உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணக்காரர் வீட்டின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங் தலைவர்கள் செல்வர்: அமைச்சரின் பேச்சால் கொந்தளிப்பு

பணக்காரர் வீட்டின் நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங் தலைவர்கள் செல்வர்: அமைச்சரின் பேச்சால் கொந்தளிப்பு

நமது நிருபர்

'பணக்காரர் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் வருவர்' என, தி.மு.க., அமைச்சர் பெரியசாமி பேசியதால், காங்., கட்சியினர் கொந்தளித்துள்ளனர். “ஏழைகளின் மனுக்களை, பாத்ரூமில் வீசியவருக்கு, காங்கிரசாரை குறைசொல்ல தகுதியில்லை,” என, அகில இந்திய காங்., முன்னாள் செய்தி தொடர்பாளர் எஸ்.வி.ரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார் தெற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகி வீராசாமியின் இல்ல திருமண விழாவில், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் பெரியசாமி, காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த விழாவில், அமைச்சர் பெரியசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியதாவது:சாமானியர்களை மதித்து, அவர்களுக்கு அரசியல் அரங்கில் பதவிகள், பொறுப்புகள் வழங்குவதுடன், அவர்கள் குடும்பத்துடன் இணைந்து இருக்கக்கூடிய ஒரே இயக்கம் தி.மு.க., தான். அதை யாரும் மறுக்க முடியாது. இங்கு, காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி இருக்கிறார். காங்கிரசின் பெரிய தலைவர்கள் எல்லாரும் பணக்காரர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வருவர்.ஆனால், தி.மு.க., தான் சாமானியர்களை உயர்த்தி பிடித்து, மதிப்பளிக்கும் கட்சி. பணத்தால், நாம் உயரவில்லை. தி.மு.க.,வால் உயர்ந்துள்ளோம். தமிழக வரலாற்றில் தி.மு.க.,வுக்கு சமமாக, எந்த கட்சியும் வர முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுடன் அவ்வப்போது உரசல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், அமைச்சர் பெரியசாமியின் பேச்சு, காங்கிரசார் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, தமிழக காங்.,கில் ஒரு கோஷ்டி, தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி த.வெ.க., உடன் கூட்டணி வைக்குமாறு கூறிவரும் நிலையில், பெரியசாமிக்கு கண்டனம் எழுந்துள்ளது.அகில இந்திய காங்., முன்னாள் செய்தி தொடர்பாளர் எஸ்.வி.ரமணி கூறியதாவது: காங்கிரஸ் கட்சிக்காக உழைத்து, கோடீஸ்வரராக இருந்தவர்கள், இப்போது லட்சாதிபதி ஆகி விட்டனர். லட்சாதிபதியாக இருந்தவர்கள், இப்போது பிச்சைக்காரர்களாகி விட்டனர். பணக்காரர், ஏழை என்ற பாகுபாடு, எல்லாம் காங்கிரஸ் கட்சியில் ஒருபோதும் இல்லை. கடந்த 1996ம் ஆண்டு அமைச்சராக இருந்த பெரியசாமி, தன்னிடம் ஏழை மக்கள் தந்த மனுக்களை, அவர் தங்கியிருந்த பயணியர் விடுதியில் உள்ள பாத்ரூமில் வீசிச் சென்றுவிட்டார். பத்திரிகைகளில் படத்துடன் அந்த செய்தி வந்தது. அதை பார்த்து நான், 'பாத்ரூம் பெரியசாமி' என, அப்போது அவரை விமர்சித்தேன். உடனே, காங்., மூத்த தலைவரான மறைந்த மூப்பனார், என்னை அழைத்து கண்டித்தார். கூட்டணி கட்சியில் இருக்கும்போது, அப்படி பேசக்கூடாது என என்னிடம் கூறினார்.கூட்டணியில் இருக்கும் காங்., பற்றி இதுபோன்று பேசக்கூடாது என, பெரியசாமிக்கு தெரியவில்லை. காங்கிரசார் மீது குற்றச்சாட்டு கூறி விமர்சிக்க, பெரியசாமிக்கு தகுதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

suresh guptha
அக் 10, 2025 16:23

DMK LEADERSGO TO THE ORIDINARY PERSON HOUSE SUCH AS MARRIAGE ETC AND SPEAK NON ETHICAL ND AMAGAL WORDS AND WHEN THEY GO RICH HOUSES CLOSES ALL AND BLESS THEM SOBETTER DON T GO THE ORIDINARY PEOPLE HOUSE AND INSULT THEM


