உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாழ்த்துக்கள் டேனியல் பெலிசோ!

வாழ்த்துக்கள் டேனியல் பெலிசோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் 141 பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய பெண் விமானி டேனியல் பெலிசோவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.திருச்சியில் இருந்து சார்ஜாவுக்கு 141 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்பியது. விமானத்தை பெண் விமானி டேனியல் பெலிசோ இயக்கினார். மாலை 5:40 மணிக்கு கிளம்பிய விமானம் நடுவானில் பறந்த போது, ஹைட்ராலிக் பெயிலியர் காரணமாக, தானாக உள்ளே செல்ல வேண்டிய சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், விமானத்தை எமர்ஜென்ஸி லேண்டிங் முறையில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், எரிபொருள் முழுவதும் இருந்ததால் உடனடியாக தரையிறக்க முடியாது. இதுபோன்ற சூழ்நிலைகளில் விமானிகள் பதற்றம் அடைவார்கள். இதனால், பயணிகளுக்கும் அச்சம், குழப்பம் ஏற்பட்டு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடவும் செய்வார்கள்.ஆனால், இதுபோன்ற சூழ்நிலையை தவிர்க்க டேனியல் பெலிசோ, சாதுர்யமாக செயல்பட்டார். விமானத்தில் இருந்த எரிபொருளை காலி செய்வதற்காக விமானத்தை நடுவானிலேயே வட்டமடித்தார். பிறகு, தனது அனுபவத்தை பயன்படுத்தி இரவு 8:15 மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்திலேயே பத்திரமாக எமர்ஜென்ஸி லேண்டிங் முறையில் தரையிறக்கினார். இதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைத்து பயணிகளின் உயிரையும் பாதுகாத்த பெண் விமானி டேனியல் பெலிசோவுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. பயணிகள், உறவினர்கள், சமூக வலைதளவாசிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் பாராட்டு

முதல்வர் ஸ்டாலின் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்தேன். அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மேலும் உதவிகளை வழங்கவும் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன். பத்திரமாக விமானத்தை தரையிறக்கிய விமானி மற்றும் அனைவருக்கும் என் பாராட்டுக்கள். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Ennyesemm
அக் 12, 2024 22:06

துனை முதலமைச்சரை மறக்காதீர்கள்.அவருடைய சீரிய முயற்சியால் இன்று 140 பயனிகள் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது


Mohan Kumar
அக் 12, 2024 16:29

Congratulations


Radhakrishnan Seetharaman
அக் 12, 2024 13:35

அப்படியே துணை விமானி மைதிலி அவர்களைப் பற்றியும் குறிப்பிடவும்.


ஆரூர் ரங்
அக் 12, 2024 07:25

தமிழத்திலிருந்து திருச்சிக்கு பேருந்தை அனுப்பி பயணிகளை மீட்ட விடியலுக்கு உபீஸ்களின் பாராட்டுக்கள். உண்மையான சாதனையாளர்.


murali srinivasan
அக் 12, 2024 05:27

உண்மை.நேற்று கடவுள் நம்மிடம் மிக கருணையாக இருந்துள்ளார். உயிர்பலி இரண்டு இடத்திலும் அனைவரையும் காப்பாற்றி உள்ளார்.


kalyan
அக் 12, 2024 05:06

அண்ணே சங்கரா , சக்கரம் உள்ளே போகல்லேன்னா , விமானம் பறக்க கூடுதல் 2-3 மடங்கு எரிபொருள் தேவைப்படும். பிறகென்ன அரபிக்கடலில் பறக்கும் பொது எரிபொருள் தீர்ந்துவிடும் . சக்கரம் வெளியே இருந்ததால் வட்டமடிக்காமலே இறங்கியிருக்கலாம் அனால் அதுக்கும் ஹைட்ராலிக் சிஸ்டம் செயல்பட்டால்தான் சிறகை விரிக்க, மற்றும் சுருக்கவும், இறங்கின பிறகு சிறகில் உள்ள பலகைகளை விரிக்கவும், விமானத்தை கீழிறக்கவும் பாதுகாப்பாக எரிபொருள் நிரம்பிய விமானத்தை தரையிறக்க முடியும் . வட்டமடித்து எரிபொருளை தீர்த்து விட்டால் ஒரு ரிஸ்க் எடுத்து இந்த சிஸ்டம் இல்லாமலே தரை இறக்க முடியும் . அதைத்தான் அந்த மகராசி செய்திருக்கிறார் . நாம்ம என்னவோ வீட்டில் ஹாய்யா உட்கார்ந்து நம் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எதையாவது எழுதி வைக்க வேண்டியது


Balaji Radhakrishnan
அக் 12, 2024 00:27

Clever pilot, congratulations She made clever decisions.


Narayanan Sa
அக் 11, 2024 23:13

Congrats pelizo


KRISHNAN R
அக் 11, 2024 22:33

வாழ்த்துக்கள் விமானி


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
அக் 11, 2024 22:14

விமானத்தை தரையிறங்க பேருதவி செய்த தமிழக முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் என்ன கைமாறு செய்ய போகிறோமோ என்று பயணிகள் கண்ணீர் மல்க நன்றி கூறினர்..... என்ன நேரு, சேகர் பாபு இப்படி சொல்ல வைக்க மறந்துட்டீங்க போல.....


அரசு
அக் 11, 2024 22:58

இதில் கூடவா அரசியல்?


Ramesh Praveen
அக் 11, 2024 23:28

இதெல்லாம் ரத்தத்திலே ஊறிப்போன ஒருவரால் தான் எழுத முடியும்.. எங்கே அரசியல் செய்ய வேண்டும் என்ற ஒரு சாதாரண விழிப்புணர்வு கூட இல்லை