உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அதானியை சந்திக்கவில்லை: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அதானியை சந்திக்கவில்லை: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: 'என்னை வந்து அதானி சந்திக்கவும் இல்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.தமிழகத்தில் அதானி குழும முதலீடு தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அவர் அப்போது பேசியதாவது: அதானி முதலீடு குறித்து பொதுவெளியில் வரும் தகவல் குறித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே தெளிவான விளக்கம் அளித்துள்ளார். அதற்கு பிறகும், இது பற்றி செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதானி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பார்லிமென்டில் இண்டியா கூட்டணி கட்சி எம்.பிக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vpz5045s&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பா.ஜ., பா.ம.க., தயாரா?

தி.மு.க., மீது குறை சொல்லி கொண்டு இருக்கும் பா.ஜ.,வோ, பா.ம.க.,வோ, பார்லிமென்டில் இந்த கோரிக்கை ஆதரிக்க தயாராக இருக்கிறதா? இந்த கேள்வியை மட்டும் நான் கேட்க விரும்புகிறேன். இப்போதும் சொல்கிறேன். தமிழகத்திற்கும் அதானிக்கும் எந்த வித சம்மந்தமும் கிடையாது. என்னை வந்து அவர் சந்திக்கவும் இல்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை. இதை விட வேற விளக்கம் தேவையா ?

விசாரணை குழு

ஏற்கனவே இதை நான் பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன். நான் கேட்கிற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். இது குறித்து பார்லிமென்டில் இன்னைக்கு இருக்கும் எதிர்க்கட்சிகள் எல்லாம், ஆளும் பி.ஜே.பி., ஆட்சியை பார்த்து, விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கொண்டு இருக்கிறார்கள். இதனை ஆதரித்து பேச நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? இதுதான் நாங்கள் எதிர்பார்ப்பது ஆகும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

பா.ம.க., வெளிநடப்பு

சட்டசபையில், அதானி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் திருப்திகரமாக இல்லை எனக் கூறி, பா.ம.க.,வினர் வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 62 )

Venkatesan Srinivasan
டிச 12, 2024 01:05

பாமக ஜிகே மணி கேட்ட கேள்வி அதானி விவகாரத்தில் தமிழக நிலைப்பாடு என்ன? அதற்கு அவரை பார்க்கவும் இல்லை சந்திக்கவும் இல்லை என குழப்புவது ஏன்? தற்போதைய தொழில்நுட்ப விஞ்ஞான வளர்ச்சியில் ஏதேனும் ஒரு துருப்பு சீட்டு எங்காவது கிடைக்கும். அதானி தமிழகம் வந்து இன்னாரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. பார்லிமென்ட் வளாகத்தில் சில குறிப்பிட்ட தமிழக உறுப்பினர்கள் "இண்டி" கூட்டணி ஊர்வலத்தை தவிர்த்ததாக செய்தி. ஆனால் ஒரு ட்விஸ்ட் அதானியால் தமிழகத்தில் ஊழல் இல்லை என்று பிரமாண வாக்குமூலம் தமிழக ஆட்சியாளர்கள் கொடுத்தாலும் ஆச்சரியம் இல்லை. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.


Ramesh
டிச 11, 2024 08:27

இவர் அதானியை சந்திக்கவில்லை. அவர் தான் இவரை சந்தித்தார். அல்லது சபரீசன் இவர் சார்பாக அதானியை சந்தித்தார்.


அப்பாவி
டிச 11, 2024 07:36

அஸ்வத்தாமா ஹதஹ... சின்ன வாய்சில் குஞ்சரஹ... ஃப்ராடு டெக்னிகெல்லாம் அந்தக் காலத்திலிருந்தே இந்தியாவில் நடைமுறையில் இருக்கு. கர்மாந்தர பூமியாச்சே.


