உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சோலார் விளக்கு வாங்கியதில் ரூ.3.72 கோடி ஊழல்; பி.டி.ஓ.,க்கள் மீது வழக்குப்பதிவு

சோலார் விளக்கு வாங்கியதில் ரூ.3.72 கோடி ஊழல்; பி.டி.ஓ.,க்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை : அ.தி.மு.க., ஆட்சியில், புதுக்கோட்டை மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், 'சோலார்' விளக்குகள் வாங்கியதில், 3.72 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, பி.டி.ஓ.,க்கள் உட்பட, 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, கருக்காகுறிச்சியைச் சேர்ந்தவர் முருகானந்தம், 53. இவரது அண்ணன் ரவிச்சந்திரன், 55; தம்பி பழனிவேல், 50. இவர்களில் பழனிவேல், அ.தி.மு.க., மாவட்ட இளைஞர் அணி செயலராக உள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில், 2019 - 2020ல், இம்மாவட்டத்தில் உள்ள மணமேல்குடி, கந்தர்வக்கோட்டை, திருவரங்குளம், அறந்தாங்கி, அரிமளம், கறம்பக்குடி, குன்னாண்டார்கோவில், திருமயம் ஆகிய எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், தெருக்களில் பொருத்த சோலார் மின் விளக்குகள் வாங்கியதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.இதுகுறித்து, சென்னை லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில், அந்த துறையின் டி.எஸ்.பி., மாயவரம்பன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.பழனிவேலுக்கு சொந்தமான நாகா டிரேடர்ஸ் மற்றும் முருகானந்தம் மனைவி காந்திமதி நடத்தி வரும் வீரா ஏஜென்சி, ேஷக் அப்துல்லா நடத்தி வரும் ெஹச்.எஸ்.பி., ஆகிய நிறுவனங்களில் இருந்து, சோலார் விளக்குகள் வாங்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்தது. அதாவது, 30 வாட்ஸ் ஒரு சோலார் விளக்கு, 10,952 ரூபாய்க்கு பதிலாக, 59,900 ரூபாய்க்கு கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. அதன்படி, கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு, காந்திமதி, ேஷக் அப்துல்லா நிறுவனங்களிடம் இருந்து, 72 சோலார் விளக்குகள், 43 லட்சத்து 55,928 ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டுள்ளன. இப்படி, எட்டு ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 799 சோலார் விளக்குகளை, கூடுதல் விலைக்கு வாங்கி, 3.72 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்திருப்பதும், அதற்கு, பி.டி.ஓ.,க்கள் என்ற ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார், பழனிவேல், காந்திமதி, ேஷக் அப்துல்லா மற்றும் பி.டி.ஓ.,க்கள் அறந்தாங்கி சிவகாமி, அரிமளம் ஆயிஷாராணி, கறம்பக்குடி ரவி, திருமயம் சங்கர், கந்தர்வக்கோட்டை அரசமணி, மணமேல்குடி ரவிச்சந்திரன், குன்னாண்டார்கோவில் கலைச்செல்வி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய கண்காணிப்பாளர் அசோகன் என, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Subash BV
டிச 06, 2024 19:16

STANDARD SUITCASES POLITICS. PUNISH THE CONCERNED


Ravi Sankar
டிச 06, 2024 10:47

இது புதுக்கோட்டை மட்டுமல்ல மதுரை டிஸ்ட்ரிக்ட் தேனி விருதுநகர் நடந்துள்ளது


வைகுண்டேஸ்வரன்
டிச 06, 2024 10:30

அதிமுக ஆட்சியின் போது நடந்த ஊழல் என்று தெளிவாக போட்டிருக்கிறார்கள். நேரடியாக எடப்பாடி ப. சாமியை த் திட்டி எழுத இங்கே ஒருவருக்கும் திராணி இல்லையா? தைரியம் இல்லையா? இரண்டு கழகங்கள் அது இது என்று உருளுகிறார்கள் எங்கும் எதிலும் ஊழல் என்று கூவிய அண்ணாமலை இதுக்கு நேரிடையாக விமர்சனம் செய்ய தைரியமோ ஆண்மையோ இருக்கா? ADMK பைல்ஸ் ஒண்ணு தயாரிக்கும் அறிவு இருக்குமா? அல்லது வரும் தேர்தலிலும் அதிமுக என்கிற மண் குதிரை மீது தான் பாஜக ஏறிக்கொண்டு தேர்தல் நதியைக் கடக்க உத்தேசித்திருக்கிறதால், கழட்டி வுட்ருவாரோ ன்னு இ பி எஸ் ஸிடம் பயமா?


