உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மெகா ஊழல்: பட்டியல் வெளியிட்டார் அமித்ஷா

மெகா ஊழல்: பட்டியல் வெளியிட்டார் அமித்ஷா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., தலைமையில் கூட்டணி செயல்படும், அக்கட்சியின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம். இ.பி.எஸ்., எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

இயல்பான கூட்டணி

சென்னையில் நிருபர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமித்ஷா அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: அ.தி.மு.க., பா.ஜ., இணைந்து ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் இ.பி.எஸ்., தலைமையில் கூட்டணி செயல்படும். கூட்டணிக்கு அ.தி.மு.க., எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இது இயல்பான இயற்கையான கூட்டணி. அ.தி.மு.க.,வின் தனிப்பட்ட பிரச்னைகளில் தலையிடப் போவது இல்லை. தேர்தல் விஷயங்கள் குறித்து இ.பி.எஸ்., தலைமையில் அமர்ந்து பேசி திட்டமிடுவோம். கூட்டணி அமைவது, இருவருக்கும் பலனளிக்கக் கூடியது. யார் யாருக்கு எத்தனை தொகுதி குறித்து பிறகு முடிவு செய்வோம்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6tnkeiui&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மெகா ஊழல்

ஊழல், மோசடி உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே மும்மொழி, தொகுதி மறுவரையறை, சனாதன பிரச்னைகளை தி.மு.க., எழுப்புகிறது.வரும் தேர்தலில், தி.மு.க.,வின் மோசடி, ஊழல், சட்டம் ஒழுங்கு, தலித்கள் மீதான தாக்குதல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை பேசுபொருள் ஆக இருக்கும்.டாஸ்மாக்கில் ரூ.39,775 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளது. மணல் கொள்ளை மூலம் 5 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடக்கிறது. மின்சாரம், நிலக்கரியில் ரூ.4 ஆயிரம் கோடி மோசடியும், எல்காட் நிறுவனத்தில் அரசு பங்கு விற்பனை மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாயும், போக்குவரத்து துறையில் 2 ஆயிரம் கோடி ரூபாயும், பண மோசடி மூலம் ஆயிரம் கோடிக்கு மேலும் தமிழகத்தில் ஊழல் நடக்கிறது. ஊட்டச்சத்துக்கு சாதனம் வாங்குவதில் ரூ.450 கோடி, செம்மண் கடத்தல், அரசு வேலைக்கு பணம், ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊழல் என பல மோசடி நடக்கிறது. இதற்கு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் பதில் சொல்ல வேண்டும்.

மக்கள் பிரச்னை

மக்களின் கவனத்தை திசை திருப்பவே நீட் தேர்வு, தொகுதி மறுவரையறை பிரச்னைகளை தி.மு.க., பயன்படுத்துகிறது. நீட் உள்ளிட்ட விவகாரத்தில் அ.தி.மு.க., உடன் பேச்சுவார்த்தை நடத்தி பொது செயல்திட்டம் உருவாக்கப்படும். தமிழக மக்களை சந்திக்கும்போது, அவர்கள் உண்மையாக சந்திக்கும் பிரச்னையை எடுத்து செல்வோம். மக்கள் பிரச்னையை முன்னிறுத்துவோம். தி.மு.க.,வை போன்று மடைமாற்றும் திட்டத்தில் ஈடுபட மாட்டோம். மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவோம்.

தமிழ்பெருமை

இ.பி.எஸ்., தலைமையில் தான் கூட்டணி செயல்படும். தமிழ் மக்களையும், மாநிலத்தையும் கவுரவமாகவே கருதுகிறோம். தமிழகத்தை எப்போதும் பிரச்னைக்கு உரியதாக கருதியது இல்லை. மோடி, தமிழகம், தமிழ் கலாசாரத்தை மதித்து பார்லிமென்டில் செங்கோலை நிறுவினார். ஆனால், அதனை தி.மு.க., எதிர்த்தது. மோடி தான் தமிழின் பெருமையை போற்ற காசி தமிழ்சங்கமம், சவுராஷ்டிரா தமிழ் சங்கமத்தை நடத்தினார். தமிழகத்தில் புகழ்பெற்ற பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டை கேலோ விளையாட்டில் இணைத்தார்.தமிழகத்தில் தமிழ் மொழியை வளர்க்கும் ஒரே நிறுவனம் செம்மொழி தமிழாய்வு நிறுவனம். மத்திய அரசின் இந்த நிறுவனத்தை உருவாக்கியவர் பிரதமர். ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் ஆராய்ச்சி இருக்கை உருவாக்கப்பட்டு உள்ளது. திருக்குறளை உலகின் பல்வேறு நாட்டின் மொழிகளில் மொழி பெயர்த்து வருகிறோம். இதுவரை 63 மொழிகளில் மொழிபெயர்த்து உள்ளோம். பாரதியின் படைப்புகளை புத்தகமாக வெளியிட்டவர் பிரதமர். சிவில் சர்வீஸ் தேர்வுகள் தமிழில் எழுத முடிகிறது. ஆனால், மத்தியில் தி.மு.க., கூட்டணி ஆட்சியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தாய் மொழியில் கல்வி

மத்திய ஆயுத காவல்படை தேர்விலும் இந்த நிலை இருந்தது. தற்போது தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் எழுத முடிகிறது. தி.மு.க., கூட்டணி ஆட்சியில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் எழுத முடிந்தது. எங்கு எல்லாம் தே.ஜ., கூட்டணி ஆட்சியில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகள் தாய்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு மாணவர்கள் படிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலினிடம், இந்த படிப்புக்கான தமிழ் பாடங்களை உருவாக்க வேண்டும் என கூறியும், அது நடக்கவில்லை.

