உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையேறி திரும்பிய பெங்களூருவை சேர்ந்த பக்தர் சிவா, 40, மூன்றாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.கோவை, வெள்ளியங்கிரி மலை, அடிவாரம் பூண்டியிலிருந்து, ஐந்தரை கி.மீ., மலையேறி சென்றால், சிவபெருமானை தரிசிக்கலாம். இம்மலைக் கோவிலுக்கு செல்ல, ஏழு மலைகளை கடந்து நடந்தே செல்ல வேண்டும். மலையின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் விரும்புகிறார்கள். பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அந்த வகையில், வெள்ளியங்கிரி மலையேறி திரும்பிய பெங்களூருவை சேர்ந்த பக்தர் சிவா, 40, என்பவர், மூன்றாவது மலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அடிவாரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டோலி மூலம் அடிவாரத்திற்கு சிவா அழைத்துவரப்பட்டார். அங்கு வந்த 108 மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்துவிட்டு, பக்தர் சிவா உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
மார் 25, 2025 20:17

அரசு நினைத்தால் rope car வசதி செய்துகொடுக்கலாம். ஆனால் இந்த கேடுகெட்ட திமுக அரசு செய்யவே செய்யாது. ஆனால் கோவில் வருமானங்களை முழுவதும் திருடிக்கொள்ளும்.


Rajathi Rajan
மார் 25, 2025 14:03

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு வருடம் வருடம் அதிகரித்து கொண்டே போகிறது. அதனால் அங்கு பக்தர்கள் சாவை தேடி செல்வதை தடை செய்ய வேண்டும், ஏன் அந்த சாமீ நம்ம ஊரில் இல்லையா?


முக்கிய வீடியோ