உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விதிமீறல் கட்டடங்களை இடித்து தள்ளுங்கள்: மாநகராட்சிகளுக்கு உத்தரவு

விதிமீறல் கட்டடங்களை இடித்து தள்ளுங்கள்: மாநகராட்சிகளுக்கு உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : 'சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு அடிப்படையில், விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும்' என, அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது. கோல்கட்டாவில் ஒரு குறிப்பிட்ட விதிமீறல் கட்டடம் மீது, அங்குள்ள மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில், மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜே.பி.பர்த்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர், ஏப்., 30ல் தீர்ப்பளித்தனர். அதில், 'விதிகளை மீறி கூடுதல் அளவுக்கு கட்டடங்களை கட்டிவிட்டு, அதை வரன்முறை செய்ய வாய்ப்பு கொடுப்பதை, சட்டம் எந்த நிலையிலும் அனுமதிக்காது. எனவே, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தை இடித்து தள்ளியே ஆக வேண்டும். பெரும்பாலான மாநில அரசுகள், கட்டணம் வசூலித்து கொண்டு, விதிகளை மீறிய கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது கவலை அளிப்பதாக உள்ளது' என்று கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக, நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கு, தமிழக நகராட்சி நிர்வாகத் துறை இயக்குனர் எஸ்.சிவராசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், விதிமீறல் கட்டடங்களை இடிப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட தீர்ப்பு நகல் இணைக்கப்பட்டு உள்ளது' என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Murugesh Kumar
மே 23, 2025 00:55

உடனடியாக இந்த தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் .வாழ்க வளமுடன் .வெல்க நீதிமன்றம்.


Murugesh Kumar
மே 23, 2025 00:55

உடனடியாக இந்த தீர்ப்பை அமுல்படுத்த வேண்டும் .வாழ்க வளமுடன் .வெல்க நீதிமன்றம்.


Elango
மே 22, 2025 19:32

தண்டணையாக மொத்த கட்டிடத்தையும் இடிக்க வேண்டும்


CTS Chennai
மே 22, 2025 17:44

What are you doing when building is built. This is unnecessary to demolish building. Seek reason and ask necessary amount for the building. Demolition is not solution.


Shankaran Krishnan
மே 22, 2025 16:54

These So Called buildings were constructed only with the Blessings of the Local Political persons like Ward Councilor, Member, President and Government authorities like Town Planning Engineers, Town Planning Officers, Municipal Commission staff etc If the Government had collected those bribe money into the Government Treasury now all the Municipalities, Panchayats will be self sufficient. What to do and Whom to Blame? System is Totally Corrupt and Polluted.


Shankaran Krishnan
மே 22, 2025 16:29

இந்த விதி மீறி கட்டப்பட்டதாக சொல்லப்படும் எல்லாம் அங்கு உள்ள அரசியல் கட்சி சார்ந்த வார்டு கவுன்சிலர் முதல் மேல் மட்டம் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு கட்டியவை தான் நகராட்சியில் உள்ள அதிகாரிகள் எல்லார்க்கும் இதில் பங்கு உண்டு


rama adhavan
மே 22, 2025 10:39

இதற்கு வெறும் சுற்றரிக்கை கண் துடைப்பு. யாரும் கவலைப்பட மாட்டார்கள். எது எதற்கு எல்லாம் சட்டசபையில் தீர்மானம் இயற்றப் படுகிறது. ஆனால் இந்த முக்கியமான விஷயத்திற்கு தீர்மானம் இல்லை. ஓரு அரசாணையும் இல்லை. கவனித்தீர்களா? துறை தலைவர் கடிதம் பயனற்றது.


Bhaskaran
மே 22, 2025 08:52

நீதிமன்றம் சொன்னால் அப்படியே செய்யனுமா நாங்க பல தலைமுறைக்கு பணம் சேர்க்க வேண்டாமா. அதிகாரிகள் மைண்ட் வாய்ஸ்


GMM
மே 22, 2025 07:52

உச்ச நீதிமன்றம் தீர்வின் / உத்தரவு அடிப்படையில் அமுல் படுத்த முடியும் என்ற நிர்வாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதன் நகலை அப்படியே அனுப்ப கூடாது? அது வக்கீல் வாத அடிப்படையில் தீர்வு. சட்ட, நிர்வாக விதிக்கும் மாற்ற வேண்டும். விதி மீறிய கட்டடங்கள் வரைமுறை படுத்த கட்டணம் வசூலிக்கப்பட்டு இருக்கும். அதனை திரும்ப தர வேண்டும். வரன்முறை படுத்த அனுமதித்த அதிகாரிகள் இழப்பை ஈடு அவர் சொத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை