உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்; சென்னையில் தொடரும் அதிர்ச்சி

இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்; சென்னையில் தொடரும் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் கடற்கரைகளில் அடுத்தடுத்து 37 ஆமைகள் உயிரிழந்து கிடந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெம்மேலி குப்பம் கடற்கரையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் 20 ஆமைகள் இறந்து கிடந்தன. அதேபோல, ஈஞ்சம்பாக்கம் கடற்கரை பகுதியில் 8 ஆமைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கடந்த இரு தினங்களுக்கு முன்பும் இதேபோன்று உயிரிழந்த ஆமைகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போதும் கொத்து கொத்தாக ஆமைகள் இறந்திருப்பது விலங்குகள் நல ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெம்மேலிகுப்பம் பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் பணிகளுக்காக கட்டப்பட்டுள்ள தடுப்புகளினால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று வனத்துறையினர் கருதுகின்றனர். இது குறித்து சென்னையைச் சேர்ந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மீனவர்கள் மீன்பிடிக்கப் பயன்படுத்தப்படும் வலைகளில் ஆமைகள் சிக்கி இதுபோன்று உயிரிழந்திருக்கலாம். ஆமைகள் பாதுகாப்பு குறித்து மீனவர்களிடையே வனத்துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்', என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
ஜன 13, 2025 13:57

சைமனின் கவனத்திற்கு .....


sridhar
ஜன 13, 2025 13:11

ஊருக்குள் இருக்கும் ரெண்டு ஆமைகள் எப்போது போகும். பீடைகள் .


Yes your honor
ஜன 13, 2025 13:01

முக்கிய கோவில்களின் யானைகள் அடுத்தடுத்து இறக்கின்றன. கடல்ல ஆமையெல்லாம் செத்துப்போச்சு. ஒருவேளை இந்த அராஜக அரசின் மீது ஆண்டவனுக்கு கூட கோபமோ?


Ganesh
ஜன 13, 2025 11:16

இது தொடர்பான அரசு அதிகாரிகள் சீரியஸ் ஆக கவனிக்க வேண்டும்... இது மனிதர்களால் ஆனால் இது எதனால் பண்ணினர்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும்.... இவுலகில் ஒவொவொரு உயிரினமும் ஒன்றை சார்ந்து உள்ளது.... இது தவறினால் மனிதர்களாகிய நமக்கு தான் கஷ்டம்


தியாகு
ஜன 13, 2025 10:29

கட்டுமர திருட்டு திமுகவின் ஆட்சியில் கடலில் இருக்கும் ஆமைகளுக்கு கூட பாதுகாப்பு இல்ல போல. ஒருவேளை கட்டுமரம் பேனா சிலை கடலில் வைப்பதாக வந்த செய்தியை படித்ததும் மனம் நொந்து ஆமைகள் இறந்திருக்கலாம்.


ஆரூர் ரங்
ஜன 13, 2025 10:21

சீமான் அஞ்சலி செலுத்துவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை