உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏரி ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கை தாமதம்: தலைமை செயலர் மீது தீர்ப்பாயம் அதிருப்தி

ஏரி ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கை தாமதம்: தலைமை செயலர் மீது தீர்ப்பாயம் அதிருப்தி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஏரி ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கை தாமதம் அளித்தது குறித்து தலைமை செயலர் மீது தீர்ப்பாயம் அதிருப்தி தெரிவித்துள்ளது.வேளச்சேரி ஏரி கழிவுநீர் கலப்பதாலும், குப்பை கொட்டப்படுவதாலும் மாசடைந்து வருவது பற்றியும், ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பளவு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், 2020ல் நம் நாளிதழில் செய்தி வெளியானது. இது தொடர்பாக, வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கமும், பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.இதை விசாரித்த தீர்ப்பாயம், 'ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக நீர்வளம், சுற்றுச்சூழல், வருவாய், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் செயலர்கள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தலைவர், மாநகராட்சி கமிஷனர், கலெக்டர் ஆகியோர் அடங்கிய கூட்டத்தை, அரசின் தலைமைச் செயலர் நடத்த வேண்டும். அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:சென்னை ஐ.ஐ.டி., பேராசிரியர் சன்னாசிராஜ் தலைமையிலான குழுவினர், வேளச்சேரி ஏரியில் ஆய்வு நடத்தியதாக, தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். தீர்ப்பாய உத்தரவுகள் செயல்படுத்தப்படவில்லை என்பதையும், அவர் ஒப்புக்கொண்டார்.வேளச்சேரி ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக கூட்டப்பட்ட, அவசர கூட்ட விபரங்கள் அடங்கிய தலைமைச் செயலரின் அறிக்கையை தாக்கல் செய்ய, அரசு வழக்கறிஞர் நான்கு வார கால அவகாசம் கேட்கிறார். அறிக்கை தாக்கல் செய்ய மேலும் ஒரு வாய்ப்பை வழங்குகிறோம்.வழக்கின் அடுத்த விசாரணை தேதியான வரும் ஜூலை 7க்குள் தலைமைச் செயலரின் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லையேல், தீர்ப்பாயம் தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 12, 2025 20:45

தலைமைச் செயலரை புடிச்சு வாங்குங்க .... அவரோட சாரை உட்டுருங்க ..... எய்தவரிருக்க அம்பை நோவதேன் ??


rama adhavan
ஜூன் 12, 2025 12:23

ஆக்கிரமிப்பில் உள்ளோருக்கு ஓட்டுரிமை மறுக்கப் பட வேண்டும்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜூன் 12, 2025 09:51

ஆக்கிரமிப்புக்கள் இல்லையேல் திராவிடம் இல்லை. எல்லோருக்கும் பொதுவான இயற்கை இடங்கள் தங்கள் பினாமிகள் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டு தங்களுக்கு வருமானம் கொட்டும் வழிகளாக மாற்றப்படுகின்றன. அப்புறம் அதை வைத்து மக்களின் ஓட்டை வாங்கி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்து தங்கள் சந்ததிகள் அனைவரும் சுகபோக வாழ்க்கை வாழலாம். மக்கள் எப்படி போனால் எனக்கென்ன? என்பதுதான் திருட்டு திராவிட மாடல்.


ஆரூர் ரங்
ஜூன் 12, 2025 09:45

65 ஆண்டுகளுக்கு முன் வேளச்சேரி ஏரியில் அவ்வளவாக நீர்வரத்து இல்லாத காய்ந்த பகுதிகளில் வீட்டுவசதி வாரிய கட்டிடங்களை கட்ட அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்தனராம். ஆக அரசுதான் முதல் ஆக்கிரமிப்பாளர்.


ஆரூர் ரங்
ஜூன் 12, 2025 09:40

ஆக்கிரமித்த சமூக எதிரிகளின் பெயர், கட்சி போட்டோ, இடம், மதிப்பு போன்ற எல்லாவற்றையும் நடுநிலை ஊடகங்களில் வெளியிட உத்தரவிடவேண்டும். இத்தனையாண்டுகளாக ஆக்கிரமித்த காலத்துக்கான குத்தகை தொகையை அபராதத்துடன் கோர்ட்டில் செலுத்தி இடத்தை காலி செய்து தர தீர்ப்பளிப்பதுதான் நியாயம். ஆனால் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.


GMM
ஜூன் 12, 2025 09:08

ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பளவு குறைந்தாலும், திராவிட வாக்கு அதிகரித்து இருக்கும். ஆகவே ஆக்கிரமிப்பு, நடை பாதை கடைகள், சலுகைகளை நீதிமன்றம் தன் அதிகாரம் கொண்டு நீக்கினால் தான் முடிவுக்கு வரும். அரசியல் வாதிகள் நீக்க மாட்டார்கள்.? சலுகைகள், சட்ட விரோத ஊக்குவிப்பு தான் திராவிட வெற்றி ரகசியம் .


சமீபத்திய செய்தி