உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காங்., கட்சி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்; தமிழக பொறுப்பாளராக ஜோடகன்கர் நியமனம்

காங்., கட்சி நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்; தமிழக பொறுப்பாளராக ஜோடகன்கர் நியமனம்

புதுடில்லி: தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த அஜோய் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தேர்தல்கள் காங்கிரசுக்கு பெருத்த அடியாகவே இருந்து வருகிறது குறிப்பாக, நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் 3வது முறையாக பூஜ்யம் சீட்டுகளே கிடைத்துள்ளன. இதனால், காங்கிரஸ் கட்சியினர் துவண்டு போயுள்ளனர். மேலும், இண்டி கூட்டணியில் காங்கிரஸூக்கான மவுசும் குறைந்து கொண்டே போயுள்ளது. எனவே, கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பல்வேறு மாநிலங்களில் பொறுப்பார்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சத்துஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹேல் பஞ்சாப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பொறுப்பாளராக சையத் நசீர் ஹூசேன் நியமனம் செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கும் பிஹாருக்கு கிருஷ்ணா அல்லவருவும், ஹரியானாவுக்கு ஹரிபிரசாத்தும், சண்டிகர் மற்றும் ஹிமாச்சலுக்கு ரஜனி பட்டீலும், மத்திய பிரதேசத்திற்கு ஹரீஷ் சவுத்ரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழக காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளராக இருந்த அஜோய் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, கிரிஷ் ஜோடகன்கரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் புதுச்சேரிக்கும் பொறுப்பாளராக செயல்பட உள்ளார். இதேபோல, பல மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R K Raman
பிப் 15, 2025 22:18

இதனால் ஆவது ஒன்றும் இல்லை. தலைவர் ஒரு தலையாட்டி பொம்மை. குடும்பம் வெளியே செல்ல வேண்டும்


Bhaskaran
பிப் 15, 2025 20:50

இங்கே திமுக கொத்தடிமைகளான அழகிரி பெருந்தகை அல்போன்ஸ் போன்ற வர்களிடமிருந்து கட்சியைகாப்பாற்றவேண்டும்


SABA PATHY (LIC SABA)
பிப் 15, 2025 18:24

நிர்வாகிகள் மாற்றம் பிரயோஜனம் இல்லை. காந்தி குடும்பம் வெளியேற வேண்டும்


UTHAYA KUMAR
பிப் 15, 2025 15:37

எந்த புண்ணியமும் இல்லை .. ராகுல் ஐ மட்டும் மாத்தினால் போதும்...


enkeyem
பிப் 15, 2025 14:30

கட்சி நிர்வாகிகளை மாற்றி எந்த பிரயோஜனமும் இல்லை. இத்தாலி மாபியா குடும்பத்தின் பிடியிலிருந்து காங்கிரசை விடுவிக்க வேண்டும். இந்த போலி காந்தி குடும்பத்தை காங்கிரசிலிருந்து விரட்டி அடிக்காமல் காங்கிரஸ் இனி மேல் இந்தியாவில் நீடிப்பது இயலாத ஒன்று


sankaranarayanan
பிப் 15, 2025 13:44

அம்மா பொண்ணு புள்ளையாண்டான் இந்த மூவரும் கட்சியில் ஒதுங்கி நின்றாலே காங்கிரசு வளரும் இம்மூவராலேயே இந்த கட்சி மூலைக்கு தள்ளப்பட்டுவிட்டது


Narasimhan
பிப் 15, 2025 12:24

காங்கிரஸ் மீண்டு எழவேண்டுமென்றால் முதலில் இத்தாலிய அடிமைகளை துரத்த வேண்டும். காங்கிரசில் எண்ணற்ற திறமை வாய்ந்தவர்கள் உள்ளனர். இந்த டூப்ளிகேட் காந்திகளுக்கு துணை போனால் காங்கிரஸ் முற்றிலும் அழிவது உறுதி


c.k.sundar rao
பிப் 15, 2025 10:46

Changes in scamgress should take place from top leaders of the party , dependence on Sonia Manio family should be completely avoided and they should not be given any importance or portfolios.


புதிய வீடியோ