வாசகர்கள் கருத்துகள் ( 5 )
Despite receiving more than 200 cm rain fall, Bombay is beautifully managed over the past several decades. Concrete roads, water bodies to tap rain fall and so on...unless it pours like 50 cm in a day where it could flood, Bombay is well managed..we have to learn..
மும்பையில் மழை பருவத்தில் பெய்யும் மழை நீரை மிக நேர்த்தியாக, நகரை சுற்றியுள்ள எல்லா குடிநீர் ஏரிகளில் வந்து சேருமாறு கட்டமைப்பு உள்ளது. மழை பருவத்தில் பெய்யும் மழை நீரே அடுத்த மழை பருவம் வரும் வரை, சிக்கனமாக உபயோகித்து வருகிறது மும்பை பெரு நகர மாநகராட்சி. நகர் புறத்தில் உள்ளோர், குடி நீருக்காக அலையும் நிகழ்வுகள் மிக மிக குறைவு. மிக கன மழை பெய்யும் தருணம், சாலைகளில் நீர் தேங்குகிறது. கடல் அலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்க நிகழ்வுகளினால், மழை நீர் வடிவது தாமதம் ஆகிறது. மழை காலம் துவங்குவதற்கு முன்பே, தெருக்கள், சாலைகள் சுத்தம் செய்யப் படுகின்றன. சிறிய வகை பிளாஸ்டிக் மற்றும், இலை, காகித குப்பைகளை, உறிஞ்சு கருவிகள் மூலம், உறிஞ்சி எடுக்கப் படுகிறது. சாலைகளின் ஓரம் அமைக்கப்பட்டுள்ள பில்டர்கள் சுத்தம் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப் படுகிறது. சாலை, மற்றும் தெருக்களில் குவியும், மணல் துகள்கள், உறிஞ்சு குழாய்கள் மூலம் அள்ளப்பட்டு, சுத்தம் செய்யப்படுகிறது. நிற்க. சென்னையை போல, மழை ஆரம்பிக்கும் வரை, வடி கால்கள் அமைக்கப் படுவதில்லை. இங்கும், மழை நீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படுகிறது, புகை படங்கள் எடுத்து, பத்த்ரிக்கைகளில் வருவதற்காக. கால்வாய்களில் இருந்து எடுக்கப்படும் கழிவுகள், சாலையோரம், நாட் கணக்கில் குவிக்கப்பட்டு, புழுதியாக மாறி, மீண்டும், கால்வாய்களுக்கே செல்லும் நிலையை ஏற்படுத்துகின்றனர். ஆனால், மும்பை போன்ற நகரங்களில், மழை நீரை வடி கால்வாய்களில் இருந்து எடுக்கப்படும் கழிவுகள் அப்படியே, லாரி களில் எடுத்து செல்லப்பட்டு வகையில், அமைப்பு கொண்டுள்ள கன்டைனர் காலை பயன் படுத்துகின்றனர். இங்கு, சாலைகள் மற்றும், தெருக்களில்குவியும் மணல் துகள்கள் அள்ள படுகிறது. ஆனால், யாரோ பெருந் தலைவர்கள் அல்லது, அமைச்சர் பெருமக்கள் அந்த வழியாக வருவதாக இருந்தால் மட்டுமே. சுருங்க சொல்லவேண்டும் எனில், சென்னையின் உட் கட்டமைப்பு, இன்னும் தரம் உள்ளதாக அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு வருடமும், மழை காலத்தில் படகு சவாரி, தவிக்க முடியாததாக ஆகி vidum.
மகா பொய். ஒவ்வொரு மழைக்கும் விமான நிலையத்தில்வெள்ளம் வந்து, குறைந்தது 10 விமானங்கள் ரத்து செய்யப்படுவது நாடறிந்த செய்தி. வெள்ளம் எல்லாம் குடிநீர் ஏரிகளுக்குள் வடியுதாம்.
இந்த மழை மிகப்பெரும் ஆபத்தை சென்னைக்கு தர இருக்கிறது. யாரும் இதை உணரவில்லை. நீர்நிலைகளுக்கு அருகில் இருபவர்கள் மிகமோசமான பாதிப்புக்கு உள்ளாவார்கள். அரசாங்கம் எப்படி சமாளிக்கப்போகிறதோ
செய்தி கூறுவது நல்லது. ஆனால் சென்னை பொறுத்தவரை நீர்நிலை விபரங்கள் செய்தியில் கூறவில்லை .