உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழமையை சொல்லும் "வீணோத்சவ்

பழமையை சொல்லும் "வீணோத்சவ்

சென்னை : ''நாட்டின் பழமையை மீண்டும் நினைவுபடுத்தவே, 'வீணோத்சவ்' இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம்,'' என, முத்ரா சபாவின் செயலர் பாஸ்கர் கூறினார். நல்லி சில்க்ஸ் சார்பில், நாரத கான சபாவும், முத்ரா சபாவும் இணைந்து, 'வீணோத்சவ்' எனும் வீணை இசை நிகழ்ச்சிகளை சென்னை தி.நகரில் நடத்தியது. விழாவில், முத்ரா சபாவின் செயலர் பாஸ்கர் கூறியதாவது: வீணை என்பது பழங்கால நரம்பியல் இசைக் கருவி. பழங்காலத்தில், வீணைக்கு என்று தனிச்சிறப்புகள் உண்டு. நவீன வளர்ச்சி காரணமாக, பல இசைக் கருவிகள் வந்து விட்டதால், வீணை இசையின் மகத்துவம் பற்றி மக்களுக்கு தெரியவில்லை.

வீணை பெரிய கருவி என்பதால் யாரும் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதில்லை. மக்கள் மனதில், தொன்மை வாய்ந்த கலாசாரங்கள் அழிந்து வருகின்றன. நாட்டின் பழமையை மீண்டும் நினைவுபடுத்தவே, 'வீணோத்சவ்' இசை நிகழ்ச்சியை நடத்துகிறோம். இவ்வாறு பாஸ்கர் கூறினார். வீணை இசைக் கலைஞர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சியை, முத்ரா சபாவின் செயலர் பாஸ்கர், நாரத கான சபாவின் செயலர் ரவி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