்களில் முடிவடையும். பள்ளி கல்வியை நவீனப்படுத்த, தமிழக அரசு, 6,029 மேல்நிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் அமைத்து வருகிறது.அரசு உதவி பெறும், 500 பள்ளிகளிலும், மூன்று மாதங்களில், 56 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். 8,000 அரசு நடுநிலைப் பள்ளிகளிலும், 10 கணினிகளுடன் உயர் தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்கள், இம்மாதத்திற்குள் அமைக்கப்பட்டு விடும்.மேலும், 2,291 ஆரம்ப பள்ளிகளில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன. அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் பயன்பாட்டில் பயிற்சி அளிப்பது பெரிய சவாலாகும். இதற்காக, பொறியியல் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள் உதவ முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.அண்ணா பல்கலை பேராசிரியர் அபிராமி முருகப்பன் பேசுகையில், ''பல்கலையின் ஆய்வாளர்களும், ஆசிரியர்களும், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த திறன் மேம்பாடுகளை வழங்க, பல செயல்முறைகளை உருவாக்க உள்ளனர். அவற்றில் சிலர், ஒரு பள்ளியை தேர்ந்தெடுத்து செயல்படுத்தி வருகின்றனர்,'' என்றார்.ராமச்சந்திரா பொறியியல் கல்லுாரி தொழில்நுட்பத் துறை தலைவர் ரகுநாதன், துணை தலைவர் சரவணன், திறன் மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

karpagam
மார் 23, 2025 15:33

Many B.Ed computer science graduates waiting here without job...but you going to train tamil, english, science, maths graduate teacher s to assist students.. Education department peopleIs this smart idea do you think to train them? Dont you know many jobless,lifeless graduates waiting for the computer science posts.some of them already in retirement age,many crossed age 40.. Tn Govt.Are you all from other earth? dont you know your people tears..


Balasubramanyan
மார் 23, 2025 12:14

Sir. Very great announcement. I doubt whether the students are taught properly compute education. They must be taught what is computer and basic knowledge to its working and application. As an Retd educationist I have compared the teaching methods and syllabus for students in India and other ounties. In states digital education in schools is a regular one. The homework,assignment and topic fo study will be posted to students in their id. The have to answer daily and it is correctd by the teacher everyday. Will our teachers do that and are they ready to teach like that. Further students are taught basic python language and its applications.IAS officers as secretaries who hold the position for one or two maximum six months cannot bring revolution. Already many engineering colleges are running without proper trained lecturers and professors.the central govt new education policy also that. You say smart schools,digital education will be setup . Why you put sticker to the central govt education policy. Are you conducting refresh courses and training to the teachers.found the teachers in the states and other countries the teachers are well informed and their skill is scrutinised often. Without proper basic knowledge on English how students in govt schools in cities and villages can understand the recent knowledge and findings. proper infrastructure and stat the recent advancements. Even in digital mode studying students in foreign and our country are not fully exposed to ai technology. Hope the education minister and officials will consider the above and do things properly.


Murugesan
மார் 23, 2025 10:53

தமிழை ஒழுங்காக படிக்க வைக்க அருகதையற்ற திராவிட அயோக்கியனுங்க, கடைந்தெடுத்த கேவலமான அயோக்கியனுங்கள்


அப்பாவி
மார் 23, 2025 10:08

மூணாங்கிளாசில் ஏ.ஐ பாடத்தில் என்னா சொல்லிக்குடுப்பாங்க?


Rajarajan
மார் 23, 2025 08:12

மகிழ்ச்சி. ஆனால், நடைமுறையில் அரசு ஆசிரியர்களை தரம் உயர்த்துவது சாத்தியமே இல்லை. YOU CANNOT TRAIN AN OLD DOG THE NEW TRICKS. ஒருவேளை, அப்படி நடந்தால், உடனே ஆசிரியர் சங்க போராட்டம் வெடிக்கும். இதை வேலை சுமை என்று போராட்டம் நடத்துவர். மேலும், இதற்க்கு கூடுதல் ஆசிரியரை தொகுப்பு ஊதியத்தில் நியமித்தால், முதலில் வேலையில் சேர்ந்துவிட்டு, பின்னர் மூன்றே மாதத்தில் நீதிமன்றம் செல்வர். வேலையே நிரந்தரம் செய், அதிகம் சம்பளம் மற்றும் சலுகை கொடு என்று. கம்மிகளுக்கும், ஜாக்ட்டோ ஜியோவுக்கும் கொண்டாட்டம். கொடிபிடிக்க, கோஷம் போட கூடுதல் பலம் கிடைத்தது என்று. ஆசிரியர் சங்கங்களும், கம்மிகளும் கூடுதல் சந்தா கிடைத்த சந்தோஷத்தில் திளைப்பார். ஆனால், பலன் பூஜ்ஜியம் தான். இதனால் அரசுக்கு தலைவலி மற்றும் கூடுதல் செலவுதான் மிஞ்சும். மேலும் உள்ளூர் முதல் மேலிடம் வரை, கட்சி நிர்வாகிகள் கல்லா கட்டுவர். எனவே, இதை ஒரு குறிப்பிட்ட தரம் வாய்ந்த கல்வி நிறுவனத்திடம் விட்டுவிடுவதே நல்லது. அவர்களிடம் தொகுப்பு தொகையை கொடுத்துவிட்டு, தரத்தை கண்காணித்தால் போதும். மற்றத்தை அவர்கள் பொறுப்பில் விட்டுவிடலாம்.


VENKATASUBRAMANIAN
மார் 23, 2025 08:05

இதைத்தான் பிம்சிரி திட்டம் செய்கின்றது. மேலும் எல்லா செலவுகளும் செய்கிறது. வெட்டி பந்தா ஓட்டு அரசியல் செய்து ஏழை மாணவர்களை படிக்க விடாமல் செய்கிறார்கள். இதுதான் திராவிட மாடல்


Kannan Chandran
மார் 23, 2025 06:56

"அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் பயன்பாட்டில் பயிற்சி அளிப்பது பெரிய சவாலாகும்" - ஆசிரியருக்கே சவால் என்றால் பின்னர் எப்படி, இதுதான் அரசு பள்ளிகளின் லட்சணம்...


Kasimani Baskaran
மார் 23, 2025 05:58

ஏஐ என்பது அறிவை புகுத்தி அதில் இருந்து தகவல்களை பெறுவது. முன்னரே பயிற்றுவித்து இருக்கவேண்டும். முழுவதும் திராவிட விஞ்ஞானம் பயிற்றுவித்து இருந்தால் முதலுக்கே மோசம்... ஆகவே ஜாக்கிரதை.


Srinivasan Krishnamoorthy
மார் 23, 2025 10:50

even in universities and engineering coly, we don't have faculty. who can understand and teach machine learning models and artificial intelligence. please fix basics in the government schools without any hype. ai is not easy, it requires hours of hard work, employees of service sector also not able cope with artificial intelligence growth and emerging requirements


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை