முதல்வர் விஜயை சந்தித்த இ.கம்யூ., நிர்வாகிகள்
சென்னை: முதல்வர் விஜயை, சென்னை தலைமை செயலகத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். இ.கம்யூ., தமிழக பொருளாளர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் ராமசாமி, ஏ.ஐ.டி.யூ.சி., தமிழக பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர், முதல்வர் விஜயை, நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். பின், ஆறுமுகம் கூறுகையில், “ஒப்பந்த முறையில், அரசு பணியாளர்களை நியமிக்கும் உத்தரவை ரத்து செய்யவும், கோவையில், ஆனைமலையாறு – நல்லாறு திட்டம், பாண்டியாறு – புன்னம்புழா திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தவும் வலியுறுத்தினோம். நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் விஜய் உறுதியளித்தார். “கடந்த தி.மு.க., ஆட்சியில், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்வதாகவும், விவசாயிகளுக்கு 75,000 ரூபாய் வரை, கடன் தள்ளுபடியையும் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதற்காக, அவருக்கு நன்றி தெரிவித்தோம்,” என்றார்.