sundarsvpr
அக் 10, 2025 14:34

அமைச்சர்கள் பேசுவதல்லாம் பேச்சு இல்லை. அவர்களின் ஒழுக்கம் நாணயம் பண்பாடு மக்கள் அறிவர். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர வாய்ப்பு இல்லை. தி மு க எது கொடுத்தாலும் வாங்கி கொள்வது உங்கள் வாடிக்கை. இதில் வக்கணைகளும் அடங்கும்


Raman
அக் 10, 2025 12:11

பரவாயில்ல சார் காங்கிரஸ் என்ன திட்டினாலும் கேட்டுக்குவாங்க. திமுக கூட கூட்டணி கிடைக்குமா.


Sivaram
அக் 10, 2025 11:19

மானமுள்ள மறத்தமிழன் திராவிட மாடல் உடன்பிறப்பு ஆனால் பணம் பதவி வேண்டும் என்றால் , குடும்பத்திற்கு எவ்வளவு தூரம் காவடி தூக்குவான் என்பது நாங்கள் 50 வருடங்களாக பார்க்கிறோம்.


தலைவன்
அக் 10, 2025 11:15

கொஞ்ச நாளா வதந்தி பரப்புறானுவ ?? எப்படியாவது கழகத்தில் இருந்து கையை அகற்றிரலாமான்னு ?? ஆனால் அது வெறும் அல்லக்கை தான்?? திடீர்னு காமராசர் பாசம் ?? ஆனால் உண்மையே அதுதான் என்ற உடன் பிசுபிசுத்து விட்டது ?? அப்புறம் திடீர்னு ?? காங்கிரஸ் நிர்வாகிங்க கழகத்துல ஐக்கியமாயிட்டானுங்கன்னு குதிச்சாங்க ?? இப்போ இந்த முன்னாள் செய்தி தொடர்பாளர் எஸ்.வி.ரமணி....என்கிற ஆள் மூலம் மறுபடியும் . ஆனால் ஒன்று மட்டும் மக்களுக்கு நன்கு தெரியும் ?? அது ஓஹோ அல்லக்கையா ??? எவ்வளவு பெமென்ட் வாங்கினீர்கள்..ஐயா ?? ஜண்டா அஜெண்டா பலிக்காது ??? ஹி ஹி ...


KOVAIKARAN
அக் 10, 2025 10:57

யார் வீட்டு விசேஷங்களுக்கு யார் போனால் என்ன? அதனால் யாருக்கு லாபம் - நஷ்டம்? யாருக்கு நல்லது அல்லது நல்லதில்லை? ஊழல் அரசுகளின் அரசியல்வாதிகள் பிழைப்பிற்காக இந்தமாதிரி பேசுவதை செய்தியாக வெளியிடுவதற்கு பயனுள்ள வேறு நல்ல செய்திகளை வெளியிடலாமே.


V Venkatachalam
அக் 10, 2025 12:01

இவங்க வண்டவாளத்தை மக்கள் தெரிந்து புரிந்து கொள்ள இந்த நியூஸ் தேவைதான். நல்ல செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதில் ஐயமில்லை.


Arjun
அக் 10, 2025 10:28

நீங்கள் எவ்வளவு அவமான படுத்தினாலும் நாங்கள் உங்களைவிட்டு போகபோறது இல்லை, நீங்களும் எங்களை விடபோவதில்லை ஏதோ 3,4சீட்டு கொடுத்தால் போதும் .


Chandru
அக் 10, 2025 12:11

3, 4 or 3/4. Congress wil be ready even for this


aaruthirumalai
அக் 10, 2025 09:49

இப்படியாக இரண்டு பேரும் உண்மையை பேசினால் நன்றாக இருக்கும்.


பேசும் தமிழன்
அக் 10, 2025 08:53

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.... ஏதோ திமுக தயவால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி உயிருடன் இருப்பது போல காட்டி கொண்டு இருக்கிறார்கள்....அவ்வளவு தான்.


SIVA
அக் 10, 2025 08:52

ஆம் திமுக கட்சி விசேஷங்களுக்கு மட்டும் தான் செல்வர்....


முக்கிய வீடியோ