உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணம் அனுப்பி புதுவித மோசடி: போலீசார் எச்சரிக்கை

பணம் அனுப்பி புதுவித மோசடி: போலீசார் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சைபர் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:'ஆன்லைன்' வாயிலாக பணமோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள், தற்போது, புதிய உத்தியை கையாண்டு வருகின்றனர். அவர்கள், பொது மக்களுக்கு, 'கூகுள் பே' வாயிலாக, 1,500 - 2,000 ரூபாய் வரை அனுப்புகின்றனர். பிறகு பணம் அனுப்பப்பட்ட நபரை தொடர்பு கொண்டு, நான் மாற்றுத்திறனாளியான குழந்தையை, மருத்துவமனையில் சேர்த்துள்ளேன். உங்களுக்கு தவறுதலாக பணம் அனுப்பி விட்டேன். அந்த பணத்தை நான் கூறும், மொபைல் எண்ணிற்கு அனுப்புங்கள் அல்லது 'கியூ.ஆர்., கோடு' அனுப்புகிறேன். அதை, 'ஸ்கேன்' செய்து அனுப்புங்கள் என்று கூறுகின்றனர்.அவர்களிடம், நான் காவல் நிலையத்தில் பணத்தை ஒப்படைத்து விடுகிறேன். உங்களுக்கு என்னால் அனுப்ப முடியாது என்று கூறி விடுங்கள். இத்தகைய சைபர் குற்றவாளிகள், உங்களின் வங்கி கணக்கு உள்ளிட்ட விபரங்களை திருடி, பணத்தை மோசடி செய்ய முயற்சிக்கின்றனர். இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த மோசடி முயற்சி குறித்து, கட்டணமில்லா, 1930 என்ற எண்ணிலும், www.cybercrime.gov.inஎன்ற இணையதளத்திலும் புகார் அளியுங்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ibrahim Ali A
அக் 30, 2024 12:13

சைபர் க்ரைம் அனுப்பும் தகவல் இருக்கு நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள் மொபைல் போனில் எப்படி பணம் எடுக்க வேண்டும் திருடர்கள் பலவிதமாக போன் மூலமாக திருட்டு நடந்து கொண்டிருக்கிறது ஆகையால் சைபர் க்ரைம் அனுப்பும் தகவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி


அப்பாவி
அக் 29, 2024 10:02

மக்களே... நல்லவங்களா இருங்க. தப்பில்லை ஆனா ஏமாளிகளாக இருக்காதீங்க. உங்க கணக்கில் அப்பிடி யாரும் ஏமாந்து பணம் போட்டுற மாட்டாங்க. அப்பிடி போட்டாலும், அவங்களோட கணக்கு நம்பரை வாங்கி நீங்க பணத்தை திருப்பி போடுங்க. யாரு லிங்க் அனுப்பினாலும், ஓ.டி.பி கேட்டாலும் குடுக்காதீங்க. டிஜிட்டல் புரட்சி பண்ணுறேன்னு மெடல் குத்திக்கிட்டவங்களையும் நம்பாதீங்க.


.Dr.A.Joseph
அக் 28, 2024 17:42

இணைய வலையில் விழுந்த சிலந்தி பூச்சிதான் ஆதார் கார்டு . இழப்பும் நஷ்டமும் நிச்சயம் .


.Dr.A.Joseph
அக் 28, 2024 17:39

பண பரிவர்த்தனைகளை கூடுமானவரை கையில் கொடுங்கள். காகிதமில்லா டிஜிட்டல் பரிவர்த்தனை எப்போதுமே ஆபத்துதான் .சிலர் மொபைல் போனில் பண பரிவர்த்தனை செய்வதை ஆடம்பரமாக எண்ணுகின்றனர் .


Ramesh Sargam
அக் 28, 2024 12:15

நவீன மயமாக்கத்தால் இன்று பிரச்சினைகளே அதிகம் தவிர நன்மை எதுவும் இல்லை.


Ramesh Sundram
அக் 28, 2024 09:09

1930 tolai பேசி பாதி நாட்களுக்கு வேலை செய்வது இல்லை புகார் கொடுத்தாலும் பதில் இல்லை ஒரு நாளைக்கு 200 இக்கும் மேற்பட்ட மோசடி பதிவாகிறது என்று பதில் வருகிறது என்னுடைய நண்பர் வங்கி கணக்கில் 32,000/- திருடி விட்டார்கள் புகார் கொடுத்து ஒரு மாதம் ஆகிறது மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு வங்கியில் இருந்து உங்கள் பணம் ATM மூலமாக திருடப்பட்டது என்று தகவல் மட்டும் தெரிவித்தனர் இப்பொழுது அந்த அக்கௌன்ட் கிளோஸ் செய்து விட்டார்கள் என்று கூறுகின்றனர் ஒரு வங்கி கணக்கு துவங்கும் பொழுது ஆதார் கார்டு பான் கார்டு எல்லாம் பெற்று தானே KYC form வாங்கி கொண்டுதானே கணக்கை துவங்குகின்றனர் இப்பொழுது not traceable அப்படி என்றால் போலி ஆவணங்களை கொடுத்து வங்கி கணக்கு துவக்கலாம் போல


gayathri
அக் 28, 2024 09:06

இது நூறு சதவிகிதம் உண்மை. என் அனுபவம்


RAAJ68
அக் 28, 2024 08:56

டேய் பிராடுகளா எனக்கு யாராவது 50 ஆயிரம் அனுப்புங்கள் கடன் இருக்கு தீபாவளி செலவு இருக்கு புண்ணியமா போகும். திருப்பி கேட்காதீங்க.


raja
அக் 28, 2024 10:17

திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டதிடம் சென்றது ஒன் வே போன்றது கேட்டால் கிடைக்காது உடன் பிறப்பே...


PRABHU D
அக் 28, 2024 08:09

பணம் அனுப்புன மாதிரி ஏமாத்துறவன் போட்டோவே இருக்குது


raja
அக் 28, 2024 10:19

ஏனோ தகுதி உள்ள பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபா அனுப்புகிறவர்கள் ஞாபகம் வருகிறதே...


G Mahalingam
அக் 28, 2024 08:04

போலீசாரே இதற்கு உடந்தை. யாரிடம் முறையிடுவது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை