உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னைக்கு 450 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை

சென்னைக்கு 450 கிமீ தூரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்; 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y2dp29us&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு 450 கி.மீ., கிழக்கில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடகிழக்கு திசையில் நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர கூடும். இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று வீச வாய்ப்பு உள்ளதால், இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புயல் எச்சரிக்கை

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடியில் 1ம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAAJ68
டிச 21, 2024 15:01

இந்த வானிலை அறிக்கையை நம்பி எந்த வேலையும் செய்ய முடியவில்லை. கடந்த 17ஆம் தேதி அன்று சென்னையில் பலத்த மழை பெய்யும் என்று ஆரஞ்சு கலர் அலர்ட் கொடுத்தனர் ஆனால் அந்த அளவுக்கு மழை பெய்யவில்லை எனவே எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன் பெய்த பலத்த மழையினால் பல வீடுகளில் தண்ணீருடன் கழிவு நீர் கலந்து தரைமட்ட தொட்டி நிரம்பியுள்ளது அதை வெளியேற்றாமல் அப்படியே வைத்துள்ளனர் ஏனென்றால் மறுபடியும் பலத்த மழை பெய்தால் தண்ணீர் இறைத்தது வீணாகிவிடும் மறுபடியும் சுத்தம் செய்ய வேண்டும் என்று அப்படியே விட்டு உள்ளோம். இப்போது மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது என்ற செய்தி வந்துள்ளது. ஆனால் சென்னையில் சாதாரண மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறி இருந்தாலும் ஒரு நிச்சயமற்ற செய்தியாகத்தான் பார்க்க முடிகிறது. திடீரென்று ஆரஞ்சு அலெர்ட் கொடுப்பார்கள். இதுபோன்ற ஒரு நிச்சயமற்ற வானிலை அறிக்கை கடந்த காலங்களில் சில மாதங்களாக நிலவி வருகிறது. அந்த காலங்களில் அதாவது 1960 களில் எந்த உபகரணமும் கிடையாது தொலைக்காட்சிகள் கிடையாது கைப்பேசிகள் கிடையாது வானொலி செய்தியை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தோம் அப்போது புயல் வரும் தேதி மழை பெய்யும் நேரம் எல்லாவற்றையும் சரியாக கனித்து கூடறியிருந்தார்கள் இரவு விடிய விடிய மழை பெய்யும் . வானொலி ஒரு மணிக்கு ஒரு முறை புயல் நிலவரத்தை கூறிக் கொண்டே இருக்கும். இப்போது என்னவென்றால் உபகரணங்கள் இல்லை கணிக்க முடியவில்லை என்று கூறுகிறது வானிலை அறிவிப்பு நிலையம்.


MARI KUMAR
டிச 21, 2024 13:57

காற்றழுத்த தாழ்வுக்கு வேற வேலையே கிடையாதா? அடிக்கடி வருகிறது


புதிய வீடியோ