முடியுமா

தி.மு.க., இதுவரை தமிழ் தமிழ் என சொல்கிறார்கள். ஆனால், தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என மக்களிடம் பட்டியலிட முடியுமா? நீண்ட வலுவான உறுதியான கூட்டணி அமைப்பதற்காக தான் கூட்டணி அமைப்பது கால தாமதமானது.தமிழக மக்கள் ஏதும் அறியாதவர்களா? காங்கிரசின் நிலைப்பாடு என்ன எதை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள் என்பதை அறிந்தவர்களாக தமிழக மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

தேநீர் விருந்து

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியான நிலையில், தனது வீட்டில் இ.பி.எஸ்., தேநீர் விருந்து அளித்தார்.இதில், அமித்ஷா, நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, கரு.நாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க., சார்பில் வேலுமணி, கே.பி.முனுசாமி மற்றும் உதயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 88 )

ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 14, 2025 01:09

நைனாரும், குட்டி நைனாரும் சேர்ந்து சென்னை ஆற்காடு ரோட்டில் உள்ளார் 160 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆட்டையை போட்டது, நைனாரின் அல்லக்கைகளிடம் இருந்து நாலு கோடி பணம் தேர்தல் நேரத்தில் பிடிபட்டது, அப்புறம் ஆடீம்காவின் ஆயாம்மா ஏ1, தியாகி சதிகலா ஏ2 சேர்ந்து கொள்ளை அடித்த சில பல லட்சம் கோடி பணம் மற்றும் சொத்துக்கள், ஏ1 வாரிசான வாரிசான, தற்போது தேர்தல் ஆணையத்துக்கு பத்து கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு முதல், சில ஆயிரம் கோடி வெளிநாட்டு பண முதலீடு முறைகேடு என்று உச்சி வரை வழக்குகளில் சிக்கியிருக்கும் டிடிவி தினகரனின் ஊழல் பற்றி கொஞ்சம். பலகொல்லைக்கழக பலகொல்லைக்கழக அதிபர் பச்சைமுத்துவின் பல ஆயிரம் கோடி மருத்துவ கல்லூரி பணவசூல் முறைகேடு பற்றி கொஞ்சம்... இதையெல்லாம் பற்றி அதிரடியாக பேசுங்க மந்திரி அவர்களே..


பல்லவி
ஏப் 13, 2025 07:13

மடியில் லட்சம் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்த கட்சி, 100 ரூபாய் லஞ்சமாக பெற்ற பணத்தின் மீது வழக்கு பதிய வேண்டும் என்று .....


xyzabc
ஏப் 12, 2025 13:17

தமிழா, பொன்முடி போல பேசுகிறாய். நல்ல காலம் வருது.


Ganesan
ஏப் 12, 2025 13:12

அஜித் பவார் மீது 70000 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன, பாஜக கடந்த முறை அதிமுக மீது பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது. ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைத்து ஊழல் ஒழிக்கப்படும் அது ஒரு நகைச்சுவை. தர்க்கரீதியான பகுத்தறிவு உள்ளவர்கள் கூட இதை இங்கே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.


தஞ்சை மன்னர்
ஏப் 12, 2025 12:39

கவலைப்படதிர்கள் குஜராத் திருட்டு கும்பலே நீங்கள் செய்து இருக்கும் மெகா ஊழல் பட்டியல் ரெடியாக இருக்கு ஐம்பது வருடம் நாங்க தான் ஆட்சி அமைப்போம் என்று நீங்கள் கூறிவிட்டு நீங்கள் அடிக்கும் பணம் எந்த எந்த நாட்டில் எந்த குஜராத்தி நிறுவன பெயரில் ஒளித்து வைக்கப்படுகிறது என்ற தகவலும் சேகரிக்கப்பட்டு விட்டது உங்களின் ஆட்சி அதிகாரம் ஓயும் போது அது வந்து நீக்கும் நுறு வருடம் கலிதீங்க போகுது உங்க கும்பல் அது மட்டும் நிச்சியம்


sivakumar Thappali Krishnamoorthy
ஏப் 12, 2025 11:32

சந்தர்ப்பவாத கூட்டணி . தோல்வியில் முடியும்... அதிகாரம் இல்லாத கவர்னர் பதவி.. பிஜேபி ஆட்சிக்கு அவமானம்.. தமிழக தமிழ் குடி மக்கள் சிந்தித்து செயல் பட வேண்டும்.


Nagarajan D
ஏப் 12, 2025 10:33

ஒன்றுக்குமே உபயோகமில்லாத விஷயம் எப்படியும் நீதிமன்றங்கள் வாய்தா கொடுத்தோ ஜாமீன் கொடுத்தோ இந்த வழக்கை மக்கள் மறக்கடிக்க போறானுங்க. எத்தனை ஊழல் வழக்கில் எத்தனை குற்றவாளிகள் சிறையில் இருக்கிறார்கள்... விளங்காத நீதிமன்றங்கள்


Mecca Shivan
ஏப் 12, 2025 10:06

உதயநிதியை மதித்து பேசி பெரிய ஆளாக்குவதை நிறுத்தவேண்டும் ..


pmsamy
ஏப் 12, 2025 09:52

பாஜகவின் ஊழல் பட்டியலையும் அமிச்சா வெளியிட்டால் சிறப்பு


Indian
ஏப் 12, 2025 08:57

ஊழல் கட்சியோடு கூட்டணி வைத்துவிட்டு , ஊழல் பற்றி பேசுகிறார்


புதிய வீடியோ