உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக்கில் ஊழலை அனுமதிக்கக்கூடாது; உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு

டாஸ்மாக்கில் ஊழலை அனுமதிக்கக்கூடாது; உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு

மதுரை: டாஸ்மாக் முறைகேடு குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விற்பனையாளர்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.இந்த வழக்கில், டாஸ்மாக் துறையில் எந்த ஊழலையும் அனுமதிக்கக்கூடாது. துறை தனது தவறை உணர வேண்டும்,' என்றும் நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். மதுரை மாயகண்ணன், முருகன், ராமசாமி தாக்கல் செய்த மனு: டாஸ்மாக் விற்பனையாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். டாஸ்மாக் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்களில் பேட்டியளித்த குற்றச்சாட்டின் பேரில் எங்களை சஸ்பெண்ட் செய்து டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டார். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பு: மதுரை தெற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளராக பணிபுரிந்து வந்த ராஜேஸ்வரியும், திருமங்கலம் டாஸ்மாக் மேற்பார்வையாளர் செல்வமும் சேர்ந்து டாஸ்மாக் கடைகளில் மாமூல் வசூலித்து வந்தனர். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பப்பட்டது. அந்த புகார் மேல் நடவடிக்கைக்காக டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு அனுப்பப்பட்டது. அதன் பிறகும் நடவடிக்கை எடுக்காததால் ஊடகங்களுக்கு சென்றோம்.அரசு தரப்பு: லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய புகாரை, முதுநிலை மண்டல மேலாளர் விசாரிக்க, டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் அனுப்பினார். அவர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் மனுதாரர்களிடம் விசாரணை நடத்தி முறைகேடு புகார் நிரூபிக்கப்படவில்லை என அறிக்கை அனுப்பியுள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.ஏதோ தவறு இருக்கிறது நீதிபதி: மனுதாரர்கள் மாவட்ட மேலாளராக பணிபுரிந்த ராஜேஸ்வரி, மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோரின் உரையாடல்களையும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்பிய புகாரில் இணைத்துள்ளனர். மனுதாரர்கள் ஊடகங்களுக்கு சென்றது நன்னடத்தை மீறல் தான். அதே நேரத்தில் புகாருக்கு ஆளான ராஜேஸ்வரி, தாய் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். கிடைத்துள்ள ஆவணங்கள் துறையில் ஏதோ தவறு இருப்பதைக் காட்டுகின்றன. சட்டவிரோத மதுவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கும் பொருட்டு அரசால் டாஸ்மாக் நடத்தப்படுகிறது. அந்த துறையில் எந்த ஊழலையும் அனுமதிக்கக்கூடாது. துறை தனது தவறை உணர வேண்டும். மனுதாரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு உரிமை வழங்கி மனுதாரர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

c.mohanraj raj
மே 28, 2025 21:19

சின்ன பையனுக்கு கூட தெரியும் டாஸ்மாக்கில் கடுமையான ஊழல் நடந்துள்ளது ஆனால் இப்பொழுதுதான் என்னமோ நீதிமன்றத்துக்கு தெரிவது போலவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போலவும் இவர்கள் பிதற்றிக் கொண்டு உள்ளார்கள்


Tetra
மே 28, 2025 19:41

ஊழலுக்கு மக்கள் மட்டுமே தடை விதித்து‌ தூக்கி எறிய முடியும். புரிந்தால் சரி


sugumar s
மே 28, 2025 14:44

regrading tasmac issue, even trump or putin may say it is happening. it is world famous. in TN govt has filed 41 cases, what is the status of the cases. they are not resolving the cases and awarding punishment. those cases are filed, only to fool people and any person asking about tasmac issues. so i dont see any wrong in ED getting into this. As a common man I appreciate and sad to know that highest court is not allowing investigation. I dont think indian judiciary is really working fast to arrest issues and bring out cleanliness in such operations.


Subam Projects
மே 28, 2025 14:19

ஆனால் உச்ச நீதி மன்றத்தில் இருப்பவர்களுக்கு ஊழல் தெரியவில்லையே


Ramesh Sargam
மே 28, 2025 12:41

டாஸ்மாக்கில் ஊழலை அனுமதிக்கக்கூடாது. அப்படி என்றல் தமிழக மற்ற துறைகளில் ஊழலுக்கு அனுமதி உண்டா?


Udayasuryan
மே 28, 2025 11:30

டாஸ்மாக் ஊழலை ஒழிக்க முடியாது அத நகமும் சதையும போல அல்லது ரத்துமும் சதையும் போல எனவே தனியார் நடத்தினால் ஊழல்குறையும் தரமான மது கிடைக்கும், தென்னங்கள் பனைகள் இறக்க அனுமதி பெற வேண்டும் சாராய கடைகள் திறக்கபட வேண்டும் அப்போதுதான் ஊழல் குறையும்.


கண்ணன்
மே 28, 2025 10:55

என்ன டாஸ்மாக் துறையின் நற்பெயரா? மயக்கம் வருகிறதே!


மே 28, 2025 10:54

டாஸ்மாக் ஊழலை அனுமதிக்க கூடாதென்றால் வேறு எதில் ஊழல் செய்வது கொள்ளை அடிப்பது என்ற மாற்று ஏற்பாட்டை நீதிபதிகள் கூறவேண்டும் .. அரசியல் வாதிகளில் வயிற்றில் அடிக்காதீர்கள்


rasaa
மே 28, 2025 10:15

"டாஸ்மாக் துறையில் எந்த ஊழலையும் அனுமதிக்கக்கூடாது." அப்படியே எந்தெந்த துறைகளில் அனுமதிக்கலாம் என கூறினால் நன்றாக இருக்கும்


sankaranarayanan
மே 28, 2025 10:00

டாஸ்மாக் ஊழலை புலனாய்வுக்குழு ஒழுங்காக முற்றிலும் ஆரமபத்திலிருந்து விசாரித்தால் மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவரும் பெருந்தலைகள் உருளும் அமைச்சர்கள் பலர் சிக்குவார்கள் மாடல் அரசு மூடல் அரசாக வந்துவிடும் இதுவே போன்றுதான் தலைநகர் தில்லையில் நடந்தது அங்கே ஆட்சியையும் போச்சு ஆட்சியார்களும் நாமதேயமே இல்லாமல் சென்றுவிட்டார்கள்