உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியில் பங்கே தொண்டர்கள் விருப்பம் சொல்கிறார் காங்கிரஸ் ராஜேஷ்குமார்

ஆட்சியில் பங்கே தொண்டர்கள் விருப்பம் சொல்கிறார் காங்கிரஸ் ராஜேஷ்குமார்

தேனி: ''ஆட்சியில் பங்கு என்பது, கடைநிலை தொண்டர்களின் விருப்பம்,'' என, தமிழக காங்கிரஸ் சட்டசபை குழுத் தலைவர் ராஜேஷ்குமார் தெரிவித்தார். தேனியில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 30 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பில் இருந்துள்ளது. ஆனால், நீண்ட காலமாக காங்கிரசுக்கு அந்த வாய்ப்பு கிட்டவில்லை. அதனால், ஆட்சியில் பங்கு என்பதை கட்சியின் கடைநிலை தொண்டர்கள், நிர்வாகிகள் பெரிதும் விரும்புகின்றனர். ஒவ்வொரு முறையும், ஆட்சியில் பங்கு விருப்பத்தை ஏற்க மறுக்காததால், கட்சியினர் வரும் தேர்தலில் எப்படியாவது ஆட்சியில் பங்கு என்ற நிலையை அடைய வேண்டும் என்பதில் வெறியாக உள்ளனர். அந்த நிலையை அடைய வேண்டும் என்றால், கட்சியின் தேசிய தலைமை, கூட்டணி கட்சித் தலைமையிடம் அதை வலியுறுத்திச் சொல்ல வேண்டும். கரூரில் நடந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு, காங்., சார்பில் ரூ.1.2 கோடி நிவாரணம் வழங்கி உள்ளோம். அரசியல் கட்சிகள் சார்பில் பிரசார கூட்டம் நடத்தினால், அதற்கு கூடும் பொதுமக்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை அரசு தரப்பில் ஏற்பாடு செய்து தர வேண்டும். விஜயை பார்க்கச் சென்றவர்கள் பெரும்பாலானோர், ஒரு பெரிய நடிகரை பார்க்கச் செல்கிறோம் என்ற ஆர்வத்தில் சென்றவர்கள் தான். அதற்காக யாரையும் குறை சொல்ல முடியாது. நடந்த சம்பவத்தில் அரசியலை கலப்பது ஏற்புடையது அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி