உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைதிகளுக்கு தின்பண்டம் எடுத்து செல்லும் காவலர்கள் சஸ்பெண்ட் கூடுதல் டி.ஜி.பி., எச்சரிக்கை

கைதிகளுக்கு தின்பண்டம் எடுத்து செல்லும் காவலர்கள் சஸ்பெண்ட் கூடுதல் டி.ஜி.பி., எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை, நவ. 23-'சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு தின்பண்டங்கள் 'சப்ளை' செய்யும் காவலர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் எச்சரித்துஉள்ளார்.தமிழகத்தில், சென்னை புழல் உட்பட, 142 சிறைகள் உள்ளன. இவற்றில், 24,342 கைதிகளை அடைக்க முடியும். தற்போதுள்ள கைதிகளை விசாரணைக்கு ஆஜர்படுத்த, நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லும்போது, அவர்களுக்கு வழிக்காவல் போலீசார் உணவு உள்ளிட்ட பொருட்கள் வாங்கித் தருகின்றனர்; உறவினர்களிடம் பேசவும் வைக்கின்றனர். இது போன்ற உதவிகளுக்கு, கைதிகளின் உறவினர்கள் வாயிலாக ஆயிரக்கணக்கில் வசூல் வேட்டையும் நடத்தி வருகின்றனர். தற்போது, சிறைக்கைதிகளுக்கு காவலர்களே, கடலை மிட்டாய் போன்ற சிறிய வகையிலான தின்பண்டங்களை எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது. தின்பண்டங்கள் என்ற பெயரில் கஞ்சா சாக்லேட் என, போதை வஸ்துக்கள் கடத்தப்படலாம் என்பதால், மாநிலம் முழுதும் உள்ள சிறைகளில் தீவிர சோதனைக்குப் பின்னரே, காவலர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து, சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தவறு செய்யும் காவலர்கள் மற்றும் கைதிகளிடம், மொபைல் போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் இருப்பதை கண்காணிக்க, நுண்ணறிவுப் பிரிவு செயல்படுகிறது. அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது, கைதிகளுக்கு காவலர்களே தின்பண்டங்கள் எடுத்துச் செல்வது தெரிய வந்திருப்பதால், அதுபோன்ற செயலில் ஈடுபடுவோர், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர் என, சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் எச்சரித்துள்ளார். அதற்காக சிறைகளில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
நவ 23, 2024 07:47

கைதிகளை குஷிப்படுத்துறதுல இன்னும் ஒரு லெவல் பாக்கி இருக்கு .........


VENKATASUBRAMANIAN
நவ 23, 2024 07:31

சிறையில் எல்லாமே கிடைக்கும். இது ஊரறிந்த ரகசியம்.


Raja
நவ 23, 2024 06:42

The fear of punishment has been totally vanished from the minds of all government servants from top to bottom. There is proverb in Tamil that if the head is OK the tail cannot swing. This is true in the Dravida Model. Unless the people wakes up nothing will improve.


Mani . V
நவ 23, 2024 05:51

ஆமாம், போதைப்பொருட்கள், செல்போன் எடுத்துச் செல்லலாம்.


அப்பாவி
நவ 23, 2024 03:34

ஆடையில் மறைச்சு எடுத்துட்டுப் போவாங்க. ஏர்போர்ட் மாதிரி சோதனை பண்ணவா முடியும்?


rama adhavan
நவ 23, 2024 07:25

ஏன் முடியாது? திருப்பதி கோவிலில், அக்ஷர்தாம் கோவிலில் செய்வது போல் செய்யலாமே? ஒரே வழி நீதிமன்றத்தில் உள்ளது போல் சி பி ஆர் எப் காவலர்களை பெரிய சிறைகளிலும் அகதி முகாமிகளிலும்மாநில அரசு செலவில் உடன் நியமிக்க வேண்டும்.சுற்றிக்கை எல்லாம் வேலைக்கு ஆகாது. சிறை, போலீஸ் அலுவலகங்களில் ஸ்டாக் பைலில் போட்டு விடுவார்கள்.


முக்கிய வீடியோ