Gokul Krishnan
டிச 06, 2024 11:41

எதிர் கட்சியாக இருக்கும் பொழுது சட்டையை கிழித்து கொண்டு வெளியே வந்த ஸ்டாலின் இப்போது கொடநாடு விசயத்தில் அமைதி காப்பது ஏன் அப்போது இருந்த வீரம் இப்போது இல்லையா இல்லை ரெண்டு திருட்டு கழகங்களுக்கு அண்டர்ஸ்டாண்டிங்கா


Gokul Krishnan
டிச 06, 2024 11:45

16 கோடியில் ஆட்டயை போட்டு கட்டின பாலம் மூன்று மாதத்தில் இடிந்து விழுந்தது ஒரு வேலை பாலத்துக்கு கருணாநிதி பெயர் வைத்து இருந்தால் இடிந்து இருக்காதோ


வைகுண்டேஸ்வரன்
டிச 06, 2024 10:26

அதிமுக ஆட்சியின் போது நடந்த ஊழல் என்று தெளிவாக போட்டிருக்கிறார்கள். நேரடியாக எடப்பாடி ப. சாமியை திட்டி எழுத இங்கே ஒருவருக்கும் திராணி இல்லை. தைரியம் இல்லை. இரண்டு கழகங்கள் அது இது என்று உருளுகிறார்கள் ஏன்? இ பி எஸ் ஸை ஏதாவது விமர்சிக்க கூடாது என்று வேண்டுதலா?? வரும் தேர்தலிலும் அதிமுக என்கிற மண் குதிரை மீது தான் பாஜக ஏறிக்கொண்டு தேர்தல் நதியைக் கடக்க உத்தேசித்திருக்கிறதா??


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
டிச 06, 2024 09:42

தங்களது காசை இப்படி வெளிப்படையாகவே அரசியல்வாதிகள் திருடும்போது மக்கள் அமைதியாக இருப்பதை பார்த்தால் எவனும் உப்பு போட்டு சாப்பிடுவதில்லை போல தெரிகிறது. தப்புன்னு தெரிஞ்சுட்டா அவனை பொதுமக்களே சேர்ந்து அடிக்க வேண்டும். அப்போதான் மத்தவனுக்கு தப்பு செய்யும் எண்ணம் வராது. இவனுகளோட உளுத்துப்போன சட்டங்களை வச்சு இனி நாட்டை திருத்த முடியாது. ஏன்னா நீதிமன்றங்களும் ஊழலில் மூழ்க ஆரம்பித்து விட்டன.


Oru Indiyan
டிச 06, 2024 09:23

இந்த இரண்டு கேடு பிடித்த கழகங்களும் ஒழிந்தால் தான் தமிழ்நாட்டுக்கு நிம்மதி.


vadivelu
டிச 06, 2024 09:59

யோக்கியரைகளை விட அயோக்கியர்கள் இரண்டு தி கட்சிகளிலும் அதிகம்.


பாமரன்
டிச 06, 2024 08:28

ஆனாலும் சமத்துவம் சம உரிமை பெண்களுக்கு உரிமை அளிக்கும் வகையில் பெண் பிடிஓகளும் இந்த திருவிழாவில் கலந்து காசு பண்ணியதை பார்க்கும் போது ரெம்ம்ம்ம்ம்ப பெருமையா இருக்கு...


பாமரன்
டிச 06, 2024 08:26

இதையே தான் மேக்ரோ லெவலில் ரஃபேலில் செய்தார்கள்...அதுல சொன்ன மாதிரி இந்த விளக்குகள் முந்தைய மாடல்களை விட பல அம்சங்கள் மேம்படுத்தப்பட்டது பாதுகாப்பு காரணங்களுக்காக அதை சொல்ல முடியாது... சொன்னால் அவை எரியாது கெக்கேபிக்கேன்னு ஒரு காரணத்தை சொன்னால் போச்சு... பகோடாஸும் இவிக நம்மாளுக போலன்னு சைலண்டா ஆகிடும்க...


praveen rajavel
டிச 06, 2024 08:12

BDOs becoming most corrupt nowadays which will affect most common people in villages which should be controlled with iron hand..


Duruvesan
டிச 06, 2024 08:06

மோடி வாய் கிழிய பேசுவதோடு சரி. மோடி 11 வருஷத்தில் தீயமுக அதிமுக ஊழலில் ஒரு துரும்பு கூட கிள்ளள


முக்கிய வீடியோ