உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் மீது டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு; விசாரணைக்கு ஐகோர்ட் தடை

சீமான் மீது டி.ஐ.ஜி. வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு; விசாரணைக்கு ஐகோர்ட் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை; சீமான் மீது டி.ஐ.ஜி., வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு மதுரை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூண்டுதல் பேரில் அவரது கட்சியினர் தம் மீதும், தம் குடும்பத்தினருக்கு எதிராகவும் சமூக வலை தளங்களில் அவதூறு கருத்துகள் பதிவிட்டு வந்தனர் என்பது திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் குற்றச்சாட்டு ஆகும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ojkz9br3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக, சீமானுக்கு எதிராக வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கு திருச்சி 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இந்த வழக்கில் கோர்ட்டில் சீமான் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.அதே சமயத்தில் சீமான் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டில் நாம் தமிழர் தரப்பில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம், சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.அடுத்தக்கட்ட விசாரணை ஆக.4ம் தேதி நடைபெறும் என்று கூறி வழக்கை நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

என்றும் இந்தியன்
ஜூலை 02, 2025 17:46

திருச்சி டி.ஐ.ஜி. வருண்குமார் பாவம் அவர் என்ன செய்யமுடியும், மேலிடத்து உத்தரவு அந்த மாதிரி வழக்கு போடு என்று, அவர் உத்தியோக விசுவாசி ஆகவே இப்படி செய்து விட்டார். திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசில் போலீஸ் துறை பெயர் திராவிட ஏவல் துறை என்று பெயர் /பணி மாற்றம் செய்யப்பட்டது தான் எல்லோருக்கும் தெள்ளத்தெளிவாகத்தெரியுமே


Palanisamy Sekar
ஜூலை 02, 2025 15:36

உயர் அதிகாரிகள் இப்படி தெருச்சண்டை போல போடுவது போலீஸ் துறைக்கே அவமானம் அசிங்கம். முடியுமானால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஏதாவது அரசியல் கட்சியில் சேர்ந்துகொண்டு இப்படி செய்தால் அது அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பில் அடங்கிவிடும். அதனைவிடுத்து பதவியை துஷ்பிரயோகம் செய்வது போல செயல்படுவது சகிக்கவில்லை. எப்படி இருந்த போலீஸ் துறையானது இப்போ சிக்கி நார் நாராக கிழிந்து பேப்பரிப்பே என்று தெருமுனை குழாயடி சண்டையை போல போடுவதை இந்த முதல்வர் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆட்சி மாற்றம் காணும்போது இதே வருண்குமார் காத்திருப்போர் பட்டியலுக்கு கடாசிவிடுவார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு படிப்புக்கு ஏற்ப பதவியை கொண்டு சட்டம் ஒழுங்கை கண்காணிக்கட்டும்.


SUBBU,MADURAI
ஜூலை 02, 2025 14:00

இவனுகளுக்கும் வேற வேலையில்ல கோர்ட்டுக்கும் வேற வேலையில்ல...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை