உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிரபலங்கள் படங்களை வெளியிட்டு மோசடி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

பிரபலங்கள் படங்களை வெளியிட்டு மோசடி: சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' பிரபலங்களின் படங்களுடன் பரபரப்பாக செய்தி வெளியிட்டு முதலீட்டு இணையதளங்கள் மூலம் மோசடி நடக்கிறது,'' என பொது மக்களுக்கு சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விடுத்த எச்சரிக்கை: மோசடி முதலீட்டு சமூக வலைதளங்கள் தொடர்பாக பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிரபலங்கள் பற்றி பரபரப்பான தலைப்புகளுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு மோசடி நடக்கிறது. பங்கு வர்த்தகம், கிரிப்டோகரன்சி தொடர்பாக மோசடி செய்யும் நோக்கில் பதிவுகள் வெளியிடப்படுகின்றன. பிரபலங்களின் படங்களுடன் பரபரப்பான தலைப்பு செய்திகள் போட்டு சமூக வலைதளங்கள் மூலம் மோசடி நடக்கிறது. பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், ராஜ்யசபா எம்.பி., சுதாமூர்த்தி போன்ற பிரபலங்களின் படங்களுடன் பரபரப்பு செய்தி பதிவிடப்படுகிறது. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் படங்களை பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி நடக்கிறது. சந்தேகத்திற்கு இடமான இணைப்புகள் அல்லது லிங்க்குகளை கிளிக் செய்வதை தவிர்க்க வேண்டும். போலி சைபர் கிரைம் தளங்கள் கண்டறிந்து நீக்கப்பட்டு உள்ளன. மோசடி நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டு இருந்தால், இணையதளம் மூலம் புகார் அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