Arumugam
டிச 10, 2024 21:52

அதானி. பெயரே... கேள்வி பட்டது இல்லை


venugopal s
டிச 10, 2024 21:28

மோடி பக்தர்கள் அவர் பேச்சை குருட்டுத்தனமாக நம்புவதில் தவறில்லை. ஆனால் ஒரு மாநில முதல்வர் பேசுவதை மற்றவர்கள் நம்புவது மட்டும் தவறு. அவ்வளவு தான், பஞ்சாயத்து முடிஞ்சது கிளம்பு,கிளம்பு!


Ramesh Sargam
டிச 10, 2024 19:39

"அதானி என்னை சந்திக்கவும் இல்லை நான் அவரை பார்க்கவும் இல்லை" - முதலமைச்சர் விளக்கம் அந்த ஆணி எந்த கடைல கிடைக்கும்…???


Kasimani Baskaran
டிச 10, 2024 19:17

அமெரிக்க நீதித்துறை தமிழக அரசு நிர்வாகம் மீதுதான் குற்றம் சுமத்தியது. ஆகவே தமிழக அரசு அமெரிக்க நீதித்துறைக்கு பதில் சொல்வதுதான் முறை. அதை செய்யவில்லை. குறைந்தபட்சம் நாங்கள் லஞ்சஒழிப்புத்துறை மூலம் விசாரித்தோம். தவறு ஒன்றும் நடக்கவில்லை என்று சட்டசபையில் சொல்லி இருக்க வேண்டும். இரண்டும் செய்யாமல் நான் அதானியை சந்திக்கவேயில்லை என்று சொல்லி தொழிலதிபர் அதானி ஒரு குற்றவாளி என்று சொல்வது போல சொல்லி, கூடுதலாக தமிழக அரசும் கூட லஞ்சம் வாங்கியிருப்பதை மறைமுகமாக ஒத்துக்கொண்டது போல ஆகிவிட்டது. மகா திராவிட சொதப்பல் ஒன்று நடந்தேறியிருக்கிறது. இது பற்றி உடன்பிறப்புக்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிய அதிக ஆவலாக இருக்கிறேன்.


J.V. Iyer
டிச 10, 2024 19:00

இதெல்லாம் முதல்வருக்கு எப்படித்தெரியும். அவர் மாப்பிள்ளையை விசாரிக்கவும். ஒரு அமைச்சர் தினமும் வந்து தமிழகத்தில் மாதம் மும்மாரி பொழிகிறது என்று சொல்லுவார். பிறகு சாலையில் ஒருவர் உங்கள் ஆட்சி பொற்கால ஆட்சி என்று முதல்வரிடம் சொல்லிவிட்டு கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு மாயமாகிவிடுவார். தமிழகமக்களும், இந்த மாடல் ஆட்சியில் பாலும் தேனும் தெருக்களில் ஓடுகிறது என்று நம்புகிறார்கள். இருநூறு ரூவாய் செய்யும் மயம்தான் என்ன மீண்டும் மீண்டும் இவர்களுக்கு ஓட்டுப்போடும் தமிழகமக்கள் எல்லாம் தெரிந்தவர்கள். முதல்வர் உத்தமர்.


M Ramachandran
டிச 10, 2024 18:08

நான் ஆதனியை அரசு முறையாகா சந்திக்க வில்லை.


selvan thennavan
டிச 10, 2024 17:33

இதுக்கு எதுக்குப்பா இவ்வளவு சிரமப்படுறீங்க? நம்ம மோடிஜியை கேட்டால் அவர் நண்பர் சந்தித்தாரா இல்லையா என்று சொல்லிவிட மாட்டாரா? ஆமாம் பார்லியில் இந்தியா கூட்டணி கொண்டு வரும் தீர்மானத்திற்கு போராட்டத்திற்கு நம்ம பாமக பாஜக ஆதரவு தருமா?


Dharmavaan
டிச 10, 2024 21:22

மூடர்களை பிஜேபி ஆதரிக்காது


புதிய வீடியோ