வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் பற்றிய செய்தி பயணிகளுக்கு விமானம் பறக்கும் போதே தெரிவிக்க பட்டதா அல்லது தரை இறங்கிய பின்னர் தான் தெரிவிக்க பட்டதா?
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு 67 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முன் பக்கம் உள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. திடீரென கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை விமானி கண்டறிந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zppdxmex&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின்னர் அவர் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். விமானத்தை சென்னையில் தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. ஆபத்தை அறிந்த விமானி விமானத்தை சாதுர்யமாக இயக்கி, சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார்.விமானியின் சாதுர்யமான நடவடிக்கையால் விமானத்தில் பயணித்த 67 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதற்கிடையே, நடுவானில் 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த போது திடீரென முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் பற்றிய செய்தி பயணிகளுக்கு விமானம் பறக்கும் போதே தெரிவிக்க பட்டதா அல்லது தரை இறங்கிய பின்னர் தான் தெரிவிக்க பட்டதா?