உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நீதிமன்ற செய்திகள்

 நீதிமன்ற செய்திகள்

சென்னை: சென்னை மயிலாப்பூரில், 'தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து, 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குனர் தேவநாதனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஜாமின் நிபந்தனைகளை நிறைவேற்றாத, தேவநாதனை கைது செய்யும்படி, நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம், போலீசாருக்கு நேற்று உத்தரவிட்டது. கோவி: ல் சொத்து: அறநிலையத்துறை மீது புகார்: சென்னை: கோவில்கள், அறக்கட்டளைகளின் நிதி மற்றும் சொத்துக்கள் குறித்த அரசாணைகள் போன்றவற்றை, பொது மக்கள் அறிந்து கொள்ள, அவற்றை அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடக்கோரி, 'இண்டிக் கலெக்டிவ்' அறக்கட்டளை நிர்வாகி டி.ஆர்.ரமேஷ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் . நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 'கோவில்கள், மடங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான ஒரு லட்சம் ஆவணங்களை, அறநிலையத்துறை இன்னும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவில்லை' என, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, கோவில்கள் தொடர்பாக, அனைத்து விபரங்களையும், தகவல் அறியும் உரிமை சட்ட விதிகள்படி, அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை